செய்திகள் :

'5 ஏக்கர் ரூ.37.9 கோடி' - கோலியின் முதலீடு; அலிபாக் நகரில் பாலிவுட் நடிகர்கள் குவியக் காரணம் என்ன?

post image

கிரிக்கெட் வீரர் விராட் கோலி நடிகை அனுஷ்கா சர்மாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.

மும்பையில் வசித்து வந்த விராட் கோலி தம்பதி இப்போது இங்கிலாந்தில் குடியேறியிருக்கின்றனர். அவர்கள் இருவரும் மகாராஷ்டிராவின் அலிபாக் நகரில் 5 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கியிருக்கின்றனர்.

மும்பையின் தென்பகுதியில் இருந்து படகு மூலம் அலிபாக்கிற்குச் செல்ல முடியும். அலிபாக்கில் ஏற்கனவே நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோனே உட்பட பாலிவுட் பிரபலங்கள் பலரும் நிலத்தில் முதலீடு செய்திருக்கின்றனர்.

தற்போது நவிமும்பையில் புதிய சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்ட பிறகு அலிபாக் மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அலிபாக் அருகில் உள்ள ஜிராட் என்ற கிராமத்தில் அடுத்தடுத்து இருந்த 5 ஏக்கர் கொண்ட இரண்டு நிலங்களை ரூ.37.9 கோடிக்கு விராட் கோலி தம்பதி விலைக்கு வாங்கியிருக்கின்றனர்.

விராட் கோலி தம்பதி
விராட் கோலி தம்பதி

இதற்கான பத்திரப் பதிவு ஜனவரி 13ம் தேதி நடந்துள்ளது. இதற்கு விராட் கோலி தம்பதி முத்திரை தீர்வைக் கட்டணமாக ரூ.2.27 கோடி செலுத்தி இருக்கின்றனர்.

சோனாலி அமித் ரஜபுத் என்பவரிடமிருந்து இந்த நிலத்தை வாங்கியுள்ளனர். 2022ம் ஆண்டு ஏற்கனவே இதே கிராமத்தில் 8 ஏக்கரில் பண்ணை வீடு ஒன்றை ரூ.19 கோடிக்கு விராட் கோலி தம்பதி வாங்கினர்.

சமீப காலமாக அலிபாக் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி பாலிவுட் பிரபலங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. எனவே அவர்கள் அதிக அளவில் இங்கு ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருகின்றனர். 2023ம் ஆண்டு, ஷாருக்கானின் மகளான நடிகை சுஹானா கான், அலிபாக்கில் மூன்று பிளாட்களை (2.79 ஏக்கர்) ரூ.25.5 கோடிக்கு வாங்கினார்.

அலிபாக்கில் தென்னந்தோப்பு, பண்ணை வீடு உட்பட ஏராளமான சொத்துகள் ஷாருக்கானுக்கு இருக்கின்றன. நடிகை தீபிகா படுகோனே மற்றும் அவரது கணவர் ரன்வீர் சிங் ஆகியோர் அலிபாக்கில் அதிக முதலீடு செய்துள்ளனர். 2021 ஆம் ஆண்டு அவர்கள் எவர்ஸ்டோன் குழுமத்தைச் சேர்ந்த ராஜேஷ் ஜக்கி என்பவரிடமிருந்து ரூ.22 கோடிக்கு அலிபாக்கில் உள்ள மாப்கான் கிராமத்தில் ஒரு வீட்டை வாங்கினார்கள்.

இதற்கு முன்பு 2021ம் ஆண்டு அலிபாக்கில் கடற்கரையையொட்டிய 6 ஏக்கர் நிலம் ரூ.80 கோடிக்கு விற்பனையானது. கொரோனா காலத்தில் அதிகமானோர் அலிபாக்கில் நிலம் வாங்க ஆரம்பித்தனர்.

"ஐகானிக்கான ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்!" - ஹான்ஸிம்மருடன் பணியாற்றுவது பற்றி ஏ.ஆர். ரஹ்மான்

இயக்குநர் நிதேஷ் திவாரி பிரமாண்டமாக பாலிவுட்டில் ராமாயணம் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மானும், உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸிம்மரும் இணைந்து இசையமைத்து வருகிறார்கள். Ram... மேலும் பார்க்க

"அதற்கு நோ சொல்லியிருந்தேன்; ஆனால், 'ஜெயிலர் 2'வில் அதை செய்திருக்கிறேன்; காரணம்..." - விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடித்திருக்கும் சைலண்ட் திரைப்படமான 'காந்தி டாக்ஸ்' இம்மாதம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. மராத்தி சினிமா இயக்குநரான கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கியிருக்கும் இப்படத்தில் அரவிந்த் சாம... மேலும் பார்க்க

தீபிகா படுகோனேயின் 40வது பிறந்தநாள்: 'ரசம் சாதம், முட்டை, வறுத்த மீன்' - இளமையின் ரகசியம் என்ன?

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவிற்கு இன்று 40வது பிறந்தநாள் ஆகும். அவர் இந்தப் பிறந்தநாளை தனது மகள் மற்றும் கணவருடன் சேர்ந்து கொண்டாடி வருகிறார்.அவருக்கு இந்தப் பிறந்தநாள் இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமைந்... மேலும் பார்க்க

கணவர் தர்மேந்திராவிற்காக தனியாக பிரார்த்தனை கூட்டம் நடத்தியது ஏன்? - நடிகை ஹேமாமாலினி விளக்கம்

பாலிவுட் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு காலமானார். அவர் இறந்தவுடன் ரசிகர்களின் நினைவு அஞ்சலிக்காகக்கூட உடலை வைக்காமல் அவர் மகன்கள் அவசர அவசர... மேலும் பார்க்க

Dharmendra: "இது கோடிக்கணக்கான மக்களுக்கு தர்மேந்திரா விட்டுச் சென்ற பொக்கிஷம்!" - அமிதாப் பச்சன்

பாலிவுட்டின் மூத்த நடிகர் தர்மேந்திரா கடந்தாண்டு இயற்கை எய்தினார். இயக்குநர் ஶ்ரீராம் ராகவன் இயக்கத்தில் அவர் கடைசியாக நடித்திருந்த 'இக்கிஸ்' திரைப்படம் புத்தாண்டு ஸ்பெஷலாக இன்று திரைக்கு வந்திருக்கிற... மேலும் பார்க்க

Salman Khan: பண்ணை வீட்டில் 60வது பிறந்தநாள் விழா; தோனி, இந்தி நடிகர்களுடன் கொண்டாடிய சல்மான் கான்!

நடிகர் சல்மான் கானுக்கு இன்று 60வது பிறந்தநாள் ஆகும். இதையடுத்து இந்தப் பிறந்தநாளை சல்மான் கான் மும்பை புறநகர் பகுதியில் உள்ள பன்வெலில் இருக்கும் தனது பண்ணை வீட்டில் கொண்டாடினார்.பிறந்தநாள் விழாவிற்கா... மேலும் பார்க்க