'குழந்தைகள் இல்லை... சிரிப்பும் இல்லை...' - அமைதியாகும் மெரினா ராட்டினங்கள்
Kimi K3: AI உலகின் புது பாய்ச்சல்... புதிய Subscription-களை தற்காலிகமாக நிறுத்திய Moonshot - காரணம்?
AI உலகில் போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ChatGPT-யை உருவாக்கிய OpenAI, Claude-ஐ உருவாக்கிய Anthropic, Gemini-யை உருவாக்கிய Google ஆகிய நிறுவனங்களுக்கு போட்டியாக, சீனாவின் Moonshot AI நிறுவனம் தனது புதிய AI மாடலான Kimi K3-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
வெளியான சில நாட்களிலேயே உலக தொழில்நுட்ப உலகின் கவனத்தை Kimi K3 ஈர்த்துள்ளது.
2023-ஆம் ஆண்டு பெய்ஜிங்கை தலைமையிடமாகக் கொண்டு, த்சிங்குவா பல்கலைக்கழகத்தில் (Tsinghua University) ஒன்றாகப் படித்த யாங் ஜிலின் (Yang Zhilin), ஜோ சின்யூ (Zhou Xinyu) மற்றும் வு யூஷின் (Wu Yuxin) ஆகியோரால் Moonshot AI நிறுவப்பட்டது. மனிதர்களைப் போல சிந்தித்து செயல்படும் பொது செயற்கை நுண்ணறிவை (Artificial General Intelligence - AGI) உருவாக்குவதே இந்த நிறுவனத்தின் நோக்கம்.

2023-லேயே Kimi Chatbot-ஐ அறிமுகப்படுத்திய Moonshot AI, K1.5, K2 போன்ற மாடல்களைத் தொடர்ந்து, தற்போது தனது மிகவும் சக்திவாய்ந்த AI மாடலான Kimi K3-ஐ வெளியிட்டுள்ளது.
Kimi K3 என்பது சாதாரண Chatbot அல்ல. Coding, Reasoning, ஆராய்ச்சி, Presentation உருவாக்குதல், நீண்ட ஆவணங்களைப் பகுப்பாய்வு செய்தல் போன்ற சிக்கலான பணிகளையும் மேற்கொள்ளும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
Kimi K3-ன் மிகப்பெரிய சிறப்பு Agentic AI. அதாவது, ஒரு பெரிய வேலையை பல சிறிய பணிகளாகப் பிரித்து, திட்டமிட்டு தானாகச் செயல்படும் திறன்.
உதாரணமாக, "ஒரு Mobile App உருவாக்கு" என்று சொன்னால், தேவைகளைப் புரிந்துகொள்வது, Code எழுதுவது, பிழைகளைச் சரிசெய்வது, Testing செய்வது என பல கட்டங்களில் உதவ முடியும்.
Kimi K3 அறிமுகமானதும் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்கள் பயன்படுத்தத் தொடங்கினர். அதிக வரவேற்பால் Moonshot AI-யின் கணினி வளங்கள் மீது அழுத்தம் ஏற்பட்டதால், புதிய Subscription-களை நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியதாக தகவல்கள் வெளியாகின.

DeepSeek-க்குப் பிறகு Kimi K3-ன் வருகை, AI துறையில் சீன நிறுவனங்கள் வேகமாக முன்னேறி வருவதை மீண்டும் நிரூபித்துள்ளது. குறிப்பாக Open-weight AI மாடல்களை வெளியிடுவதன் மூலம், உலகம் முழுவதும் உள்ள Developers புதிய AI பயன்பாடுகளை உருவாக்கும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது.
Kimi K3 வெறும் புதிய AI Chatbot அல்ல; AI உலகில் போட்டியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வந்துள்ள புதிய சக்தி. இதன் திறன்களால் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ள இந்த மாடல், எதிர்கால AI வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கருதுகின்றனர்.


















