செய்திகள் :

Mutual Fund: ''டைரக்ட் ஃபண்ட் வேண்டாம்; ரெகுலர் ஃபண்டே போதும்'' - உஷாராக முதலீடு செய்யும் பெண்கள்!

post image

இன்றைக்கு இந்தியா முழுக்க இருக்கும் ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை நோக்கி வேகமாக வந்துகொண்டு இருக்கிறார்கள். இத்தனை நாளும் தங்கத்தில் மட்டுமே பணத்தைப் போட்டுக்கொண்டு இருந்தோம்; இனி தங்கத்தைத் தாண்டி, மியூச்சுவல் ஃபண்டிலும் பெரும்பாலான பெண்கள் முதலீடு செய்யத் தொடங்கிவிட்டார்கள்.

தங்கம் வாங்க அதிக பணம் தேவைப்படுகிறது; தங்க நகை டிசைனும் பழசாகிவிடுகிறது. தவிர, அதை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டி இருக்கிறது என்றெல்லாம் நினைக்கும் பெண்கள் இப்போது தங்கள் முதலீட்டுக் கவனத்தை மியூச்சுவல் ஃபண்ட் பக்கம் திருப்பி இருக்கிறார்கள்.

பெருவாரியான இந்தியப் பெண்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யத் தொடங்கி இருப்பது ஆரோக்கியமான விஷயம் என்றால், அவர்கள் ரெகுலர் ஃபண்ட் திட்டங்களையே அதிகம் தேர்வு செய்து முதலீடு செய்யத் தொடங்கி இருப்பது இன்னொரு ஆரோக்கியமான விஷயம்.

மியூச்சுவல் ஃபண்ட் SIP

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்று வரும்போது இரு வகையில் முதலீடு செய்யலாம். ஒன்று, ரெகுலர். இன்னொன்று, டைரக்ட். இந்த இரண்டு என்ன வித்தியாசம் எனில், ரெகுலர் என்பது டாக்டர் எழுதிக் கொடுக்கும் மருந்து போல. டைரக்ட் என்பது நாமே நேரடியாக மெடிக்கல் ஷாப்பில் மருந்து வாங்கி சாப்பிடுவது போல.

டாக்டரிடம் ஆலோசனை பெற்று மருந்து வாங்கி சாப்பிட வேண்டும் எனில், அவருக்கான ஃபீஸைத் தந்தாக வேண்டும். அது போல, ஒரு மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூட்டர் மூலம் ரெகுலர் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யும்போது, டாக்டருக்குத் தரும் ஃபீஸ் போல சுமாராக 0.5% முதல் 1% வரை தரவேண்டி இருக்கும்.

இந்தக் கூடுதலான கட்டணத்தை ஏன் தரவேண்டும் என்று நினைத்துப் பலரும் டைரக்ட் ஃபண்ட் திட்டத்தில் ஃபண்டுகளை வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், டைரக்ட் ஃபண்ட் திட்டத்தில் வாங்கும்போது எல்லோரும் தங்கள் ரிஸ்க் லெவலுக்கும், எதிர்காலத்துக்கான பணத்தை சேர்க்கும் வகையிலுமான சரியான ஃபண்ட் திட்டத்தைத்தான் தேர்வு செய்கிறார்களா என்பது முக்கியமான கேள்வி.

எந்த ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும், எந்தத் திட்டத்தைத் தேர்வு செய்யக்கூடாது என்பது தெரியாமலே பலரும் ஏதோ ஒரு ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யும் நிலையே டைரக்ட் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்பவர்களிடம் பார்க்க முடிகிறது.

ஆனால், டைரக்ட் ஃபண்ட் திட்டத்தில் நாமே முதலீடு செய்யும் அளவுக்கு அந்த முதலீடு பற்றி தெரியாது. எனவே, ஒரு மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூட்டரின் உதவியுடன் அவர் வழிகாட்டுதலுடன் முதலீடு செய்வதே சரி என்றுதான் பெண் முதலீட்டாளர்கள் நினைக்கிறார் என்பதையே ஆம்ஃபி நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள் நமக்குச் சொல்கின்றன.

