மாணவிக்கு பாலியல் தொல்லை: திருப்பதி சமஸ்கிருத பல்கலைக்கழக பேராசிரியர்கள் கைது
IND vs SA: ஹர்திக்கின் அதிரடி; 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆரம்பமாகியிருக்கின்றன.
தென்னாப்பிரிக்கா அணி டாஸை வென்று, பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணியில் அபிஷேக் சர்மா 17 (12), ஷுப்மன் கில் 4 (2), கேப்டன் சூர்யகுமார் யாதவ் 12 (11), திலக் வர்மா 26 (32), அக்சர் படேல் 23 (21) எடுத்து மிகவும் தோய்வான ஆட்டத்தையே ஆடியிருந்தனர்.

ஹர்திக் பாண்டியா களமிறங்கி 28 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உட்பட 59 ரன்களை குவித்து அசத்தினார். இதனால், இந்திய அணி, 20 ஒவர்கள் முடிவில் 175/6 ரன்களை எடுத்தது.
அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் டிவோல்ட் பிரேவிஸ் 22 (14) மட்டுமே 20 ரன்களுக்கு மேல் அடித்தார். மற்றவர்கள் சொற்பான ரன்களில் ஆட்டமிழந்து மோசமான ஆட்டத்தையே ஆடியிருந்தனர். இதனால், தென்னாப்பிரிக்க அணி, 12.3 ஓவர்களில் 74/10 ரன்களை மட்டும் எடுத்து சுருண்டுவிட்டது.

இதன்மூலம் 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்த டி 20 தொடரின் முதல் போட்டியிலேயே வெற்றிபெற்றிருக்கிறது இந்திய அணி.
இப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி தங்களது குறைந்தபட்ச டி20 ஸ்கோரையும் பதிவு செய்துள்ளது. இதற்கு முன்னர் ராஜ்கோட்டில் 2022 ஆம் ஆண்டு 87 ஆல் அவுட் ஆனதே குறைந்தப்பட்ச ஸ்கோராக இருந்தது குறிப்பிடத்தக்கது.


















