செய்திகள் :

ICU நோயாளிகளுக்கு மொபைல் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை; கோத்தகிரி அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம்

post image

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் தாலுகா மருத்துவமனை இயங்கி வருகிறது. கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பழங்குடிகள், தோட்ட தொழிலாளர்கள் என ஏழை எளிய மக்கள் இந்த மருத்துவமனையை மட்டுமே சார்ந்துள்ளனர். மருத்துவர்கள் பற்றாக்குறையில் தொடங்கி நோயாளிகளின் படுக்கைகளில் நாய்கள் படுத்திருப்பது வரை பல்வேறு சேவைக் குறைபாடுகள் இந்த மருத்துவமனையில் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், மின் இணைப்பில் பழுது எனக் கூறி தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு செல்போன் டார்ச் ஒளியைப் பயன்படுத்தி சிகிச்சை அளித்தும் உணவுகளை வழங்கியும் வரும் சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கோத்தகிரி அரசு மருத்துவமனை

பின்னணி குறித்து தெரிவித்த கோத்தகிரி அரசு மருத்துவமனை பணியாளர்கள், "நேற்று காலையில் இருந்தே மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஐ.சி.யூ பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு நேற்று இரவு செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் தான் சிகிச்சை அளிக்கப்பட்டது. வேறு வழியின்றி சில நோயாளிகளை எமர்ஜென்சி பிரிவுக்கு மாற்றி கண்காணித்து வருகிறோம்" என்றனர்.

கோத்தகிரி மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, "அரசு மருத்துவமனை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் சப்ளை சரியாக இருக்கிறது. மருத்துவமனையின் ஒன்றிரண்டு பிளாக்குகளில்தான் கோளாறு ஏற்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன" என்றனர்.

ஆவின் பால் பொருட்கள் விலை உயர்வு; பண்டிகை காலத்தில் மக்கள் அதிர்ச்சி; எந்தப் பொருள் எவ்வளவு உயர்வு?

பண்டிகை காலம் நெருங்கி வரும் வேளையில், ஆவின் நிறுவனத்தின் பால் உபபொருட்களின் விலை உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவின் நிறுவனம் தற்போது 230-க்கும் மேற்பட்ட ... மேலும் பார்க்க

''நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்'' - அன்பில் மகேஸ் கைது குறித்து காவல்துறை விளக்கம்!

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது செய்யப்பட்ட செய்தி இப்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி 100 கோடிக்கும் மேல் மோசடி ச... மேலும் பார்க்க

ரயில் பயணத்தில் மரணம்; ரயில்வே-யின் அலட்சியத்தால் உயிரிழந்தவருடன் 12 மணி நேரம் பயணித்த பயணிகள்

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புற்றுநோயாளி பினோத் பஸ்வான் என்பவர் மும்பையில் உள்ள டாடா நினைவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கீதாஞ்சலி எக்ஸ்பிரஸ் ரயிலில் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். பயணத்த... மேலும் பார்க்க

`விமானங்களின் எரிபொருள் மீதான VAT குறைப்பு; வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்' - அமைச்சர் கீர்த்தனா

தமிழ்நாட்டில் விமான எரிபொருள் மீதான வாட் வரி 29 சதவிகிதமாக இருந்தது. இதைக் குறைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு விமான நிறுவனங்கள் கோரிக்கை வைத்து வந்தன. இந்த நிலையில், 29 சதவிகிதமாக இருந்த மதிப்புக... மேலும் பார்க்க

`காவல்துறையின் அன்றாட சில்லறை செலவின நிதி உயர்த்தி அறிவிப்பு!' - தமிழ்நாடு அரசு

லஞ்சமற்ற அரசு அலுவலகங்களை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாநிலத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கான அன்றாட சில்லறை செலவினத்தை உயர்த்தி ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை... மேலும் பார்க்க

வரி சீர்திருத்தங்கள் தொழில் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கட்டும்!

ஒரு தேசத்தின் தொழில் வளர்ச்சியைத் தீர்மானிப்பது விற்பனை மட்டுமல்ல; ஆரோக்கியமான பணப்புழக்கமும், அதைத் தடையின்றி வளர்ச்சிக்குப் பயன்படுத்தும் சுதந்திரமும்தான். குறிப்பாக, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொ... மேலும் பார்க்க