'5 ஏக்கர் ரூ.37.9 கோடி' - கோலியின் முதலீடு; அலிபாக் நகரில் பாலிவுட் நடிகர்கள் கு...
Netflix: 'சூர்யா 46', 'கர', 'டயங்கரம்' - களைகட்டும் நெட்பிளிக்ஸ் லைன்அப்; என்னென்ன படங்கள் தெரியுமா?
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2026-ல் வெளியாகும் படங்களில், எந்தெந்தப் படங்களுக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் டிஜிட்டல் உரிமத்தைப் பெற்றிருக்கிறது என்பதை அறிவித்திருக்கிறது.
இவ்வாண்டு மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகவிருக்கும் சூர்யா, கார்த்தி, தனுஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் திரைப்படங்களின் டிஜிட்டல் உரிமம் நெட்பிளிக்ஸ் கைகளில்தான் இருக்கிறது. அவை என்னென்ன படங்கள் என்பதைப் பார்ப்போமா...

சூர்யா 46 & சூர்யா 47:
இயக்குநர் வெங்கி அத்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படமான 'சூர்யா 46' படத்தின் உரிமத்தை நெட்பிளிக்ஸ் பெற்றிருக்கிறது.
இப்படத்தில் மமிதா பைஜூ கதாநாயகியாக நடிக்கிறார். இதைத் தொடர்ந்து 'ஆவேஷம்' இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் படத்தின் டிஜிட்டல் உரிமத்தையும் நெட்பிளிக்ஸ் பெற்றிருக்கிறது.
'கர' & டி55:
'போர் தொழில்' இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'கர' திரைப்படத்தின் உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கியிருக்கிறது.
மமிதா பைஜூ கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் முன்னோட்டக் காணொளியும் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது.
அதைத் தொடர்ந்து 'அமரன்' பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அவரது 55வது படத்தின் உரிமத்தையும் நெட்பிளிக்ஸ் வாங்கியிருக்கிறது.
இப்படத்தை முதலில் 'கோபுரம் ஃபிலிம்ஸ்' அன்புச்செழியன் தயாரிப்பதாக பூஜை போடப்பட்டது. ஆனால், இப்போது இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது.

மார்ஷல்:
'டாணாக்காரன்' தமிழ் இயக்கத்தில், கார்த்தி நடித்து வரும் 'மார்ஷல்' படத்தின் உரிமத்தையும் நெட்பிளிக்ஸ் பெற்றிருக்கிறது. கல்யாணி ப்ரியதர்ஷினி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
ப்ரோ கோட் & ஆன் ஆர்டினரி மேன்:
'டிக்கிலோனா' பட இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் ரவி மோகன், எஸ்.ஜே.சூர்யா, அர்ஜுன் அசோகன் ஆகியோர் நடிக்கும் படத்தின் உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது.
அத்தோடு ரவி மோகன் தயாரித்து இயக்கும் 'ஆன் ஆர்டினரி மேன்' படத்தின் டிஜிட்டல் உரிமத்தையும் நெட்பிளிக்ஸ் பெற்றிருக்கிறது. ரவி மோகன் இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்தில் யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்கிறார்.

வேல்ஸ் தயாரிக்கும் படங்கள்:
வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் 'டயங்கரம்' படத்தின் உரிமத்தையும் நெட்பிளிக்ஸ் வாங்கியிருக்கிறது. அத்தோடு விஷ்ணு விஷால் நடித்து வரும் 'கட்டா குஸ்தி 2' படத்தின் உரிமத்தையும் நெட்பிளிக்ஸ் வாங்கியிருக்கிறது.
தனுஷின் 'கர', 'டயங்கரம்', 'கட்டா குஸ்தி 2' என வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் மூன்று படங்களின் உரிமத்தையும் நெட்பிளிக்ஸ் பெற்றிருக்கிறது.
வித் லவ்:
'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடிக்கும் 'வித் லவ்' படத்தின் உரிமத்தையும் நெட்பிளிக்ஸ் வாங்கியிருக்கிறது. அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.
இதைத் தாண்டி 'டான் பிக்சர்ஸ்' ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் 'இதயம் முரளி' படத்தின் உரிமத்தையும், அர்ஜுன், அபிராமி ஆகியோர் நடிக்கும் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் 28வது படத்தின் டிஜிட்டல் உரிமத்தையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது.

















