பொங்கல் பண்டிகை: இந்த ஆண்டு சிறப்பு என்ன? - பொங்கல் பானை வைக்க நல்ல நேரம் எது?
Miracle Baby: இத்தாலி கிராமம் - 30 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்துள்ள குழந்தை; இதுவரை ஏன் பிறப்பில்லை?
இத்தாலியில் உள்ள சிறிய மலைக்கிராமம் பாக்லியாரா டெய் மார்சி (Pagliara dei Marsi). இங்கே கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை பிறந்துள்ளது. இது அந்த கிராம மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கிராமத்தில் கடந்த மூன்று தசாப்தங்களாக குழந்தை பிறப்பு இல்லை. இதற்குக் காரணம் எந்த மருத்துவ அல்லது சுற்றுச்சூழல் பிரச்னையும் அல்ல. வேலை மற்றும் கல்வி வாய்ப்புகளுக்காக இளம் வயதினர் நகரங்களுக்கு இடம்பெயர்ந்ததன் விளைவாக, இந்தக் கிராமத்தில் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வந்துள்ளது.

தற்போது இந்த கிராமத்தில் வசிப்போர் எண்ணிக்கை சுமார் 20 பேர் மட்டுமே; பெரும்பாலோர் முதியவர்கள்.
இந்தச் சூழலில், 2025 மார்ச் மாதத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு லாரா புஸ்ஸி டிராபுக்கோ என்று பெயரிடப்பட்டுள்ளது.
அவளது பெற்றோர் பாவ்லோ புஸ்ஸி (56) மற்றும் சின்சியா டிராபுக்கோ (42). இருவரும் முன்பு நகரத்தில் வசித்து வந்தவர்கள்.
பின்னர் கிராம வாழ்க்கையைத் தேர்வு செய்து அங்கு குடியேறி குடும்பம் நடத்த தொடங்கியுள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிராமத்தில் பிறந்த குழந்தையாக இருப்பதால், மக்கள் அவளை 'மிராக்கிள் பேபி' என்று அழைக்கின்றனர்.
தேவாலயத்தில் நடைபெற்ற பெயர் சூட்டு விழாவில், கிராம மக்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற குழந்தை தொடர்பான நிகழ்வாக இது அமைந்துள்ளது.
இந்தச் சம்பவம், இத்தாலியில் குறைந்து வரும் பிறப்பு விகிதம் மற்றும் கிராமப்புற மக்கள் தொகை சரிவு போன்ற பிரச்சினைகளை மீண்டும் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இத்தாலியின் பிறப்பு விகிதம் குறைந்த நிலையில் உள்ளது. குறிப்பாக சிறிய கிராமங்கள் காலப்போக்கில் வெறிச்சோடிப் போகும் அபாயத்தை எதிர்கொள்கின்றன.


















