செய்திகள் :

Karuppu: 'ஒரு அண்ணனா சொல்றேன், இந்த வயசை மிஸ் பண்ணாதீங்க.!' - சூர்யா

post image

சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள படம் `கருப்பு'. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு எனப் பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் மே 14 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்திற்கான புரொமோஷன் நிகழ்ச்சி நேற்று (மே. 12) கேரளாவில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய சூர்யா, "கடந்த 5 ஆண்டுகளில் நான் நடித்த படங்களிலிருந்து இது மிகவும் வித்தியாசமான படம். முதல் பாதி உணர்ச்சிப்பூர்வமான பயணமாக இருக்கும்.

கருப்பு படம்
கருப்பு படம்

இரண்டாம் பாதி முழுக்க தியேட்டர் மொமென்ட்டுகளால் நிரம்பி இருக்கும். மே 14ஆம் தேதி மீண்டும் உங்கள் அன்பை பெறுவோம் என்று நம்புகிறேன்.

நான் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். நானும் நீங்கள் எல்லாரும் ரொம்ப சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

ஒரு அண்ணனாக சொல்கிறேன் இந்த வயதை மிஸ் பண்ணாதீர்கள். பெரிய கனவு காணுங்கள் எல்லாமே நிச்சயம் நனவாகும்" என்று பேசியிருக்கிறார்.

தாத்தா ஆனார் நடிகர் பிரபு; ஆதிக் ரவிச்சந்திரன் - ஐஸ்வர்யா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது!

நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யா - இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் குழந்தையும் நலமாக இருக்கிறார்கள்.'திரிஷா இல்லனா நயந்தாரா', 'மார்க் ஆண்டனி', 'குட் பேட் அக்லி'... மேலும் பார்க்க

"லட்சியமும் செயலும் சேர்ந்தால் எதுவும் சாத்தியம்..." - முதல்வரை வாழ்த்திய `முதல்வன்' பட இயக்குநர்!

தமிழக முதல்வராகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெருங்கட்சியாகத் தவெக-வை மக்கள் உருவெடுக்கச் செய்திருக்கிறார்கள். பெரும் போராட... மேலும் பார்க்க

குழந்தை ரசிகர்கள் அதிகம்னால, பேயை டிரெண்ட் ஆக்கிட்டாங்க! - ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4' பரபர அப்டேட்

ராகவா லாரன்ஸின் ஹிட் பாகங்களான 'காஞ்சனா' சீரீஸ், நாலாவது பாகத்துடன் நிறைவடைகிறது என்ற தகவல் பரவி வருகிறது. இப்போது அவர் இயக்கி வரும் `காஞ்சனா 4' படம் 'முனி' பட வரிசையில் 5வது பாகமாகும். இதற்கிடையே 'பெ... மேலும் பார்க்க

"ஒரே கட்சியில இருந்து நிறைய பேர் முதல்வராக முயற்சி பண்றாங்க!" - கேரளா அரசியல் பற்றி ஆர்.ஜே. பாலாஜி

சூர்யா நடித்திருக்கும் 'கருப்பு' திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருக்கும் இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, இந்திரன்ஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ச... மேலும் பார்க்க

Rajinikanth: "அந்த அனுபவம் என் ஈகோவை உடைத்துவிட்டது!; அதுவே சுப்ரீம் ஸ்டார்டம்!" - ரஜினி கலகல

நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பை முழுவதுமாக முடித்துவிட்டார். அவர் நடிக்கவிருக்கும் படங்களும் அடுத்தடுத்து லைன் அப்பில் இருக்கின்றன. கூடிய விரைவில் அப்படங்களும் படப்பிடிப்பிற்கு டேக் ஆஃப் ஆ... மேலும் பார்க்க

Preethi Asrani: ``நதியில் நடக்கும் நிலவின் நகலே..."- ப்ரீத்தி அஸ்ரானி லேட்டஸ்ட் க்ளிக்ஸ்|Photo Album

Manju warrier: `பறக்கும் ராசாளியே...' - மஞ்சு வாரியார் ஸ்டைலிஷ் போட்டோஸ்| Photo Album மேலும் பார்க்க