’முதலமைச்சர் ஜோசப் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்’ – வானதி சீனிவாசன் சொல்லும் க...
Karuppu: "நானும் கடவுள் பக்தி உள்ளவன் தான், ஆனால்.!" - நடிகர் சூர்யா
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியாகயிருக்கும் படம் 'கருப்பு'.
ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு எனப் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் நாளை (மே 14) ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்திற்கான புரொமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய சூர்யா, " நான் எப்போதும் ஆர்.ஜே. பாலாஜியை 'இயக்குநர்' என்றுதான் அழைப்பேன். அவருடைய பயணத்தின் மீது எனக்குப் பெரும் மரியாதை உண்டு.

இந்த ஒரு வாழ்க்கையில், ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்தி, அதில் நிபுணத்துவம் பெறவே என்னால் முடியும் என்று நான் எப்போதும் நம்புபவன்.
ஆனால் அவரோ பல திறமைகளைக் கொண்டவர். ஆர்.ஜே, வர்ணனையாளர், நடிகர், எழுத்தாளர் மற்றும் இயக்குநர் எனப் பன்முகம் கொண்டவர். அதுமட்டுமின்றி அவர் ஒரு சிறந்த நண்பர் மற்றும் தந்தை. அவருடன் செலவிட்ட நேரத்தை நான் மிகவும் ரசித்தேன்.
நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் அதிசயம் நடக்கும். நானும் கடவுள் பக்தி உள்ளவன் தான், ஆனால் எனக்கு ஒரு கஷ்டம் வரும்போது மட்டுமே நான் கோயிலுக்குச் செல்வேன்.
ஆனால் ஆர்.ஜே. பாலாஜி எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும், அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் கடவுளுடன் இணைந்தே இருக்கிறார். அவர் எப்போதும் கடவுளுடன் உரையாடிக்கொண்டே இருக்கிறார்.

ஆர்.ஜே. பாலாஜியுடன் 30 நிமிடங்கள் பேசிய உடனேயே நான் ஒப்புக்கொண்ட படம் இது. 'கருப்பு' படத்தின் முதல் பாதி ஒரு நல்ல உணர்வுப்பூர்வமான கோர்ட்ரூம் டிராமாவாக (நீதிமன்ற நாடகம்) இருக்கும்.
ஆனால் இரண்டாம் பாதியில் நிறைய தியேட்டர் மொமென்ட்ஸ் மற்றும் மாஸ் மசாலா காட்சிகள் இருக்கும். அதோடு நகைச்சுவையும் கலகலப்பும் நிறையவே இருக்கும். படம் வெளியாவதற்கு முன்பாக நான் உங்களுக்குத் தரும் வாக்குறுதி இதுதான்" என்று பேசியிருக்கிறார்.
















