செய்திகள் :

Iran: மீண்டும் தொடங்கும் ஈரான் உறவு; 5 ஆண்டுக்குப் பிறகு கச்சா எண்ணெய் இந்தியா இறக்குமதி செய்யும்

post image

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைக் களைய, இந்தியா மீண்டும் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது.

இந்தத் தகவலை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் இன்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக, கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் முதல் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தி வைத்திருந்தது. ஆனால், தற்போதைய அமெரிக்கா-இஸ்ரேல் போர்ச் சூழலால் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும் விநியோகப் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஹோர்மூஸ் நீரிணை வரைபடம்
ஹோர்மூஸ் நீரிணை வரைபடம்

உலகின் மூன்றாவது மிகப்பெரிய எண்ணெய் நுகர்வோர் நாடான இந்தியாவுக்கு இது பெரும் சவாலாக அமைந்தது. இந்தச் சூழலைச் சமாளிக்க, ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இதர எரிபொருட்களை இறக்குமதி செய்ய இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன.

இது குறித்து மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ``மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளுக்கு மத்தியில், இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளன. ஈரான் எண்ணெய்க்கான பணப் பரிமாற்றத்தில் தற்போது எந்தச் சிக்கலும் இல்லை" எனக் குறிப்பிட்டிருக்கிறது.

வரவிருக்கும் மாதங்களுக்கான கச்சா எண்ணெய் தேவையை இந்தியா முழுமையாக உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியா தற்போது 40-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது.

இந்தியா
இந்தியா

வணிக ரீதியான லாபம் மற்றும் தேவையைப் பொறுத்து வெவ்வேறு நாடுகளிலிருந்து எண்ணெய் வாங்கும் முழு சுதந்திரம் இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் மட்டுமின்றி, ஈரானிடமிருந்து 44,000 மெட்ரிக் டன் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவும் (LPG) இந்தியா வாங்கியுள்ளது. இதற்காகப் பயன்படுத்தப்பட்ட கப்பல் கடந்த புதன்கிழமை மங்களூரு துறைமுகத்தை வந்தடைந்ததாகவும், தற்போது எரிபொருளை இறக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

'கச்சா எண்ணெய்' இறக்குமதியில் தள்ளாடும் நாடுகள்; ஆனால் இந்த உலோகத்தை அதிகமாக இறக்குமதி செய்யும் சீனா

அமெரிக்கா - ஈரான் போரால் உலகமே கச்சா எண்ணெய், எல்.பி.ஜியை உற்று நோக்கி வருகிறது.இந்த நேரத்தில், சீனா சத்தமே இல்லாமல் வெள்ளியை இறக்குமதி செய்கிறது.ப்ளூம்பெர்க் குறிப்பிட்டுள்ள சீனாவின் அறிக்கையின் படி,... மேலும் பார்க்க

தமிழகத்தில் பறக்கும் படை வேட்டையில் சிக்கியது இத்தனை கோடிகளா? - அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட தகவல்

தமிழ்நாட்டில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பரிசுப்பொருட்கள் மற்றும் பணம் குறித்த விவரங்களை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டமன்... மேலும் பார்க்க

மணிப்பூர்: தீப்பந்தத்துடன் வீதிக்கு வந்த பெண்கள்; உடைந்த நம்பிக்கையும் ஓயாத கலவரமும்;என்ன நடக்கிறது?

மணிப்பூர் மாநிலத்தில் 2023 மே மாதம் மெய்தி - குக்கி என இரு சமூகத்தினரிடையே தொடங்கிய கலவரம் இன்றுவரை நீடித்து வருகிறது. இந்தக் கலவரத்தில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர... மேலும் பார்க்க

"எங்களது ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்" - ட்ரம்ப் பதிவு; நம்பிக்கையில் பாகிஸ்தான்; மௌனத்தில் ஈரான்

நேற்று பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நடக்கவிருந்த அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை திட்டமிட்டது போல நடக்கவில்லை. அமெரிக்கா தரப்பில் இருந்து அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சிறப்பு தூதர் ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் : பிரசார களத்துக்கு வந்த 'மீன்கள்' ; மேற்கு வங்கத்தை அசைக்கும் உணவு யுத்தம்!

கொல்கத்தாவின் பாரக்பூர் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளரான கௌஸ்தவ் பக்சி, பாரம்பரிய உடை அணிந்து கையில் ஒரு மீனுடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்குப் பின்னால் மேளதாளங்கள் முழங்க ஆதரவ... மேலும் பார்க்க