செய்திகள் :

கடும் வீழ்ச்சியில் இந்திய ரூபாய்; RBI தலையிட்டு நிலைமையை சரிசெய்யாதது ஏன்? - சஞ்சய் மல்ஹோத்ரா பதில்

post image

சமீப காலங்களில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பெரும் வீழ்ச்சியைக் கண்டது.

இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்குக் காரணம் என்ன? இதனால், இந்தியாவின் பொருளாதாரத்திற்கு ஏதாவது பாதிப்பு உண்டா? - போன்ற கேள்விகளுக்கு NDTV சிறப்பு நேர்காணலில் பதில் அளித்திருக்கிறார் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா.

``இந்திய ரூபாயின் மதிப்பில் ஏன் இந்திய ரிசர்வ் வங்கி தலையிடவில்லை?"

``இந்திய ரூபாய் மதிப்பு மீதான இந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கை பல ஆண்டுகளாக ஒரே நிலையில் நிலைத்து நிற்கிறது.

இந்திய ரிசர்வ் வங்கி நாணய சந்தையை நம்புகிறது.

இந்திய ரூபாயின் மதிப்பை டிமாண்ட் மற்றும் சப்ளை முடிவு செய்ய வேண்டுமே தவிர, இந்திய ரிசர்வ் வங்கி அல்ல."

இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி

``இந்திய ரூபாயின் மதிப்பு இந்திய பொருளாதாரத்தைப் பாதிக்கிறதா?"

``இந்திய பொருளாதாரம் வலுவாக இருக்கிறது. இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது… பணவீக்கமும் கட்டுக்குள் உள்ளது.

இந்தியாவிடம் கிட்டத்தட்ட 690 பில்லியன் டாலர்கள் அளவிற்கு அந்நிய செலாவணி கையிருப்பு உள்ளது.

இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறையும் கட்டுக்குள் தான் இருக்கிறது.

ஆக, இந்தியாவின் பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக நன்றாக உள்ளது."

``இந்திய ரூபாய் மதிப்பில் ஏன் நிலையற்றதன்மை நிலவுகிறது?"

``சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு எப்போதும் ஒரே திசையில் இருக்காது. ஏற்றத் தாழ்வுகள் இருக்கத் தான் செய்யும்.

நீண்ட கால அடிப்படையில், இந்திய ரூபாயின் மதிப்பு 3 சதவிகிதம் குறைந்துள்ளது. இது இயல்பானது தான்”.

"பிள்ளைகளை நம்பலாமா?" - ஓய்வுக்கு முன் நீங்கள் கேட்க வேண்டிய 5 கேள்விகள்!

நீங்கள் வாழ்நாள் முழுவதும் குடும்பத்திற்காக ஓயாமல் உழைத்தவர். ஆனால், ஓய்வுக்காலம் என்று வரும்போது, "இனி என் செலவுக்கு யாரை எதிர்பார்ப்பது?" என்ற கேள்வி உங்களுக்குள் எழுகிறதா?இந்தியாவில் ஓய்வுக்கால வாழ... மேலும் பார்க்க