செய்திகள் :

Meta: 8000 பேரைப் பணிநீக்கம் செய்யும் மெட்டா; விருப்ப ஓய்வு தரும் மைக்ரோசாஃப்ட்; காரணம் என்ன?

post image

தனது நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் மொத்த பணியாளர்களில் 10 சதவிகித ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக மெட்டா நிறுவனம் அறிவித்திருக்கிறது.

அதே சமயம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், தனது நிறுவனத்தின் ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோருக்குத் தாமாக முன்வந்து பணியில் இருந்து விலக வலியுறுத்தியிருக்கிறது.

மெட்டா | பணிநீக்கம்
மெட்டா | பணிநீக்கம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் 'மெட்டா' தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சுமார் 78,865 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு மற்றும் அதிகம் ஊதியம் பெறும் செயற்கை நுண்ணறிவு நிபுணர்களைப் பணியமர்த்துவதால் ஏற்படும் கூடுதல் செலவினங்கள் உள்ளிட்ட காரணங்களால் தங்களது நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களில் 10 சதவிகிதம் அதாவது 8 ஆயிரம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

மேலும், காலியாக உள்ள 6,000 பணியிடங்களை நிரப்பப் போவதில்லை என்றும் அறிவித்திருக்கிறது.

அதே சமயம், மைக்ரோசாப்ட் நிறுவனம் நேரடியாகப் பணிநீக்கம் செய்யாமல், பணியாளர்கள் தாங்களாகவே முன்வந்து விலகும் 'விருப்ப ஓய்வு' (Voluntary Buyouts) திட்டத்தை வலியுறுத்திவருகிறது.

மைக்ரோசாஃப்ட் | பணிநீக்கம்
மைக்ரோசாஃப்ட் | பணிநீக்கம்

சுமார் 7 சதவிகிதம் கிட்டத்தட்ட 8,750 பேர் இந்த விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் வெளியேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது.

வெளியேறும் ஊழியர்களுக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பெரிய அளவிலான தொகையும், சிறப்பு சலுகைகளையும் கொண்ட இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்திருக்கிறது.

இந்த நிறுவனங்களின் பணிநீக்கம் டெக் துறை ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

John Ternus: ஆப்பிள் சிஇஓ பதவியிலிருந்து விலகும் டிம் குக்; புதிய தலைவராக ஜான் டெர்னஸ் நியமனம்!

டிம் குக் ஓய்வுஆப்பிள் நிறுவனத்தில் கடந்த 15 ஆண்டுகளாகத் தலைமைச் செயலதிகாரியாகப் பணியாற்றி வரும் டிம் குக், வரும் செப்டம்பர் 1, 2026 அன்று அப்பதவியிலிருந்து ஓய்வு பெற உள்ளார். அவருக்குப் பதிலாக, நிறுவ... மேலும் பார்க்க

AI மீது 'மாயக் காதல்': அமெரிக்கத் தொழிலதிபர் தற்கொலை - கூகுள் மீது வழக்கு

இன்று உலகமே உள்ளங்கையில் சுருங்கிவிட்டதாக நம்பும்படி ஏஐ உலகம் உருவாகியிருக்கிறது. குறிப்பாக ஜெமினி, சாட் ஜிபிடி போன்ற நேரடி உரையாடல் அனுபவம் பெரும் அளவில் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், அவை இன்னொரு ஆபத்... மேலும் பார்க்க

வாகனத்தின் டயர் தேய்ந்துவிட்டதா... கண்டுபிடிப்பது எப்படி? - இது தெரியாமப் போச்சே?! - 18

புதிதாக டயர் வாங்கும்போது அல்லது காரைச் சுத்தம் செய்யும்போது, டயரின் இடுக்குகளில் சிறிய ரப்பர் கோடுகள் அல்லது மேடுகளை நீங்கள் கவனித்திருக்கலாம். இவை வெறும் அலங்காரத்திற்காக உருவாக்கப்பட்டவை அல்ல.டயரின... மேலும் பார்க்க

Google Pay-ல் 'Pocket Money' ஆப்ஷன்: க்ளிக் செய்தால் மொத்த பணமும் காலியா? |Explainer & Fact Check

லேட்டஸ்ட் அப்டேட் 'கூகுள் பே'-யில் இப்போது 'People' பிரிவில், முதல் வரிசையில் முதல் ஐகானே, 'Pocket Money' என்ற ஒன்று புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஐகான் குறித்து தற்போது ஆடியோ ஒன்று பகிரப்பட்டு வர... மேலும் பார்க்க

1972 Vs 2026: தொழில்நுட்பம் மாறினாலும் மாறாத பூமியின் வசீகரம் - நாசாவின் வரலாற்றுப் பதிவு!

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, 'அப்போலோ' விண்கலத்தில் சென்ற வீரர்கள் நிலவில் கால் தடம் பதித்தபோது, ஒட்டுமொத்த உலகமே வியப்பில் உறைந்து போனது. அந்த வரலாற்றுத் தருணத்திற்குப் பிறகு, மீண்டும் மனிதர்களை நி... மேலும் பார்க்க

QR Code: ஸ்கேன் செய்யும் கறுப்பு வெள்ளைப் படத்தின் ரகசியம் என்ன? - இது தெரியாமப் போச்சே?! - 13

நாம் தினமும் QR Code ஸ்கேன் செய்கிறோம். கறுப்பு , வெள்ளை கலந்த அந்தப் படம் எப்படி வேலை செய்கிறது என்று தெரியுமா? ஸ்கேனர் எப்போதும் கறுப்பு வரிகளைப் படிக்காது, அவற்றுக்கு இடையே உள்ள வெள்ளை இடைவெளியைத்த... மேலும் பார்க்க