ஆம்ஃபி - கிரிசில் நிறுவனம் வெளியிட்டுள்ள டேட்டாவின்படி, கடந்த மார்ச் 2026 வரையிலான காலத்தில் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும் பெண் முதலீட்டாளர்களின் 77% பேர் மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூட்டர் மூலமாக செய்யும் ரெகுலர் ஃபண்ட் திட்டங்களில்தான் முதலீடு செய்கிறார்கள்.

ரூ.5000 முதல் ரூ.10000 வரை முதலீட்டுத் தொகையை எஸ்.ஐ.பி முறையின் மூலம் முதலீடு செய்யும் பெண் முதலீட்டாளர்களில் 62% பேர் ரெகுலர் ஃபண்ட் திட்டத்திலும், ரூ.1000 முதல் ரூ.5000 வரையிலான முதலீட்டுத் தொகையை எஸ்.ஐ.பி முறையின் மூலம் முதலீடு செய்யும் பெண் முதலீட்டாளர்களில் 64% பேர் ரெகுலர் ஃபண்ட் திட்டத்திலும், ரூ.500 முதல் ரூ.1000 வரையிலான முதலீட்டுத் தொகையை எஸ்.ஐ.பி முறையின் மூலம் முதலீடு செய்யும் பெண் முதலீட்டாளர்களில் 62% பேர் ரெகுலர் ஃபண்ட் திட்டத்திலும் முதலீடு செய்து வருகிறார்கள்.

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்

டைரக்ட் ஃபண்டுகளைவிட ரெகுலர் ஃபண்டுகளைத் தேர்வு செய்வதில் பெண்களின் புத்திசாலித்தனம் பளிச்சிடுகிறது என்றால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்று வரும்போது கடன் சார்ந்த திட்டங்களைத் தேர்வு செய்வதைவிட, தங்கத்தில் முதலீடு செய்யும் திட்டங்களைத் தேர்வு செய்வதைவிட, பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட் திட்டங்களைத் தேர்வு செய்து, 'நீண்ட கால நோக்கில் நாங்களும் ரிஸ்க் எடுக்கத் தயார்' என்பதை நிருபித்திருக்கிறார்கள்.

மாதந்தோறும் ரூ.500 வரை எஸ்.ஐ.பி மூலம் முதலீடு செய்யும் பெண்களில் 63% பேர் பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களைத் தேர்வு செய்திருக்கிறார்கள். 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யும் பெண்களில் 88% பேர் பங்குச் சந்தை சார்ந்த பெண்கள் ரெகுலர் ஃபண்ட் திட்டத்திலும் முதலீடு செய்கிறார்கள்.

மியூச்சுவல் ஃபண்ட்

அதே போல, மாதந்தோறும் ரூ500 என மிகக் குறைந்த அளவில் முதலீடு செய்யும் பெண்கள் கடன் சார்ந்த திட்டங்களில் 13% பேரும், பேசிவ் ஃபண்ட் திட்டங்களில் 9% பேரும், ஹைபிரிட் திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் 11% பேரும் முதலீடு செய்கிறார்கள். 10000 ரூபாய்க்கு மேல் முதலீடு செய்பவர்களில் டெப்ஃட் ஃபண்டில் 1% பேரும், பேசிவ் ஃபண்டில் 3% பேரும் முதலீடு செய்கின்றனர்.

மியூச்சுவல் ஃபண்டில் அதிகமான பெண்கள் முதலீடு செய்யத் தொடங்கிவிட்டார்கள். நீங்களும் முதலீடு செய்யத் தொடங்கிவிட்டீர்களா?

லாபம்

எஸ்.பி.ஐ செய்ய நீங்கள் தவறா?

மியூச்சுவல் ஃபண்டில் SIP முதலீட்டை ஆரம்பிக்க நினைப்பவர்கள் பின்வரும் தொலைபேசி எண்களை அழைக்கலாம்!

ஏ.ஆர்.குமார் - 89259 44568

சபரிநாதன் - 89259 44569

தங்கலட்சுமி - 95007 77894

வெளிநாடு மற்றும் இந்தியாவில் வசிப்பவர்கள் தங்கள் முதலீட்டைச் சரியானபடி அமைத்துக்கொள்ள ஆலோசனை பெற, பின்வரும் லிங்கினைக் கிளிக் செய்து, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்...

