திருவண்ணாமலை திருக்கார்த்திகை திருவிழா; மகா தீபம் நாளில் பக்தர்கள் மலை ஏறத் தடை!
Gold Rate: தங்கம் விலையின் ரூட்டை மாற்றிய ட்ரம்ப் கட்சியின் தோல்வி; இந்த ஏற்றம் தொடருமா?
கடந்த வாரம், சென்னையில் ஒரு பவுன் தங்கம் ரூ.1.01 லட்சம் என்று இறங்கியது.
ஆனால், அன்றிலிருந்து சரியாக 5 நாட்களில் சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.655-உம், பவுனுக்கு ரூ.5,240-உம் உயர்ந்துள்ளது.
இன்று சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.13,385-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.1,07,080-க்கும் விற்பனையாகி வருகிறது. வெள்ளியுமே விலை சற்று உயர்ந்து ரூ.210-க்கு விற்பனையாகி வருகிறது. இந்த ஏற்றம் கடந்த ஐந்து நாள்களாகவே இருந்து வருகிறது.
நேற்று முன்தினம் (நவம்பர் 3), அமெரிக்காவில் மிட் டேர்ம் தேர்தல் நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் குடியரசுக் கட்சிக்குப் பெரும் பின்னடைவு.

ஏற்றத்திற்கான காரணம்?
இப்போது அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் கை ஓங்கியுள்ளது. ஏற்கெனவே ஜனநாயகக் கட்சி ஈரான் போரை விரும்பவில்லை.
இதனால், இனி ட்ரம்ப் ஈரான் போரில் எடுக்கும் முடிவுகள் ஓரளவு காங்கிரஸால் கட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த எதிர்பார்ப்பால் WTI கச்சா எண்ணெய் 90 டாலருக்குக் கீழும், Brent கச்சா எண்ணெய் 95 டாலருக்குக் கீழும் குறைந்துள்ளது.
ஈரான் போர் தொடங்கியதிலிருந்து கச்சா எண்ணெய் விலை குறைந்த போதெல்லாம் தங்கம் விலை ஏறியிருக்கிறது.
அதேபோல்தான் இன்றைய ஏற்றமும். கூடுதலாக, இந்த விலை ஏற்றத்தை அமெரிக்கத் தேர்தல் முடிவுகளும் சப்போர்ட் செய்துள்ளன.
ட்ரம்ப், ஈரான் போர் சார்ந்து வேறேதும் அதிரடி முடிவு எடுக்கும் வரையோ, உலக அளவில் வேறு பெரிய மாற்றங்கள் நடக்கும் வரையோ தங்கம் விலை ஏறுமுகத்தில் இருக்கலாம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.


















