'வந்தே மாதரம்' மசோதா: `நாட்டை பிளவுப்படுத்தும் நீங்கள்தான் உண்மையான தேசத்துரோகி'...
Madhampatty Rangaraj: `ராகா ரங்கராஜுக்கு துணை நிற்பேன்!' - உண்மையை உடைத்த மாதம்பட்டி ரங்கராஜ்
ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிறிஸ்டில்டா, தானும் மாதம்பட்டி ரங்கராஜும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதாகவும், தன்னுடைய குழந்தைக்கு அவர்தான் தந்தை எனவும் கூறியிருந்தார்.
பிறகு, தங்களுக்குள் நடந்த திருமணத்தை மறைக்க முயல்வதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஜாய் கிறிஸ்டில்டா, தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும், மாதம்பட்டி ரங்கராஜிடமிருந்து ஜீவனாம்சம் வேண்டும் என்றும் கோரி சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இந்நிலையில், ஜாய் கிறிஸ்டில்டாவுக்கும் தனக்கும் பிறந்த மகன்தான் இவர் என்றும், தந்தையாக அத்தனை கடமைகளையும் தான் கவனித்துவருவதாகவும், மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `எனது மகன் ராகாவிற்கு, ஒரு தந்தையாகச் செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் கடந்த ஆறு மாதங்களாக முழுப் பொறுப்புடனும் அன்புடனும் செய்து வருகிறேன்.
இனி, என் வாழ்நாள் முழுவதும் ராகா ரங்கராஜின் நலன், மகிழ்ச்சி மற்றும் எதிர்காலத்திற்காக முழுப் பொறுப்புடனும் அன்புடனும் துணை நிற்பேன் என்பதை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துக்கொள்கிறேன்' எனத் தெரிவித்திருக்கிறார்.
#madhampattyrangarajpic.twitter.com/PVHZ4ed1XL
— Madhampatty Rangaraj (@MadhampattyRR) July 30, 2026
குழந்தையுடன் மாதம்பட்டி ரங்கராஜ் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பதிவிட்ட ஜாய் கிறிஸ்டில்டா, "அப்பாவும் மகனும்! ஒரு தாயின் இதயம் இப்போதுதான் அமைதியடைந்துள்ளது" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

















