செய்திகள் :

GT Vs RR: "அந்த ஒரு சிக்ஸரை நான் அடித்திருக்க வேண்டும்!"– குஜராத் கேப்டன் ரஷித் கான் வருத்தம்

post image

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய (ஏப்ரல் 4) விறுவிறுப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயித்த 210 ரன்கள் என்ற இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி, கடைசி வரை போராடி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிட்டது.

அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், கடைசி ஓவர் வரை சென்ற த்ரில் ஆட்டம்,  ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே வரவழைத்தது. 

GT vs RR
GT vs RR

தோல்விக்குப் பிறகு பேசிய கேப்டன் ரஷித் கான், " இந்த ஆடுகளத்தில் ராஜஸ்தான் போன்ற ஒரு வலுவான அணியை 210 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது எங்களது பந்துவீச்சாளர்களுக்குக் கிடைத்த ஒரு பெரிய வெற்றி.

பேட்டிங்கிலும் எங்களது தொடக்க வீரர்கள் மிகச்சிறந்த அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். ஆனால், 12 மற்றும் 13-வது ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை  இழந்ததுதான் எங்களை ஆட்டத்திலிருந்து பின்னுக்குத் தள்ளிவிட்டது. அந்த நேரத்தில் மட்டும் விக்கெட்டுகள் விழாமல் இருந்திருந்தால், இந்த இலக்கை எட்டுவது எங்களுக்குக் கடினமாக இருந்திருக்காது.

ஓவருக்கு 9 அல்லது 10 ரன்கள் எடுப்பது என்பது பெரிய விஷயமல்ல, பவுண்டரிகளும் எளிதாக வந்தன. ஆனால் விக்கெட்டுகளைத் தொடர்ந்து இழந்ததால் ஆட்டத்தின் வேகத்தை எங்களால் தக்கவைக்க முடியவில்லை.

ஸ்கோர் போர்டைப் பார்த்தாலே ஆட்டத்தின் தேவை என்ன என்பது தெரிந்துவிடும். இருப்பினும், இது தொடரின் ஆரம்பம்தான், தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு இன்னும் வலிமையாகத் திரும்புவோம்.

ரஷித் கான்
ரஷித் கான்

கடைசி ஓவரைப் பொறுத்தவரை, ஒரு பவுண்டரி அடித்தால் போதும் என்பதே எங்கள் திட்டமாக இருந்தது. துஷார் தேஷ்பாண்டே மிகச்சிறந்த யார்க்கர்களை வீசினார். ஆனால், அவர் லெந்த் தவறி வீசிய அந்த ஒரு பந்தை நான் சிக்ஸருக்கு அடித்திருக்க வேண்டும், அது முடியாமல் போனது வருத்தமே.

சுப்மன் கில் பற்றி கவலைப்படத் தேவையில்லை. அவருக்கு லேசான தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது, அடுத்த போட்டிக்குள் அவர் குணமாகிவிடுவார் என்று நம்புகிறேன்," என்று பேசியிருக்கிறார்.

CSK: "எங்கள் அணியின் மீது எழும் விமர்சனங்கள் நியாயமானதுதான்.!"- ஃபிளெமிங் என்ன சொல்கிறார்?

2026 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே இதுவரை இல்லாத அளவிற்கு மிக மோசமான தொடக்கத்தைச் சந்தித்திருக்கிறது. விளையாடிய முதல் 3 போட்டிகளிலும் தோல்வியைச் சந்திருக்கிறது. ஒரு வெற்றி கூட பெறாமல் புள்ளிப்பட்டியலில் 0 பு... மேலும் பார்க்க

RR vs RCB: "களத்தில் நான் பந்துவீச்சாளர்களை கவனிக்க மாட்டேன், மாறாக.!"- சூர்யவன்ஷி சொல்லும் சீக்ரெட்

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்.10) ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் ராஜஸ்தான் அணி பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றி... மேலும் பார்க்க

RR Vs RCB: "வைபவ் பவர்பிளேயில் விளையாடிய விதம் தான்.!"- தோல்வி குறித்து கேப்டன் ரஜத் பட்டிதார்

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 10) கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத இரு அணிகள் மோதியதால், ரசிக... மேலும் பார்க்க

RR Vs RCB: `கேப்டனாக நான் எடுத்த தவறான முடிவுகளால் 20 ரன்கள் கூடிவிட்டது!' - கேப்டன் ரியான் பராக்

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய (ஏப்ரல் 10)16-வது லீக் போட்டியில், பெங்களூரு அணி நிர்ணயித்த 202 ரன்கள் என்ற இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18 ஓவர்களிலேயே எட்டி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு ப... மேலும் பார்க்க

Mukul Choudhary: 'கடன், ஏழ்மை, தந்தையின் சிறைவாசம்'- வலிகளைக் கடந்து வென்ற IPL நாயகன் முகுல் சௌத்ரி!

ஏப்ரல் 8, 2026 அன்று கொல்கத்தாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான போட்டிகளில் ஒன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) vs கொல்கத்தா நைட் ... மேலும் பார்க்க

IPL: கிரிக்கெட் உலகை மிரளவைத்த அந்த `27' பந்துகள்; முகுல் சௌத்ரி எனும் 'ஒன் மேன் ஆர்மி' - யார் இவர்?

கிரிக்கெட் என்பது இந்தியாவில் வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது கோடிக்கணக்கான இளைஞர்களின் உணர்ச்சி. ஒரு சிறிய தெருவில் ரப்பர் பந்துடன் தொடங்கும் கனவு, ஒருநாள் ஸ்டேடியத்தின் மின்னொளியில் நனவாகும் போதுதா... மேலும் பார்க்க