செய்திகள் :

Fastag: 72 மணி நேரத்திற்குள் 'இந்த' தொகையை கட்டவில்லையா? இரண்டு மடங்கு அபராதம் - புதிய செக்

post image

தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

டோல் கேட்டில் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், உங்கள் ஃபாஸ்ட் டேகில் போதிய பேலன்ஸ் இல்லை... அல்லது பேலன்ஸே இல்லை.

இதனால், உங்களுக்கு ஒரு பிரச்னையும் ஏற்படாது. தாராளமாக அந்த டோல் கேட்டைக் கடந்து கொள்ளலாம்.

நீங்கள் இங்கே கட்டாமல் சென்ற தொகையின் பெயர், 'Unpaid User Fee'.

நெடுஞ்சாலை
நெடுஞ்சாலை

ஆனால், இதன் பின் சின்ன பிராசஸ் உள்ளது. அதில் மட்டும் அதிக கவனம் தேவை.

போதிய பேலன்ஸ் இல்லாமல், நீங்கள் டோலில் கட்டாமல் போன தொகையை செலுத்தக் கூறி தேசிய நெடுஞ்சாலைத் துறை உங்கள் மொபைல் எண்ணிற்கு மெசேஜ் ஒன்றை அனுப்பும். இந்த மெசேஜின் பெயர் 'இ-நோட்டீஸ்'.

இந்த நோட்டீஸில் கட்டாமல் போன தொகை, வாகனத்தின் தகவல்கள் முதல் வலைதளத்தின் லிங்க் வரை அனைத்தும் இடம்பெற்றிருக்கும்.

இந்த ஃபீஸை இ-நோட்டீஸ் கிடைத்த 72 மணி நேரத்திற்குள் கட்டிவிட வேண்டும். அதை தாண்டினால், ஃபீஸ் இரண்டு மடங்கு அதிகமாக கட்ட வேண்டியதாக இருக்கும்.

ஃபாஸ்ட் டேக்கில் பேலன்ஸ் இல்லையென்றாலும், டோல் கேட்டைக் கடக்கலாம் என்பதெல்லாம் சூப்பர் தான்.

ஆனால், கொஞ்சம் மிஸ்ஸானாலும், இரண்டு மடங்கு அதிக தொகையைக் கட்ட வேண்டியதாக இருக்கும்.

இந்தச் சிக்கலில் இருந்து தப்பிக்க போதுமான பேலன்ஸை ஃபாஸ்ட் டேக்கில் எப்போதும் வைத்துக்கொள்வது நல்லது.

இந்த நடைமுறை கடந்த 17-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது மக்களே.

`அய்யோ அத மறந்துட்டனே.!' - 8 மணிநேர பயணத்துக்குப் பின் ஏறிய டெல்லிக்கே திரும்பிய Air India விமானம்!

நேற்று டெல்லியில் இருந்து கிளம்பிய ஏர் இந்தியா விமானம் கிட்டத்தட்ட 8 மணிநேரத்திற்குப் பிறகு, எங்கேயும் தரையிறங்காமல் மீண்டும் டெல்லிக்கே திரும்பியிருக்கிறது. அந்த விமானத்தில் பயணிகளும் இருந்திருக்கிறா... மேலும் பார்க்க