செய்திகள் :

GT vs RR: "பேட்டர்கள் திணற வேண்டும். அதைத்தான் இந்தப் போட்டியில் செய்தேன்.!"- ரவி பிஷ்னோய்

post image

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான்- குஜராத் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய ரவி பிஷ்னோய் ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கிறார்.

விருது வென்ற பிறகு பேசிய ரவி பிஷ்னோய், " கடந்த சீசன் எனக்கு சவாலானதாக இருந்தது. ஆனால், என்னுடைய திறனின் மீது நம்பிக்கை வைத்தேன். சரியான லெந்தில் வீசத் தவறினால் என்னுடைய பந்தை சிக்சர் அடித்து விடுகிறார்கள்.

ராஜஸ்தான் ராயல்ஸ்
ராஜஸ்தான் ராயல்ஸ்

அதுதான் என்னுடைய பலவீனமாக இருந்தது. சரியான லெந்தை பிடிப்பதில்தான் முழுக்க முழுக்க கவனம் செலுத்தினேன். நான் ஃபுல் லெந்தில் வீசி அடிபட்டால் பிரச்னை இல்லை.

ஆனால், குட் லெந்தில் வீசும் போது பேட்டர்கள் திணற வேண்டும். அதைத்தான் இந்தப் போட்டியிலும் செய்தேன். சீராக குட் லெந்தில் வீச முயற்சித்தேன்.

இதற்காக மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் நிறைய பயிற்சிகளை செய்தேன். எடுத்த எல்லா விக்கெட்டுகளுமே எனக்கு பேவ்ரைட்தான்.

ஆனாலும் ராகுலின் விக்கெட் கொஞ்சம் ஸ்பெசல். அவர் நின்றிருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கும்.

ரவி பிஷ்னோய்
ரவி பிஷ்னோய்

நாங்கள் போட்டியை வென்றுவிட்டோம் என்பதே பெரும் மகிழ்ச்சி. துஷாரும் ஜோப்ரா ஆர்ச்சரும் பௌலிங் செய்த விதம் அபாரமாக இருந்தது. இது ஒரு கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

"சஞ்சு சாம்சன் எல்லா போட்டிகளிலும் ரன் குவிக்க மாட்டார்.!"- பயிற்சியாளர் பிளெமிங் சொல்வது என்ன?

2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தனது முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி இருக்கிறது. குறிப்பாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து பெரிய எதிர்பார்ப்புடன் சென்னை அணிக்கு வந்த சஞ்சு ... மேலும் பார்க்க

GT Vs RR: `அதற்கான ஆலோசனையை அவர்தான் அளித்தார்!' – வெற்றி குறித்து கேப்டன் ரியான் பராக்

ஐபிஎல் தொடரில் நேற்றைய (ஏப்ரல் 4) ஆட்டமான ராஜஸ்தான் vs குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டி விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இது வரை நடந்த போட்டிகளில் கடைசி வரை சென்று ரசிகர்களை இருக்கையின் நுனிவரை அ... மேலும் பார்க்க

GT Vs RR: "அந்த ஒரு சிக்ஸரை நான் அடித்திருக்க வேண்டும்!"– குஜராத் கேப்டன் ரஷித் கான் வருத்தம்

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய (ஏப்ரல் 4) விறுவிறுப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயித்த 210 ரன்கள் என்ற இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி, கடைசி வரை போராடி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைத்... மேலும் பார்க்க

DC vs MI: "எங்களோட சக்சஸ் பார்முலா இதுதான்!" - என்ன சொல்கிறார் அக்சர் படேல்?

ஐபிஎல் 2026 தொடரின் இன்றைய (ஏப்ரல் 4) விறுவிறுப்பான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி, டெல்லி கேபிடல்ஸ் அணி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. 163 ரன்கள் என்ற இலக்கை மிக எளிதாகத் துரத்திய டெ... மேலும் பார்க்க

DC vs MI: போட்டியை வென்று கொடுத்த சமீர் ரிஸ்வி; கோட்டைவிட்ட மும்பை இந்தியன்ஸ்; எப்படி தோற்றது?

ஐபிஎல் தொடரில் இன்று (ஏப்ரல் 4) நடைபெற்ற மும்பை vs டெல்லி அணிகளுக்கிடையேயான போட்டி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக ஓய்வில் இருக்க, மாற்றாக ... மேலும் பார்க்க

"தோனி, கபில் தேவிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.!" - தந்தை பேச்சால் யுவராஜ் சிங் வேதனை

தனது தந்தை யோக்ராஜ் சிங் கூறி வரும் கருத்துகளுக்காக்க தோனி மற்றும் கபில் தேவ்விடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்திருக்கிறார். இந்திய அணி வென்ற இரண்டு உ... மேலும் பார்க்க