செய்திகள் :

Love Always: "என்னுடைய முதல் வெப் சீரிஸ்!"- கொரிய வெப்டூனை தழுவி எடுக்கப்பட்ட சீரிஸில் நடிகை ஜெயசுதா

post image

'வல்லமை தாராயோ', 'கே.டி என்கிற கருப்புதுரை' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் உருவாகியிருக்கிறது 'லவ் ஆல்வேஸ்' வெப் சீரிஸ். இதில் நடிகை கௌரி கிஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அத்தோடு, ஜெயபிரகாஷ், ஜெயசுதா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இம்மாதம் 30-ம் தேதி இந்த சீரிஸ் வெளியாகிறது. கொரிய மொழியில் வெளியான 'ஹியர் வி கோ அகைன்' என்கிற பிரபல வெப்டூனை தழுவி இந்த சீரிஸ் எடுக்கப்பட்டிருக்கிறதாம்.

Director Madhumitha
Director Madhumitha

இந்த சீரிஸ் குறித்து நடிகை கௌரி கிஷன், " 'லவ் ஆல்வேஸ்' ஒரு புதுமையான கதைக் களம். அதே சமயம், நகைச்சுவை, உறவுகள் பற்றிய விஷயங்கள் என பலவும் இதில் இருக்கின்றன. அவை நமக்கு நெருக்கமாகும் வகையிலும் சொல்லப்பட்டிருக்கின்றன.

உறவுகளைப் புதிய கோணத்தில் பார்க்க வேண்டும் என இக்கதையில் சொல்லப்பட்டதுதான் என்னை இந்த சீரிஸுக்குள் கொண்டு வந்தது.

கலகலப்பான விஷயங்களோடு காதல், குடும்பம், ஏக்கம், வாழ்க்கை தரும் இரண்டாவது வாய்ப்பு என இதயத்தைத் தொடும் அம்சங்கள் நிறைந்துள்ளன.

ரசிகர்கள் இந்த உணர்வுப்பூர்வமான பயணத்தைக் கண்டு, கதாபாத்திரங்களின் பல்வேறு கோணங்களை ரசிக்கப்போவதைப் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்." எனப் பகிர்ந்திருக்கிறார்.

Love Always Webseries
Love Always Webseries

இந்த சீரிஸ் குறித்து நடிகை ஜெயசுதா, "'லவ் ஆல்வேஸ்' தொடர் ஓர் அழகான கதையைக் கொண்ட சீரிஸ். இக்கதை மிகச் சுவாரஸ்யமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

இத்தொடர் பல்வேறு தலைமுறைகளை ஒன்று சேர்த்து, உறவுகளைப் பற்றிய அவர்களின் பார்வையை விளக்கியது எனக்கு இக்கதையில் பிடித்திருந்தது.

இது எனது முதல் வெப் சீரிஸ் என்பதால், நாங்கள் இதை உருவாக்கும்போது ரசித்து நடித்த அளவுக்கு ரசிகர்களும் இதனை ரசிப்பார்கள்." எனப் பேசியிருக்கிறார்.

காக்கா முட்டை : வர்க்க அரசியல்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 30

`சினி'ஸ்கோப் 30காக்கா முட்டைசின்ன காக்கா முட்டை, பெரிய காக்கா முட்டை என்றழைக்கப்படும் அண்ணன் தம்பிகளான இரண்டு சிறுவர்கள் சென்னையின் குடிசைப் பகுதியொன்றில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு ஒரு நண்பன் இருக்கி... மேலும் பார்க்க

Baththa: "சாய் அபயங்கர் நெப்போ கிட் கிடையாது; அவன் கடவுளின் குழந்தை!" - அட்லீ

விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் 'பத்தா' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அட்லீ தயாரித்துள்ள இந்தப் படத்திற்குச் சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். இ... மேலும் பார்க்க

Baththa: "இவர் இன்னும் நிறைய காசு சம்பாதிக்கணும்!" - 'பத்தா' சக்சஸ் மீட்டில் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் 'பத்தா' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அட்லீ தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். இன்... மேலும் பார்க்க

Baththa: "அந்த சீன்ல உண்மையாவே அழுதுட்டேன்!" - 'பத்தா' சபரியாக நடித்த சாய் ப்ரித்விராஜ்

விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் 'பத்தா' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அட்லீ தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். இந்... மேலும் பார்க்க

Jailer 2: "இன்னைக்கு என்னென்னைக்கும் ஒரு தலைவன்தான்!" - 'ஜெயிலர் 2' டிரெய்லர் ஹைலைட்ஸ்

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர்' திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகியிருந்தது. அப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக உருவானது 'ஜெயிலர... மேலும் பார்க்க

மொத ராத்திரி: "எழுந்து நின்று கைதட்டி மரியாதை செய்கிறேன்" - நடிகர் மாதவன்

அறி​முக இயக்​குநர் ராஜா கருப்​ப​சாமி இயக்​கத்​தில் ரிஷி​காந்த், அனிஷ்மா அனில்​கு​மார், சேத்​தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் ‘மொத ராத்​திரி’. மைத்ரி மூவி மேக்​கர்ஸ் தயாரித்திருந்த இப்​... மேலும் பார்க்க