செய்திகள் :

Lockup Death: ரூ.192 மதிப்புள்ள குட்காவுக்காக நடந்த கைது; சிறையில் நடந்த கொடூரம் - FIR விவரம்!

post image

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈத்தன்காடு பகுதியைச் சேர்ந்த சபரிவர்மன்(35) வீட்டுக்கு அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்பனை செய்ததாக கடந்த 9-ம் தேதி தென் தாமரைக்குளம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். 12-ம் தேதி இரவு அவர் தாக்கப்பட்டுள்ளார், 13-ம் தேதி அதிகாலையில் உயிரற்ற உடல் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. சபரிவர்மனை தாக்கியதாக சிறை வார்டன்கள் 3 பேர் மற்றும் 8 சிறைக் கைதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். முதல்வர் பதிலளிக்கும்வரை சபரிவர்மனின் உடலை வாங்கமாட்டோம் என அவரது குடும்பத்தினர் 4 நாட்களை கடந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேசமயம் 9-ம் தேதி அவர்மீது பதியப்பட்ட வழக்கு குறித்த விபரங்கள் முதல் தகவல் அறிக்கை (FIR) மூலம் தெரியவந்துள்ளது. 09-07-2026 அன்று ​தென்தாமரைகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரைட் பிளஸிங், தலைமை காவலர்கள் ஞானபிலிப்பு, சுயம்புலிங்கம் மற்றும் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்களாம். அப்போது ஈத்தன்காடு கீழத்தெருவில் உள்ள சபரிவர்மனின் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில் போலீஸார் கடையில் சோதனை செய்ய அனுமதி கேட்டார்களாம், கடையின் உரிமையாளரான சபரிவர்மன் தானாக முன்வந்து ஒப்புக்கொண்டதுடன், குட்கா பாக்கெட்டுகளை அவரே எடுத்து ஆஜர்படுத்தினாராம்.

சபரி வர்மனின் குடும்பத்தினர்
சபரி வர்மனின் குடும்பத்தினர்

எவ்வளவு குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்ற விபரமும் எஃப்.ஐ.ஆரில் உள்ளது. தலா 15 கிராம் எடைகொண்ட புகையிலை – 11 பாக்கெட்டுகளும், தலா 12.6 கிராம் எடைக்கொண்ட C****p – 4 பாக்கெட்டுகளையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இதன் மதிப்பு 192 ரூபாய் என அந்த எஃப்.ஐ.ஆரிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு வேறு யாரும் சாட்சியாக முன்வராததால் உடன்சென்ற போலீஸாரையே சாட்சியாக மாற்றி சபரிவர்மனை கைதுசெய்துள்ளார் எஸ்.ஐ பிரைட் பிளஸிங். அதன்பிறகு அன்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் நடந்த தாக்குதலில் சபரிவர்மன் இறந்துள்ளார்.

மரணமடைந்த சபரி வர்மன்
மரணமடைந்த சபரி வர்மன்

எஃப்.ஐ.ஆரின் அடிப்படையில் பார்த்தால் 192 ரூபாய் மதிப்புள்ள, சுமார் 215.4 கிராம் எடைகொண்ட குட்காவுக்காக சபரிவர்மன் கைதுசெய்யப்பட்டுள்ளார். தென் தாமரைக்குளம் போலீஸார் மாதம் 25,000 ரூபாய் மற்றும் 12 சிகரெட் பாக்கெட்டுகள் லஞ்சமாக கேட்டதாக சபரிவர்மனின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியிருந்தனர். இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த தென் தாமரைக்குளம் எஸ்.ஐ பிரைட் பிளஸிங் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொள்ளாச்சி: ரூ.70,000 லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ கைது - அதிர்ச்சி பின்னணி!

திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவரது கணவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரிடம், இரு சக்கர வாகனத்தை அடமானமாக வைத்து பணம் பெற்றுள்ளார். இத... மேலும் பார்க்க

அமைச்சர்கள் வழங்கிய உதவியை பெற மறுத்த சபரிவர்மன் குடும்பத்தினர்; மரண சந்தேகங்களை தீர்க்க கோரிக்கை!

கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈத்தன்காடு, நாராயணன்புதூரை சேர்ந்த சபரிவர்மன் (35) சிறையில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மாற்றுத்திற... மேலும் பார்க்க

சென்னை: ரூ.11 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் - டிராவல்ஸ் அதிபர் சிக்கிய பின்னணி!

சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அதன்படி 15.7.2026-ம் தேதி திருவல்லிக்கேணி, தசூதீன்கான் தெருவில் உள்ள லாட்ஜிக்கு தனிப்படை போலீஸா... மேலும் பார்க்க

சென்னை: குட்கா வழக்கில் கைதானவர் சிறையில் உயிரிழப்பு - காவல் நிலையம் முற்றுகை

சென்னை சேலையூர், ஜானகிராமன் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (44). இவர் மீது சேலையூர் போலீஸார் குட்கா வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் பாலாஜியின் கூட்டாளியான ராமநாதன் என்பவரும் கைது செய்ய... மேலும் பார்க்க

சென்னை: ரயில் நிலையத்தில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த மின்வாரிய ஊழியர் - சிக்கியது எப்படி?

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 32 வயதான பெண் ஒருவர், குடும்பத்துடன் கேரளாவில் வசித்து வருகிறார். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு மேற்கு வங்காளத்துக்குச் சென்றார். பின்னர், ரயில் மூலம் கேரளாவுக்குச் ச... மேலும் பார்க்க

Lockup Death: உடலை வாங்காமல் 4 நாள்களாகப் போராடும் சபரிவர்மன் குடும்பம்; எஸ்.ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் அருகே ஈத்தங்காட்டைச் சேர்ந்தவர் 35 வயதான மாற்றுத்திறனாளி சபரி வர்மன். இவர் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்றதாகக் கூறி கடந்த ஜூலை 9-ம் தேதி தென் தாமரைக்குளம... மேலும் பார்க்க