வெளிநாட்டில் வசிப்போருக்கு:https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri

இந்தியாவில் வசிப்போருக்கு:https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com

Labham Youtube Channel: www.youtube.com/@labham_money

Labham Website: https://labham.money/tamil

முதலீட்டாளர்களின் கவனத்துக்கு:

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதில் முதலீடு செய்யும்முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து, சுயமாக முடிவெடுக்க வேண்டுகிறோம்!

பணம் உங்களுக்காக வேலை செய்யணுமா? - உங்களைப் பணக்காரர் ஆக்கும் 7 ரகசிய விதிகள்!

மாதச் சம்பளம், சேமிப்பு மற்றும் கிரெடிட் கார்டு சலுகைகளை மட்டும் சேர்த்து வச்சா சீக்கிரமே பணக்காரர் ஆயிடலாம்னு நினைக்கிறீங்களா? ரொம்ப சாரி. நீங்க உங்களுடைய அடிப்படை ஐடியாக்களை மாற்ற வேண்டிய நேரம் வந்த... மேலும் பார்க்க

Mutual Fund: பெற்றோர்களின் சாய்ஸ் FD & RD... இன்றைய இளைஞர்களின் ஒரே சாய்ஸ் SIP - ஏன் தெரியுமா?

முந்தைய தலைமுறையினர் எதிர்காலத்திற்குத் தேவையான பணத்தை சேர்த்து வைக்க மிகச் சிறந்த முதலீட்டுக் கருவியாகப் பார்த்தது வங்கி பிக்சட் டெபாசிட் மற்றும் வங்கி ரெக்கரிங் டெபாசிட் ஆகிய இரண்டைத்தான். இருப்பதற்... மேலும் பார்க்க

Mutual Fund: புதிய மாற்றம்... 5 ஆண்டுகளுக்கு மேல் SIP முதலீட்டைத் தொடரும் 'சபாஷ்' முதலீட்டாளர்கள்.!

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்றாலே ரிஸ்க்கானது; உத்தரவாதம் இல்லாதது; அதில் முதலீடு செய்தால், நஷ்டம் நிச்சயம் என்று நினைத்துப் பலரும் அதில் முதலீடு செய்யாமலே இருக்கிறார்கள். ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் ம... மேலும் பார்க்க

₹1 கோடி சேர்க்க 12 ஆண்டுகள்... ஆனால் 2-வது கோடி வெறும் 4 ஆண்டுகளில்! - எப்படி?

நீங்கள் நிதிச் சுதந்திரம் அடைய விரும்புகிறீர்களா? "பொதுவாக ஒரு தனி நபரின் சொத்து மதிப்பு ₹1 கோடியைத் தொட்ட பிறகு, அடுத்தடுத்த கோடிகள் வேகமாக வளரும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை! சார்லி மங்கர் கூறியத... மேலும் பார்க்க

Mutual Fund: லாபத்துக்கு உத்தரவாதம் இல்லை என அதில் முதலீடு செய்யாமல் இருப்பது சரியா?

''5 ஆண்டுகளுக்கு மேல் யோசிக்கத் தெரியாதவர்களா நாம்? முதலீட்டில் ஏன் இந்தக் குறுகிய சிந்தனை?'' என்கிற கேள்விகளை எழுப்பு கடந்த வாரத்தில் விகடன்.காமில் பணம் பகுதியில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம்.இந்தக... மேலும் பார்க்க

சேர்த்த பணத்தில் வாழ்க்கையை அனுபவிக்க முடியலையா? செலவுகளுக்கு SWP பயன்படுத்துவது எப்படி?

வளைகுடா நாடுகளில் (Gulf Countries) வாழும் பெரும்பாலான NRI-களின் கதை இதுதான். ஊரை விட்டு ஓடியாடி உழைப்பது, சம்பாதிக்கும் தொகையைச் சேமிப்பது, அதை இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது எனப் பல... மேலும் பார்க்க