செய்திகள் :

Mumbai Indian: மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமனம்!

post image

அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கு, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் அறிவிப்பு பற்றிப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இன்று அந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

மூன்று சீசன்களுக்குப் பிறகு மீண்டும் ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

Mumbai Indian
Mumbai Indian

மும்பை இந்தியன்ஸ் அணி, இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இதனைத் தெரியப்படுத்தியிருக்கிறது.

2013 முதல் 2023 வரை மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா, தனது தலைமையில் 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 கோப்பைகளை வென்று கொடுத்தார்.

2024-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து மும்பைக்குத் திரும்பிய ஹர்திக் பாண்டியாவிடம் கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

ஆனால், கடந்த மூன்று சீசன்களாக ஹர்திக் பாண்டியா தலைமையில் மும்பை அணியால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை.

Rohit Sharma
Rohit Sharma

அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக, பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை மும்பை அணி டிரேட் முறையில் வாங்கியதுடன், ஹர்திக் பாண்டியாவை பஞ்சாப் கிங்ஸ் அணிக்குக் கொடுத்தது.

இதனைத் தொடர்ந்து மீண்டும் ரோஹித் சர்மாவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

நியூசிலாந்து மண்ணில் இந்தியாவின் புதிய சாதனை.. 720 ரன்கள் குவிப்பு; வெற்றிக்கு 8 விக்கெட்டுகள் தேவை!

நியூசிலாந்து மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 720 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 352 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தி... மேலும் பார்க்க

`தன் முடிவை என்னிடம் இப்படி தான் சொன்னார்.!' - தோனியின் ஓய்வு தருணத்தை பகிரும் ஜாகீர் கான்

ஐபிஎல் 2027 சீசனுக்கான வீரர்கள் தக்கவைப்பு பட்டியல் வெளியானபோது, சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தியும் உடன் வந்தது. சிஎஸ்கே அணியின் தூணாக விளங்கிய மகேந்திர சிங் தோனி, தனது விளையாட்... மேலும் பார்க்க

'சச்சினையே கேள்வி கேட்டிருப்பார்கள்!' - சிராஜ் நீக்கத்தால் கொந்தளித்த கைஃப், கவாஸ்கர், ரவி சாஸ்திரி

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் நீக்கப்பட்டது, இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இங்கிலாந்து தொடரில் இந்தியாவின் ... மேலும் பார்க்க

KKR : 24 மடங்கு அதிகரித்த மதிப்பு! - 22% பங்குகளை அமெரிக்க கம்பெனிக்கு விற்ற நடிகை ஜூஹி சாவ்லா கணவர்

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு 55 சதவீத பங்கு இருக்கிறது. அவரது தோழியான நடிகை ஜூஹி சாவ்லாவிற்கு 45 சதவீத பங்கு இருக்கிறது. இந்த பங்கு ஜூஹி சாவ்லாவின் கணவர் ஜெய் மேத்தா பெ... மேலும் பார்க்க

"சில அத்தியாயங்கள் முடிவுக்கு வரத்தான் வேண்டும்!"- தோனி ஓய்வு குறித்து சாக்‌ஷி தோனி நெகிழ்ச்சி!

ஐபிஎல் தொடரிலிருந்து மகேந்திர சிங் தோனி தனது ஓய்வை அறிவித்துள்ள நிலையில், அவரது மனைவி சாக்‌ஷி தோனி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கிரிக்கெட் கள... மேலும் பார்க்க

``IPL தொடரிலிருந்துதான் ஓய்வு: CSK-வுடன் தோனி பயணிப்பார்" - சீனிவாசன்

ஐபிஎல் தொடரில் வீரராக மகேந்திர சிங் தோனியின் பயணம் அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. வீரராகத் தனது ஓய்வை அறிவித்துள்ள அவர், வரும் 2027-ம் ஆண்டு ஐபிஎல் சீசன் முதல் CSK அணியின் புதிய ஆலோசகராக நியமிக... மேலும் பார்க்க