செய்திகள் :

NEET போராட்டம்: `அமித் ஷா விளக்கம் தர ரெடி; ஆனால், ஒரு கண்டிஷன்!' - ரிஜிஜு சொல்வதென்ன?

post image

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக... மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திரன் பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கடந்த ஜூன் 6-ம் தேதியில் இருந்து ஜூலை 25-ம் தேதி வரை 36 நாள்கள் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது.

இடையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளான ஜூலை 20-ம் தேதி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர், மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தினர்.

இதை தடுக்க பேரணி நடத்தியவர்கள் மீது பாதுகாப்பு அதிகாரிகள் தடியடி நடத்தினர், கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசினர் மற்றும் பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தினர்.

இதற்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்தன.

எதிர்க்கட்சிகள் போராட்டம்
எதிர்க்கட்சிகள் போராட்டம்

எதிர்க்கட்சிகள் என்ன சொல்கிறது?

இதையடுத்து, 'இந்த நடவடிக்கை ஏன்?' என்று எதிர்க்கட்சிகள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நோக்கி கேள்வி எழுப்பினர்.

இதற்கு ஆளும் பாஜக தரப்போ, "மாணவர்கள் மீது தடியடி நடத்த உள்துறை அமைச்சர் சொல்லவில்லை. அப்படி உத்தரவிடுவதற்கான அதிகாரம் அவரிடம் இல்லை.

இந்த முடிவு டெல்லி போலீசாரிடமே உள்ளது" என்று வாதாடுகிறது.

இதற்கு எதிர்க்கட்சிகள், "அமித் ஷாவிற்கு தெரிந்து இந்த வன்முறை நடந்திருந்தால் அது தவறு. அவருக்கு தெரியவில்லை என்றால், அது நிர்வாகக்கேடு. இப்படி எதுவும் தெரியாமல் இருக்கும் ஒருவர் உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியானவர் இல்லை.

எது எப்படி இருந்தாலும், அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்" என்று பதிலடி தருகின்றன.

ஜந்தர் மந்தரில் போராடிய மாணவர்கள் மீது ஏன் தடியடி நடத்தப்பட்டது என்கிற கேள்வியைக் கேட்டு தினமும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட, அவை தொடர்ந்து ஒத்தி வைக்கப்படுகிறது.

கிரண் ரிஜிஜு
கிரண் ரிஜிஜு

பாஜகவின் கண்டிஷன்

வருகிற 13-ம் தேதியோடு முடிவடையும் கூட்டத்தொடரில் இதுவரை 16 அமர்வுகள் முடிந்துவிட்டன. ஆனால், ஜூன் 20-ம் தேதியை தவிர்த்து, ஒரு நாள் கூட அமித் ஷா அவைக்கு வரவில்லை.

எதிர்க்கட்சிகளின் இந்த நகர்வே அமித் ஷாவின் ஆப்சென்டிற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்தச் சூழலில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று, "மாணவர்கள் போராட்டம் குறித்து முழுமையாக விவாதிக்க அரசு தயார். ஆனால், உள்துறை அமைச்சரின் விளக்கத்தின் போது, எதிர்க்கட்சிகள் அமளியோ, அவை நடவடிக்கையை தடுப்பதுபோலவோ எதுவும் செய்யக்கூடாது" என்று கூறியிருக்கிறார்.

இதற்கு எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொள்ளுமா? ஒப்புக்கொள்வது சரியா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம்: ``தவெக அரசுக்கும், முதல்வர் விஜய்க்கும் வாழ்த்துகள்" - சீமான்

தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் அனைத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழகச் சட்டமன்றத்தில் இன்று (ஆகஸ்ட்.10) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை வ... மேலும் பார்க்க

கோவை தொகுதிகளில் நற்பணி மன்றம்! - நடிகர் தனுஷின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வா?

தனுஷ், சமீபத்தில் தான் படித்த பள்ளிக்கு தனது சொந்த செலவில் 3 தளங்கள் கொண்ட கட்டடத்தைக் கட்டிக்கொடுத்தது, எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தது, ரசிகர்களை சமூகப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுமாறு வலியுறுத்தியது... மேலும் பார்க்க

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாடு குறித்த புகார் அளிக்க WhatsApp எண் - முழு விவரம்!

விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில் Anti-Narcotics Task Force (ANTF) அமைப்பை மேலும் வலுப்படுத்த தமிழக அரசு ரூ.264.14 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.இதன்படி, மாநிலம் முழுவதும் 65 சிறப்பு ANTF காவல் நிலையங்கள்... மேலும் பார்க்க

"நான் பைபிள் படித்திருக்கிறேன்; இப்படித்தான் பேசுவேன்!"- எம்எல்ஏ ராஜேந்திரனுக்கு மரிய வில்சன் பதில்

பட்டஜெட் விவாதக் கூட்டத்தொடரின் நான்காவது நாள் இன்று (ஆகஸ்ட்.10) சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விவாதத்தின்போது, "சொற்பொழிவாளன் மற்றும் தமிழ் ஆர்வலர் என்ற முறையில் சொல்கிறேன். நிதியமை... மேலும் பார்க்க

Mule Accounts: ₹545 கோடி சைபர் மோசடி; 837 பேரை கைதுசெய்த தமிழ்நாடு போலீஸின் ஆபரேஷன்! என்ன, எப்படி?

சைபர் குற்றங்களுக்குப் பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகள் தான் போலி வங்கிக் கணக்குகள் (Mule Accounts). இந்தக் கணக்குகள் மோசடி மூலம் பெற்ற பணத்தை மறைத்து வைப்பதற்கு, மோசடி செய்து பணம் பெறுவதற்கு, மோசட... மேலும் பார்க்க

மெக்கா ஒப்பந்தம்: பாகிஸ்தானுக்கு கை கொடுத்த சவூதி, துருக்கி; இந்தியாவுக்கு எப்படியான அலாரம்?

மெக்கா ஒப்பந்தம் - சவூதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகள் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கையெழுத்திட்ட ஒப்பந்தம் ஆகும்.ஏன் இந்த ஒப்பந்தம்? இந்த ஒப்பந்தம் குறித்து மூன்று நாடுகளும் வெளியிட்டுள்ள கூட்... மேலும் பார்க்க