செய்திகள் :

Final Announcement: தமிழகத்தில் வரலாறு காணாத வாக்குப்பதிவு; 85% பதிவாகி புதிய சாதனை!

post image

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், இதுவரை இல்லாத வகையில் மிக அதிகப்படியான வாக்குகள் பதிவாகி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

இரவு 8 மணி நிலவரப்படி, மாநிலம் முழுவதும் சராசரியாக 84.69% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பதிவான 78.29% வாக்குப்பதிவே இதுவரை அதிகபட்சமாக இருந்தது. ஆனால், இந்தத் தேர்தலில் அதனை முறியடித்து 84.69% வாக்குகள் பதிவாகியுள்ளன. இது சுதந்திரத்திற்குப் பிறகு தமிழகத்தில் பதிவான மிக உயர்ந்த வாக்குப்பதிவு சதவீதமாகும்.

மாநில தேர்தல் ஆணையம்
மாநில தேர்தல் ஆணையம்

தமிழ்நாடு முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகளில் சுமார் 3.75 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில், 4,023 வேட்பாளர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

அனைத்து வாக்குச்சாவடிகளும் 'லைவ் வெப்காஸ்டிங்' (Live Webcasting) மூலம் கண்காணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, பெண்கள் 85.76%, ஆண்கள் 83.57%, மூன்றாம் பாலினத்தவர் 60.49% வாக்குகள் பதிவாகியிருக்கிறது. இறுதி நிலவரப்படி, மாநிலத்தின் பல தொகுதிகளில் வாக்குப்பதிவு 85 சதவீதத்தைக் கடந்துள்ளது.

தமிழக வரலாற்றில் மிக அமைதியாகவும், அதேசமயம் மிக அதிக எண்ணிக்கையிலும் மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. இன்று பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்தியா குறித்து ட்ரம்பின் சர்ச்சைக்குரிய பதிவு: "அறியாமை, பொருத்தமற்றது'' - இந்தியா கடும் கண்டனம்

இந்தியா மற்றும் சீனாவை "நரகக் குழி" (Hellholes) என்று அமெரிக்க வானொலி தொகுப்பாளர் மைக்கேல் சாவேஜ் வர்ணித்து, நான்கு பக்கங்கள் கொண்ட ஒரு நீண்ட கட்டுரையைத் தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார். இது இந்... மேலும் பார்க்க

Iran: "கமேனி வம்சத்தை அடியோடு அழிக்க அமெரிக்காவின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம்" - இஸ்ரேல்

அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது ஒன்றரை மாதமாக நடத்திய தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னெடுத்து வரும் பேச்சுவார்த்தை காரணமாக அமெரிக்கா இந்தப் போர்நிறுத்தத்த... மேலும் பார்க்க

'8 மாத கர்ப்பிணியான நாம் தமிழர் கட்சி பெண் வேட்பாளர் மீது திமுக-வினர் தாக்குதல்' - போலீஸ் விசாரணை!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று பாபநாசம் தொகுதி. இங்கு தி.மு.க கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கை சேர்ந்த ஷாஜகான், அ.தி.மு.க-வில் சண்முகபிரபு, நா.த.க-வில் அனிஷ் ப... மேலும் பார்க்க

'உன்னை இங்கேயே போட்டுருவேன்!' - தவெக வேட்பாளரை மிரட்டிய சேகர் பாபு?

துறைமுகம் தொகுதியில் வாக்குப்பதிவு முடிவடைய இருந்த சமயத்தில் அமைச்சர் சேகர் பாபுவும் தவெக வேட்பாளர் சினோரா அசோக்கும் நேருக்கு நேராக மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. அசோக்சென்னை துறைமுக... மேலும் பார்க்க