செய்திகள் :

Hansika Motwani: "அவற்றுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை" - ஹன்சிகா ஓபன் டாக்

post image

நடிகை ஹன்சிகா மோத்வானி மற்றும் தொழிலதிபர் சோஹைல் கதுரியா கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் திருமணம் செய்துகொண்டனர்.

பிறகு, இந்தத் தம்பதி கடந்த மார்ச் மாதம் விவாகரத்து பெற்றனர். கருத்து வேறுபாடுகள் காரணமாக 2024-ம் ஆண்டு ஜூலை முதல் பிரிந்து வாழ்ந்து வந்த இவர்கள் விவாகரத்து பெற்றனர்.

Hanisika Motwani & Soheal Kathuria
Hanisika Motwani & Soheal Kathuria

விவாகரத்தில் ஹன்சிகா எவ்வித ஜீவனாம்சமும் கோரவில்லை. சமீபத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், தனது விவாகரத்து மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழும் விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ளார்.

அதில் அவர், "என்னைப் பற்றி எழும் எல்லா கேள்விகளுக்கும் அல்லது விமர்சனங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் எனக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை.

நான் ஒரு திரைப்பட நடிகை என்பதால் மக்கள் என்னைப் பற்றிப் பேசலாம். ஆனால் எனது தனிப்பட்ட வாழ்க்கையின் ரகசியத்தைப் பாதுகாக்க எனக்கு உரிமை உண்டு.

கடந்த இரண்டு ஆண்டுகள் எனது வாழ்க்கையில் மிகவும் கடினமான மற்றும் இருண்ட காலமாக இருந்தது.

Hansika Motwani | ஹன்சிகா மோத்வானி
Hansika Motwani | ஹன்சிகா மோத்வானி

அந்தச் சமயத்தில் எனது தாய் மோனா மோத்வானி மற்றும் சகோதரர் பிரசாந்த் மோத்வானி ஆகியோர்தான் எனக்கு பெரும் உறுதுணையாக இருந்தனர்.

மன அழுத்தத்திலிருந்து மீள அவர்கள் எனக்கு பக்கபலமாக நின்றனர். இப்போது நான் அந்தத் துயரங்களிலிருந்து மீண்டு மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

தவறான உறவில் இருந்து துன்பப்படுவதை விட, அதிலிருந்து வெளியேறுவதே நல்லது. வேலையில் கவனம் செலுத்துவதே எனக்கு இப்போதைய முக்கியக் குறிக்கோள்" எனக் கூறியிருக்கிறார்.

''அஜித், ஷாலினிக்கு தெரியாமல் எடுத்த ஒரு காட்சியை படத்தில் வைத்திருக்கிறேன்; கண்டுபிடிங்க" - சரண்

சரண் இயக்கத்தில் அஜித்குமார், ஷாலினி, ரகுவரன், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’அமர்க்களம்’. நேற்று (ஏப்ரல் 24) அஜித்குமார், ஷாலினி திருமண நாளை முன்னிட்டு 4K தொழில... மேலும் பார்க்க

நடிகர் அஜித் ரசிகர் மன்றத்தை கலைத்தது ஏன்?- வெளிப்படையாக சொன்ன அமர்க்களம் இயக்குநர்

சரண் இயக்கத்தில் அஜித்குமார், ஷாலினி, ரகுவரன், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’அமர்க்களம்’. நேற்று (ஏப்ரல் 24) அஜித்குமார், ஷாலினி திருமண நாளை முன்னிட்டு 4K தொழில... மேலும் பார்க்க

Riythvika: 'திட்டமிட்டப்படி நடக்கவில்லை' - திருமணம் பற்றி மனம் திறந்த 'பிக் பாஸ்' ரித்விகா

'மெட்ராஸ்', 'கபாலி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை ரித்விகா. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டவர் டைட்டிலையும் வென்றார். ரித்விகாகடந்தாண்டு இவரி... மேலும் பார்க்க

"கவனக் குறைவே காரணம்!" - 'ஜனநாயகன்' பட எடிட்டரை இடைநீக்கம் செய்த படத்தொகுப்பாளர்கள் சங்கம்!

விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வர வேண்டியது. ஆனால், படத்திற்குச் சென்சார் கிடைக்கத் தாமதமானதால் படத்தின் ரிலீஸ் தடைப்பட்டது. இன்று வரை அப்படத்திற்குச் சென்சார் சான்றிதழ் வழங்... மேலும் பார்க்க

Priyanka Mohan: "தென் கொரியா அதிபர் என் படத்தை பார்த்து..." - ராஷ்டிரபதி பவனில் பிரியங்கா மோகன்

இந்தியாவிற்கு மூன்று நாள் பயணமாக வந்திருந்த தென்கொரிய அதிபர் லீ ஜே-மியுங்கிற்கு (Lee Jae-myung) ஏப்ரல் 20-ம் தேதி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். அர... மேலும் பார்க்க