செய்திகள் :

Nepal Flood: நேபாளத்தில் திடீர் வெள்ளம்; 8 பேர் பலி; 30க்கும் மேற்பட்ட தமிழர்களின் நிலை என்ன?

post image

நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 8 பேர் பலியாகியிருக்கின்றனர்.

மேகவெடிப்பு காரணமாக நேபாளத்தில் திபெத் எல்லைக்கு அருகில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தத் திடீர் வெள்ளப்பெருக்கால் வீடுகள், வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன.

பல முக்கியச் சாலைகள் மற்றும் பாலங்கள் கடுமையாகச் சேதமடைந்திருக்கின்றன. ஏராளாமான மக்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன.

இந்த வெள்ள பாதிப்பில் 50க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கியிருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், 20 பேர் மட்டுமே தங்களைத் தொடர்பு கொண்டுள்ளதாக கும்பகோணத்தைச் சேர்ந்த சூப்பர் யாத்ரா சுற்றுலா ஏஜென்சி உரிமையாளர் சாதிக் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சூப்பர் யாத்ரா ஏஜென்சி மூலம் கும்பகோணம், மயிலாடுதுறை, ஓசூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 57 பேர் விமான மூலம் நேபாளம் உள்ளிட்ட வட மாநிலத்திற்கு 13 நாட்கள் சுற்றுலா சென்றுள்ளனர்.

கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு புறப்பட்ட அவர்கள் மூன்று பேருந்துகளில் இரண்டு நாள் நேபாளத்தில் சுற்றிவிட்டு இன்று காலை திபெத் சென்றுள்ளனர்.

அப்போதுதான் இந்த இயற்கை பேரிடர்களில் சிக்கியுள்ளனர். மூன்று பேருந்துகளில் சென்றவர்களில் ஒரு பேருந்தில் உள்ள 20 பேர் மட்டுமே பாதுகாப்பாக இருப்பதாக தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளனர். மேலும் இரண்டு பேருந்துகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அதில் 37 பேர் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது மகன் உமர் பாரூக் தலைமையில் சுற்றுலா சென்றுள்ளதாகவும் மேலும் தனது மகன் கூட தன்னை தொடர்பு கொள்ளவில்லை என சாதிக் தெரிவித்துள்ளார்.

நேபாளம்: பாலம் இல்லை… பாதையும் இல்லை… ஆபத்தான பயணம் ஜிப்லைனே ஒரே நம்பிக்கை!

பாலங்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், 250 மீட்டர் நீளமுள்ள ஜிப்லைன் மூலம் ஆற்றைக் கடந்து உணவு, உடைமைகளை எடுத்துச் செல்லும் நேபாள மக்களின் போராட்டம், பாலம் போன இடத்தில் உயிர்நாடியான ஜிப்லைன்!நேபாளத்... மேலும் பார்க்க

Nepal: ”இதுவரை பஸ் கிடைக்காததே நல்ல விஷயம்தான்” - டி.என்.ஏ சோதனைக்கு வந்த மகன் நம்பிக்கை

நேபாளத்தில், கடந்த 26ம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தில், ஆன்மீக சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 305 பேரில், சுமார் 220 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீதமுள்ள 85 பேர் மயாமான நிலையில், அவர்களை மீட்க மத்திய... மேலும் பார்க்க

நேபாள வெள்ளம்: நீர்மின் சுரங்கத்துக்குள் 9 நாட்கள்... உயிருடன் மீட்கப்பட்ட 2 தொழிலாளர்கள்!

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்துக்குப் பிறகு, மண்ணாலும் குப்பைகளாலும் மூடப்பட்ட நீர்மின் திட்ட சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த இரண்டு தொழிலாளர்கள் 9 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.... மேலும் பார்க்க

பனிமலையின் பகுதி உடைந்து விழுந்த நொடிகள்... நேபாளப் பேரழிவின் தொடக்கத்தை பதிவு செய்த ட்ரோன் வீடியோ!

நேபாளத்தின் லாங்டாங் லிருங் (Langtang Lirung) மலையில் அண்மையில் நிகழ்ந்த பாறை மற்றும் பனிச்சரிவு, சில நிமிடங்களில் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கிய பெருவெள்ளமாக மாறியது. 900-க்கும் மேற்பட்டோரின் உயிர... மேலும் பார்க்க

"உங்களுடைய அக்கறைக்கும், தாராளமான உதவிக்கும் நன்றி"- இந்தியாவிற்கு நன்றி தெரிவித்த நேபாளம் அதிபர்

நேபாள நாட்டின் போடேகோசி மற்றும் திரிசூலி ஆறுகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் இதுவரை 650-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக நேபாள பேரிடர் மேலாண... மேலும் பார்க்க