செய்திகள் :

Hockey Men's Junior WC: ஸ்பெயினை வீழ்த்தி 8-வது முறையாக ஜெர்மனி சாம்பியன்; இந்தியாவுக்கு வெண்கலம்!

post image

தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 28-ம் தேதி தொடங்கிய 14-வது ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பையில், லீக் சுற்று போட்டிகள் முடிவில், ஜெர்மனி, இந்தியா, அர்ஜென்டினா, ஸ்பெயின், நெதர்லாந்து, பிரான்ஸ், நியூசிலாந்து, பெல்ஜியம் ஆகிய 8 அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.

அடுத்ததாக டிசம்பர் 5-ம் தேதி நடைபெற்ற காலிறுதிச் சுற்று போட்டிகளில் ஸ்பெயின், ஜெர்மனி, அர்ஜென்டினா, இந்தியா ஆகிய 4 அணிகள் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறின.

அதைத்தொடர்ந்து, டிசம்பர் 7-ம் தேதி ஸ்பெயின் vs அர்ஜென்டினா, இந்தியா vs ஜெர்மனி அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்றன.

ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை - ஜெர்மனி vs ஸ்பெயின்
ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை - ஜெர்மனி vs ஸ்பெயின்

இதில், ஸ்பெயினும், ஜெர்மனியும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

இந்த நிலையில், சென்னையில் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் ஸ்பெயின் vs ஜெர்மனி இறுதிப் போட்டி இன்று இரவு 8 மணியளவில் தொடங்கியது.

ஆட்டத்தின் முதற்பாதியில் ஜெர்மனியும், இரண்டாம் பாதியில் ஸ்பெயினும் ஒவ்வொரு கோல் அடிக்க ஆட்டநேர முடிவில் 1 - 1 எனப் போட்டி சமனில் முடிந்தது.

இதனால் வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்ட்டி ஷூட்-அவுட் முறையில் இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்பட்டது.

இதில், முதல் வாய்ப்பில் இரு அணிகளும் கோல் அடிக்கத் தவறின. இரண்டாவது வாய்ப்பிலும் ஜெர்மனி கோல் அடிக்காமல் மிஸ் பண்ண, ஸ்பெயின் கோல் அடித்து முன்னிலை பெற்றது.

ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை - ஜெர்மனி vs ஸ்பெயின்
ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை - ஜெர்மனி vs ஸ்பெயின்

மூன்றாவது வாய்ப்பில் இது அப்படியே தலைகீழாக மாறியது, ஸ்பெயின் கோல் அடிக்காமல் மிஸ் பண்ண மறுபக்கம் ஜெர்மனி கோல் அடித்து சமநிலைக்கு வந்தது.

அடுத்து நான்காவது வாய்ப்பில் இரு அணிகளுமே கோல் அடிக்க 2 - 2 சமநிலை தொடர்ந்தது.

ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை - ஜெர்மனி vs ஸ்பெயின்
ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை - ஜெர்மனி vs ஸ்பெயின்

இறுதியில் சாம்பியனைத் தீர்மானிக்கும் கடைசி வாய்ப்பில் ஸ்பெயின் கோட்டைவிட ஜெர்மனி கோல் அடித்து 3 - 2 என வெற்றி வாகை சூடியது.

இது ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பையில் ஜெர்மனி வெல்லும் 8-வது சாம்பியன் பட்டம்.

இப்போட்டிக்கு முன்பாக நடைபெற்ற 3-ம் இடத்துக்கான போட்டியில் இந்திய அணி 4 - 2 என அர்ஜென்டினாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது.

Hockey Men's Junior WC: இறுதிப்போட்டி கனவை இழந்த இந்தியா; அரையிறுதியில் ஜெர்மனியிடம் படுதோல்வி

ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிகள் இன்று (டிசம்பர் 7) நடைபெற்றது.முன்னதாக டிசம்பர் 5-ம் தேதி நடைபெற்ற காலிறுதிப்போட்டிகளில், ஸ்பெயின், ஜெர்மனி, அர்ஜென்டினா, இந்தியா ஆகிய 4 அணிகள் ... மேலும் பார்க்க

Hockey Men's Junior WC: திக் திக் கடைசி நிமிடங்கள்; பெல்ஜியமை வென்று அரையிறுதிக்குள் சென்ற இந்தியா!

தமிழ்நாட்டில் நவம்பர் 28-ம் தேதி தொடங்கிய ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பைத் தொடரானது காலிறுதிச் சுற்றை எட்டியிருக்கிறது.லீக் சுற்று போட்டிகள் முடிவில் 6 குழுக்களில் முதலிடம் பிடித்த 6 அணிகள் மற்றும் இரண்ட... மேலும் பார்க்க

Hockey Men's Junior WC: சுவிட்சர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய இந்தியா; மற்ற 7 அணிகள் எவை?

ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை நவம்பர் 28-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது.மதுரை மற்றும் சென்னையில் நடைபெறும் இத்தொடரில் பங்கேற்றுள்ள 24 அணிகள் மொத்தம் 6 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.இதி... மேலும் பார்க்க

Hockey Men's Junior WC 2025: ஓமன் அணியை ரவுண்டு கட்டிய இந்திய வீரர்கள்; 17 - 0 என அபரா வெற்றி!

ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை நேற்று (நவம்பர் 28) முதல் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது.டிசம்பர் 10 வரை இத்தொடரில் அனைத்து போட்டிகளும் மதுரை மற்றும் சென்னையில் நடைபெறும்.24 அணிகள் விளையாடும் இத்த... மேலும் பார்க்க

மதுரையில் Hockey Junior WC: இங்கிலாந்து vs நெதர்லாந்து - `விறு விறு போட்டி' இறுதியில் வென்றது யார்?

மதுரை, தமிழ்நாடு விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் 14வது சர்வதேச ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டியின் இரண்டாவது நாள் முதல் போட்டி மிதமான மழையுடன் தொடங்கியது. ரசிகர்களின் ஆரவாரத்துடன் தொடங்கி... மேலும் பார்க்க