செய்திகள் :

MP DEVELOPERS நிறுவனத்தின் பிராண்ட் தூதராக சமந்தா ரூத் பிரபு நியமனம்!

post image

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு தரமான மற்றும் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்ட குடியிருப்புகளை உருவாக்கி வரும் MP Developers, தனது அடுத்தகட்ட வளர்ச்சிப் பயணத்தின் முக்கியமான அடையாளமாக, பிரபல நடிகை சமந்தா ரூத் பிரபுவை (Samantha Ruth Prabhu) நிறுவனத்தின் பிராண்ட் தூதராக(Brand ambassador) அதிகாரப்பூர்வமாக வரவேற்றுள்ளது.

குறிப்பாக, MP Developers நிறுவனமும், சமந்தா ரூத் பிரபுவும் இருவரும் சென்னையின் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது இந்த கூட்டணிக்கு மேலும் தனிச்சிறப்பையும் உணர்வுப்பூர்வமான இணைப்பையும் வழங்குகிறது.



“சென்னையின் வேர்களிலிருந்து உலகளாவிய வளர்ச்சியை நோக்கி – From Chennai Roots to Global Reach” என்ற MP Developers நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு, சமந்தாவின் இணைவு புதிய உத்வேகத்தை வழங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட MP Developers, கடந்த 14 ஆண்டுகளில் 250-க்கும் மேற்பட்ட திட்டங்களை நிறைவு செய்து, 3,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. மேலும், 1.5 மில்லியன்+ சதுர அடி பரப்பளவில் பல்வேறு குடியிருப்பு திட்டங்களை சென்னை மற்றும் கோயம்புத்தூர் - யிலும் தற்போது உருவாகி வருகின்றன.

வீடு என்பது வெறும் கட்டிடம் அல்ல; அது ஒரு குடும்பத்தின் எதிர்கால கனவுகளுக்கான அடித்தளம் என்ற நம்பிக்கையுடன், சிறந்த இருப்பிடம், திட்டமிடப்பட்ட வடிவமைப்பு, கட்டுமானத் தரம் மற்றும் வாடிக்கையாளர்களின் நீண்டகால மதிப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு MP Developers செயல்பட்டு வருகிறது.

“Growth Guarantee Homes” – வீட்டுடன் இணையும் எதிர்கால வளர்ச்சி

MP Developers அறிமுகப்படுத்தியுள்ள “Growth Guarantee Homes” என்ற அணுகுமுறை, வீடு வாங்குவதை ஒரு வாழ்க்கைத் தேவையாக மட்டுமல்லாமல், எதிர்காலத்தை உருவாக்கும் ஒரு புத்திசாலித்தனமான முடிவாகவும் பார்க்கிறது.

வளர்ச்சிக்கான அதிக வாய்ப்புள்ள பகுதிகள், சிறந்த இணைப்பு வசதிகள், திறமையான இடப் பயன்பாடு, உயர்ந்த UDS, அதிக FSI சாத்தியம் மற்றும் நடைமுறை சார்ந்த வீட்டு வடிவமைப்பு ஆகியவை MP Developers நிறுவனத்தின் முக்கிய தனித்துவ அம்சங்களாக உள்ளன.



இதுகுறித்து MP Developers நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. பிரவீன் மலிநெனி (Mr. Praveen Malinani) கூறுகையில்:

“MP Developers நிறுவனத்தின் 14 ஆண்டுகால பயணத்தில், இன்று ஒரு முக்கியமான புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறோம். 250-க்கும் மேற்பட்ட திட்டங்கள், 3,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் நம்பிக்கை என எங்கள் பயணம் தொடர்ந்து வளர்ந்து வருகிறது.

இந்த புதிய கூட்டணியின் மூலம் MP Developers நிறுவனத்தின் பிராண்ட் அடையாளம் மேலும் வலுப்பெறுவதோடு, அதன் Growth Guarantee Homes கருத்தையும் பரந்த அளவில் மக்களிடம் கொண்டு செல்ல நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சென்னையைத் தாண்டி கோயம்புத்தூர் உள்ளிட்ட புதிய சந்தைகளில் தனது குடியிருப்பு திட்டங்களை விரிவுபடுத்தி வரும் MP Developers, தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதைகளில் தனது அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் கொண்டு செல்லும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. NRI வாடிக்கையாளர்களுடனான தொடர்பு மூலம் இந்தியாவுக்கு அப்பால் உள்ள வாடிக்கையாளர்களையும் சென்றடையும் முயற்சிகளையும் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

“Built for Living. Guaranteed for Growth.” என்ற அணுகுமுறையுடன், தரமான வீடுகளை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், குடும்பங்களின் எதிர்கால வளர்ச்சிக்கும் மதிப்பு சேர்க்கும் வகையில் MP Developers தனது அடுத்தகட்ட பயணத்தைத் தொடங்கியுள்ளது.

ஒரே நம்பிக்கை… ஒரே வளர்ச்சி… புதிய பயணம்!

நோயல் டாடா உடன் விரிசல்; 'முன்னெச்சரிக்கை'யாக போட்டியிலிருந்து விலகிய N.சந்திரசேகரனின் சாதனைகள்!

ஒன்பது ஆண்டுகள்... இரண்டு பதவிக்காலத்தை டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக கழித்துள்ள என்.சந்திரசேகரன் அடுத்த தலைவர் பதவிக்கால போட்டியில் கலந்துகொள்ளப் போவதில்லை. இது தான் இந்திய பிசினஸ் உலகத்தின் தற்போத... மேலும் பார்க்க

Tata Sons-ன் அடுத்த தலைவர் 'இவரா?' - அடிபடும் பேச்சுகள்; தலைவர் எப்படி தேர்வு செய்யப்படுவார்?

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவி காலியாகிறது. மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டிப்போட போவதில்லை என்று டாடா சன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் என்.சந்திரசேகரன் அறிவித்த... மேலும் பார்க்க

`நான் ஏன் Tata Sons தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்?' - N சந்திரசேகரன் முழு விளக்கம்

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுவதிலிருந்து விலகுகிறார் N.சந்திரசேகரன். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், 2017-ம் ஆண்டு டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர... மேலும் பார்க்க

`ஆடி கொடைக்கு ஆயிரங்கண் பானையும், தீச்சட்டியும் ரொம்ப விசேஷம்' - கவனம் ஈர்க்கும் மண்பாண்ட பொருள்கள்

மண் கலயங்களின் விற்பனைதென் மாவட்டங்களில் ஆடி மாத கொடை விழாக்களை அலங்கரிக்கும் மண் கலயங்களின் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆடி மாதம் பெரும்பாலான அம்மன் மற்ற... மேலும் பார்க்க

LIC : 6.5 சதவீத பங்குகளை விற்று ரூ.35,000 கோடி திரட்ட மத்திய அரசு முடிவு

மத்திய அரசு ஏற்கனவே பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்துவிட்டது. இப்போது எல்.ஐ.சி., ஒ.என்.சி.ஜி போன்ற சில நிறுவனங்கள் மட்டுமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தற்போது எல்.ஐ.சி.யி... மேலும் பார்க்க