செய்திகள் :

OnePlus ரசிகர்களுக்கு ஷாக்... இந்தியாவிலிருந்து வெளியேறுகிறதா OnePlus நிறுவனம்?

post image

ஒருகாலத்தில் 'குறைந்த விலையில் பிரீமியம் அனுபவம்' என்ற அடையாளத்துடன் ஸ்மார்ட்போன் சந்தையை அதிரவைத்த OnePlus, இன்று உலகம் முழுவதும் தனது எதிர்காலம் குறித்த கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய சூழலில் உள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பா சந்தைகளில் OnePlus தனது செயல்பாடுகளை நிறுத்தவுள்ளதாக வெளியான தகவல்கள், இந்தியப் பயனர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

மேலும், 2027-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிலிருந்தும் OnePlus வெளியேறலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

OnePlus-ன் தாய் நிறுவனமான OPPO, தனது உலகளாவிய வணிகத்தை மறுசீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, OnePlus அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் புதிய தயாரிப்புகளை நிறுத்தி, பின்னர் இந்தியா உள்ளிட்ட பிற சர்வதேச சந்தைகளிலிருந்தும் படிப்படியாக விலகும் திட்டத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Oneplus Nord 2T 5G
Oneplus Nord 2T 5G

2013-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட OnePlus, 'Never Settle' என்ற வாசகத்துடன் ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமானது. அதிக விலை கொண்ட போன்களுக்கு மாற்றாக, குறைந்த விலையில் அதே தரமான வசதிகளை வழங்கியதால், 'Flagship Killer' என்ற பட்டத்தைப் பெற்றது.

இந்தியாவில் OnePlus One, OnePlus 3, OnePlus 5, OnePlus 7 Pro, OnePlus Nord உள்ளிட்ட மாடல்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.

OnePlus-இன் கேமரா, Alert Slider வசதி, OxygenOS அனுபவம் மற்றும் அதிவேக Warp Charge / SuperVOOC சார்ஜிங் தொழில்நுட்பம் ஆகியவை அந்த நிறுவனத்தின் அடையாளங்களாகக் கருதப்படுகின்றன.

இதனால் OnePlus-க்கு மிகப்பெரிய பயனர் வட்டாரம் உள்ளது. குறிப்பாக, பிரீமியம் போன் சந்தையில் Samsung மற்றும் Apple-க்கு மாற்றாகப் பலரின் முதல் தேர்வாக OnePlus விளங்கியது.

OnePlus Nord 2

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மாற்றங்கள் நடைபெற்று வந்தாலும், இந்தியாவில் நிறுவனம் தனது செயல்பாடுகளைத் தொடரும் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இருப்பினும், OPPO-வின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் காரணமாக எதிர்காலத்தில் என்ன மாற்றங்கள் நிகழும் என்பது தொழில்நுட்ப உலகின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் உலகம் முழுவதும் உள்ள அதன் ரசிகர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.

விண்ணில் பாய்ந்த தனியார் ராக்கெட்; மோடியின் பாராட்டை பெற்ற பவன் குமார் சந்தனா! - யார் இவர்?

இந்தியாவின் விண்வெளித் துறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக, ஹைதராபாத்தைச் சேர்ந்த ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ (Skyroot Aerospace) என்ற தனியார் நிறுவனம் தனது முதல் Orbital ராக்கெட்டான 'விக்ரம்-1' ... மேலும் பார்க்க

போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்க AI தொழில்நுட்பம்; அசத்திய ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவர்கள்!

போக்குவரத்து விதிமீறல்களையும், அதனால் ஏற்படும் விபத்துகளையும் தடுப்பது காவல்துறைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. இந்த சவாலுக்கு அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் மிகக் குறைந்த செலவ... மேலும் பார்க்க

₹1.34 லட்சத்தில் BSNL-இன் புதிய சாட்டிலைட் போன்! இதை யார் வாங்க முடியும்? என்னென்ன நிபந்தனைகள்?

மொபைல் நெட்வொர்க் சிக்னலே இல்லாத அடர்ந்த காடு, மலை உச்சி அல்லது நடுக்கடல் போன்ற இடங்களில் மாட்டிக்கொண்டால் என்ன செய்வது? இந்த கேள்விக்கு ஒரு சூப்பரான பதிலுடன் களமிறங்கியிருக்கிறது அரசுக்கு சொந்தமான BS... மேலும் பார்க்க

`பிரைவசிக்கு ஓகே, ஆனா பாதுகாப்புக்கு?' - வாட்ஸ்அப்பின் Username அப்டேட் குறித்து ஒரு விரிவான அலசல்!

நம்முடைய பிரைவசி ரொம்ப முக்கியம்தான், ஆனால் அதுவே நமக்கு ஆபத்தாக மாறினால்? இப்படி ஒரு கேள்வியைத்தான் வாட்ஸ்அப் கொண்டு வரவிருக்கும் புதிய 'யூசர்நேம்' (Username) அப்டேட் எழுப்பியிருக்கிறது. பயனர்களின் ப... மேலும் பார்க்க

`இது மெகா AI தொழில்நுட்ப திருட்டு; வெட்கமின்றி.!' - சீனாவின் அலிபாபா நிறுவனத்தைச் சாடும் ஆந்த்ரோபிக்

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக், சீனாவின் தொழில்நுட்பப் பெரு நிறுவனமான அலிபாபா மீது ஒரு கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அலிபாபா நிறுவனம், தங்களது 'கி... மேலும் பார்க்க

Venezuela Earthquakes: நிலநடுக்கத்தை போன் மூலம் முன்கூட்டியே அறியலாமா? கூகுள் தரும் தொழில்நுட்பம்!

ஜூன் 24, 2026 அன்று வெனிசுலாவில் 7.1 & 7.5 என்ற ரிக்டர் அளவுகோலில் அடுத்தடுத்து இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அந்த நிலநடுக்க அதிர்வுகள் மக்களைத் தாக்குவதற்கு சில நொடிகள் முன்பாகவே, அங்குள்... மேலும் பார்க்க