செய்திகள் :

John Ternus: ஆப்பிள் சிஇஓ பதவியிலிருந்து விலகும் டிம் குக்; புதிய தலைவராக ஜான் டெர்னஸ் நியமனம்!

post image

டிம் குக் ஓய்வு

ஆப்பிள் நிறுவனத்தில் கடந்த 15 ஆண்டுகளாகத் தலைமைச் செயலதிகாரியாகப் பணியாற்றி வரும் டிம் குக், வரும் செப்டம்பர் 1, 2026 அன்று அப்பதவியிலிருந்து ஓய்வு பெற உள்ளார். அவருக்குப் பதிலாக, நிறுவனத்தின் வன்பொருள் பொறியியல் பிரிவின் மூத்த துணைத் தலைவராக இருக்கும் ஜான் டெர்னஸ் பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியிலிருந்து விலகும் டிம் குக், நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராகத் (Executive Chairman) தொடர்ந்து செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜான் டெர்னஸ்

51 வயதான ஜான் டெர்னஸ், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர். 2001-ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தில் தயாரிப்பு வடிவமைப்பாளராகத் தனது பணியைத் தொடங்கிய இவர், கடந்த இருபது ஆண்டுகளில் ஐபோன், ஐபேட் மற்றும் மேக் உள்ளிட்ட நிறுவனத்தின் முதன்மைத் தயாரிப்புகளின் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

John Ternus
John Ternus

குறிப்பாக, ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்புகளுக்குத் தேவையான சொந்தச் செயலிகளை (Apple Silicon) வடிவமைக்கும் முக்கியத் திட்டத்தை இவர் வெற்றிகரமாக வழிநடத்தினார்.

தற்போது தொழில்நுட்ப உலகில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த போட்டிகள் அதிகரித்து வரும் சூழலில், ஆப்பிள் நிறுவனத்தை முன்னிலைப்படுத்த வேண்டிய சவால், ஜான் டெர்னஸிற்கு உள்ளது.

மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்களுடன் போட்டியிட்டு, ஆப்பிள் நிறுவனத்தின் 'ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்' தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வது இவரது முதன்மையான பணியாக இருக்கும்.

John Ternus
John Ternus

ஆப்பிள் நிறுவனத்தின் இந்தத் தலைமை மாற்றம் என்பது வெறும் அதிகாரப் பரிமாற்றம் மட்டுமல்ல, அது ஒரு புதிய தொழில்நுட்பப் புரட்சிக்கான தொடக்கமாகவும் பார்க்கப்படுகிறது. ஸ்டீவ் ஜாப்ஸின் தொலைநோக்குப் பார்வையையும், டிம் குக்கின் அபாரமான வணிக வளர்ச்சியையும் உள்வாங்கி வளர்ந்த ஜான் டெர்னஸ், ஆப்பிள் நிறுவனத்தில் இன்னும் கூடுதலான புதுமைகளையும் நுணுக்கமான மாற்றங்களையும் கொண்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

AI மீது 'மாயக் காதல்': அமெரிக்கத் தொழிலதிபர் தற்கொலை - கூகுள் மீது வழக்கு

இன்று உலகமே உள்ளங்கையில் சுருங்கிவிட்டதாக நம்பும்படி ஏஐ உலகம் உருவாகியிருக்கிறது. குறிப்பாக ஜெமினி, சாட் ஜிபிடி போன்ற நேரடி உரையாடல் அனுபவம் பெரும் அளவில் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், அவை இன்னொரு ஆபத்... மேலும் பார்க்க

வாகனத்தின் டயர் தேய்ந்துவிட்டதா... கண்டுபிடிப்பது எப்படி? - இது தெரியாமப் போச்சே?! - 18

புதிதாக டயர் வாங்கும்போது அல்லது காரைச் சுத்தம் செய்யும்போது, டயரின் இடுக்குகளில் சிறிய ரப்பர் கோடுகள் அல்லது மேடுகளை நீங்கள் கவனித்திருக்கலாம். இவை வெறும் அலங்காரத்திற்காக உருவாக்கப்பட்டவை அல்ல.டயரின... மேலும் பார்க்க

Google Pay-ல் 'Pocket Money' ஆப்ஷன்: க்ளிக் செய்தால் மொத்த பணமும் காலியா? |Explainer & Fact Check

லேட்டஸ்ட் அப்டேட் 'கூகுள் பே'-யில் இப்போது 'People' பிரிவில், முதல் வரிசையில் முதல் ஐகானே, 'Pocket Money' என்ற ஒன்று புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஐகான் குறித்து தற்போது ஆடியோ ஒன்று பகிரப்பட்டு வர... மேலும் பார்க்க

1972 Vs 2026: தொழில்நுட்பம் மாறினாலும் மாறாத பூமியின் வசீகரம் - நாசாவின் வரலாற்றுப் பதிவு!

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, 'அப்போலோ' விண்கலத்தில் சென்ற வீரர்கள் நிலவில் கால் தடம் பதித்தபோது, ஒட்டுமொத்த உலகமே வியப்பில் உறைந்து போனது. அந்த வரலாற்றுத் தருணத்திற்குப் பிறகு, மீண்டும் மனிதர்களை நி... மேலும் பார்க்க

QR Code: ஸ்கேன் செய்யும் கறுப்பு வெள்ளைப் படத்தின் ரகசியம் என்ன? - இது தெரியாமப் போச்சே?! - 13

நாம் தினமும் QR Code ஸ்கேன் செய்கிறோம். கறுப்பு , வெள்ளை கலந்த அந்தப் படம் எப்படி வேலை செய்கிறது என்று தெரியுமா? ஸ்கேனர் எப்போதும் கறுப்பு வரிகளைப் படிக்காது, அவற்றுக்கு இடையே உள்ள வெள்ளை இடைவெளியைத்த... மேலும் பார்க்க

'உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை' - இந்த மெசேஜ் வந்தால் உடனே அலர்ட் ஆகுங்க!

தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தம் முடிந்து 'இறுதி வாக்காளர் பட்டியலும்' வெளியாகிவிட்டது. இன்னும் 20 நாள்களில் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலே நடைபெற உள்ளது. இந்த நேரத்தில், பலருக்கு 'தற்போது வெளியா... மேலும் பார்க்க