செய்திகள் :

Linkedin-ல் 'Fielding Coach'-ஐ தேடும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் - என்ன சொல்கிறார்கள்?

post image

நாம் வேலை தேடுவது, நிறுவனங்கள் நம்மை வேலைக்குத் தேடுவது, வேலை குறித்து அப்டேட்களைப் போஸ்ட் செய்வது என முழுக்க முழுக்க வேலை சம்பந்தமாக இயங்கும் ஓர் ஆப் - லிங்க்ட்இன்.

இந்த ஆப்பில் சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ‘ஃபீல்டிங் கோச்’-ற்கான காலிப்பணியிடத்தை அறிவித்து போஸ்ட் வெளியிட்டுள்ளது.

அந்த போஸ்ட்...

“வேலைவாய்ப்பு அறிவிப்பு!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB)

பதவி: ஃபீல்டிங் கோச் (சிவப்பு மற்றும் வெள்ளைப் பந்து)

பாகிஸ்தான் ஆண்கள் தேசிய கிரிக்கெட் அணியில் பணியாற்றுவதற்கு, அனுபவமும் திறமையும் கொண்ட ஃபீல்டிங் கோச் ஒருவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தேடுகிறது.

PCB போஸ்ட்
PCB போஸ்ட்

பாகிஸ்தான் தேசிய அணி வீரர்களின் ஃபீல்டிங் திறன்களை மேம்படுத்துவதிலும், அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதிலும் இந்த ஃபீல்டிங் கோச்சின் பங்கு மிகவும் முக்கியமானது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பற்றி: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிப்பது, அதை மேம்படுத்துவது மற்றும் சர்வதேச அளவில் போட்டிகளை நிர்வகிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

> தேவையான கல்வித்தகுதி, திறன்கள் மற்றும் அனுபவம்: குறைந்தபட்சம் ‘Level II Cricket Coaching Accreditation’ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

> திறமைமிக்க சர்வதேச வீரர்கள், தேசிய அளவிலான அணிகள் அல்லது ஃபிரான்சைஸ் அணிகளுடன் ஃபீல்டிங் சார்ந்த பணிகளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

> ஃபீல்டிங் நுட்பங்கள், போட்டிப் பகுப்பாய்வு மற்றும் வீரர்களின் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றில் சிறந்த புரிதல் அவசியம்.

> நவீன ஃபீல்டிங் நுட்பங்களை உருவாக்க சர்வதேச அளவில் நடைமுறையில் உள்ள அமைப்புகள் மற்றும் முறைகளைக் கண்காணித்து மதிப்பிடுவதில் அனுபவம் வேண்டும்.

> சர்வதேச தரத்திற்கு ஏற்ப கிரிக்கெட் வீரர்களுக்கு வெற்றிகரமாகப் பயிற்சி அளித்த அனுபவம்.

> சிறந்த திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் செயல்படுத்தும் திறன்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

> வலுவான நிர்வாகத் திறன்.

> பல்வேறு பின்னணிகளைக் கொண்ட நபர்களுடன் இணைந்து சிறப்பாகப் பணியாற்றும் திறன்.

> சிக்கல்களுக்குத் தீர்வு காணும் திறனுடன் கூடிய சிறந்த பகுப்பாய்வுத் திறன்.

> Microsoft Office Suite மற்றும் பயிற்சி சார்ந்த சாஃப்ட்வேர் பற்றிய அறிவு கூடுதல் தகுதியாகக் கருதப்படும்.

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 9, 2026 மாலை 5.00 மணிக்குள் பின்வரும் இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.”

கமென்ட்ஸ்...

இந்த போஸ்ட்டிற்கு, ‘பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தினாலேயே தகுதியுள்ள நபரை ஷார்ட்லிஸ்ட் செய்ய முடியவில்லை’, ‘எதற்காக இதை போஸ்ட் செய்கிறீர்கள், யாரையாவது கோச் ஆக நியமிக்க வேண்டியதுதானே?’, ‘ஆச்சரியமாக இருக்கிறதே, ரெக்கமெண்டேஷன் இல்லாமல் மெரிட் மூலம் தேர்வு நடக்கிறதா?’ போன்ற கலவையான கமென்ட்டுகள் குவிந்துகொண்டிருக்கின்றன.

சச்சினின் சாதனையை நெருங்கும் ஜோ ரூட்... “முறியடிக்க நல்ல வாய்ப்பு இருக்கு” – விவ் ரிச்சர்ட்ஸ்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் சச்சின் டெண்டுல்கர். இவர் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 15,921 ரன்கள் அடித்துள்ளார். இந்த சாதனையை முறியடிக்கவே முடியா... மேலும் பார்க்க

Powerlifting: சர்வதேச போட்டியில் 4 தங்கப் பதக்கங்கள்; இந்தியாவுக்கு பெருமை சேர்த்த 17 வயது மதுரா கர்

தென்னாப்பிரிக்காவின் சன் சிட்டியில் நடைபெற்ற 2026 ஐ.பி.எஃப் உலக சப்-ஜூனியர் பவர்லிஃப்ட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் இளம் வீராங்கனை மதுரா கர் நான்கு தங்கப் பதக்கங்களை வென்று உலக சாம்பியனாக... மேலும் பார்க்க

140 கிலோ தூக்கி உலகையே திரும்பி பார்க்கவைத்த Keyaa Banerji; வைரலுக்கு பின்னால் இப்படியோர் அதிர்ச்சி!

45.7 கிலோ உடல் எடை… 140 கிலோ Deadlift! இந்த அசாத்திய சாதனையைச் செய்து சமூக வலைதளங்களில் வைரலானவர் இந்திய பவர்லிஃப்டர் Keyaa Kunal Banerji.21 வயதான கேயா, தென்னாப்பிரிக்காவின் Sun City-யில் நடைபெற்ற 202... மேலும் பார்க்க

ஒரே இன்னிங்ஸ்... இரண்டு உலக சாதனைகள் - வரலாறு படைத்த Smriti Mandhana!

துபாயில் நடைபெற்ற மகளிர் டி20 ஆசியக் கோப்பை போட்டியில், ஹாங்காங்கிற்கு எதிரான ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய இந்தியாவின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, 124 ரன்கள் குவித்து சாதனைப் படைத்துள்ளார். இதன் ம... மேலும் பார்க்க

மத்திய ஆசியாவின் ஒலிம்பிக்: கிர்கிஸ்தானில் தொடங்கிய 2026 உலக நாடோடி விளையாட்டுப் போட்டிகள்!

நவீன உலகிற்கு மத்தியில், தனது பழம்பெரும் கலாசாரத்தையும் வீரத்தையும் பறைசாற்றுகிறது 'உலக நாடோடி விளையாட்டு போட்டிகள்' (World Nomad Games). 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 6 வரை கிர்கிஸ்தான் ந... மேலும் பார்க்க

’அடுத்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே வலுவான கம்பேக் கொடுக்கும்’ - ருதுராஜ் கெய்க்வாட்

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சி.எஸ்.கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, “சி.எஸ்.கே அணியின் கேப்டனாகப் பொற... மேலும் பார்க்க