செய்திகள் :

Nivin Pauly: "நான் மிகவும் சலிப்படைந்துவிட்டேன்" - 'பென்ஸ்' படப்பிடிப்பு குறித்து நிவின் பாலி

post image

நடிகர் நிவின் பாலி நடித்திருக்கும் 'பெத்லகெம் குடும்ப யூனிட்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

கிரிஷ் ஏ.டி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

நிவின் பாலி - Nivin Pauly
நிவின் பாலி - Nivin Pauly

தமிழில் ராகவா லாரன்ஸோடு அவர் நடிக்கும் 'பென்ஸ்' படத்தில் அவருடைய படப்பிடிப்பு தொடர்ந்து தாமதமாகி வருவது குறித்து சமீபத்திய பேட்டியில் பகிர்ந்திருக்கிறார் நிவின் பாலி.

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'பென்ஸ்'. இப்படமும் லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸில் வரும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் நீண்ட நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டு அப்போதே ஷூட்டிங்கும் தொடங்கப்பட்டது. ஆனால், இன்னும் அப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையவில்லை எனக் கூறப்படுகிறது. சாய் அபயங்கர் இசையமைப்பாளராக முதலில் கமிட்டான படமும் இதுதான்.

Benz - Bhagiyaraj Kannan - Lokesh Kanagaraj - Sai Abyankar
Benz - Bhagiyaraj Kannan - Lokesh Kanagaraj - Sai Abyankar

இப்படம் குறித்து நிவின் பாலி, "நான் உண்மையிலேயே மிகவும் சலிப்படைந்துவிட்டேன். இந்தப் படத்துக்காக என்னுடைய பல மாத கால நேரத்தையும் உழைப்பையும் கொடுத்திருக்கிறேன்.

ஆனால் படப்பிடிப்பு தாமதமாகிக்கொண்டே இருப்பதனால் என்னுடைய அடுத்தடுத்த படங்களின் கால்ஷீட்டும், திட்டங்களும் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றன. இந்தப் பேட்டியைப் பார்த்தாவது 'பென்ஸ்' படக்குழுவினர் ஒரு முடிவை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்.

"அந்த அனுபவத்திற்குப் பிறகு, துல்கர் சல்மானுடன் மீண்டும் பணியாற்ற முடியாது.!" - ஐஸ்வர்யா லட்சுமி

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த 'King of Kotha' படத்தின் அனுபவம் மற்றும் ட்ரோலிங் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். ‘King of Kotha’ படம் வெளியாகுவதற்கு முன்ப... மேலும் பார்க்க

Mammootty 75: "எங்களுக்குள் போட்டி மனப்பான்மை இருந்தது இல்லை!" - மம்மூட்டியை வாழ்த்தும் மோகன்லால்

நடிகர் மம்மூட்டிக்கு இன்று 75-வது பிறந்தநாள். அதையொட்டி நடிகர் மோகன்லால், மம்மூட்டியை வாழ்த்தித் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அத்தோடு, மலையாள ஊடகத்தின் வாயிலாக மம்மூட்டிக்கு பிற... மேலும் பார்க்க

Mammootty: "சினிமாவில் 10 ஆண்டுகால இடைவெளி ஏன்?" - அடூர் கோபாலகிருஷ்ணன் பதில்

மலையாள சினிமாவின் மூத்த இயக்குநரான அடூர் கோபாலகிருஷ்ணன், 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மம்மூட்டியை வைத்து ‘பாதயாத்ரா’ படத்தை இயக்கியிருக்கிறார். 2016-இல் வெளியான ‘பின்னையும்’ திரைப்படத்திற்குப் பிறகு இ... மேலும் பார்க்க

Mohanlal: "நான் மோகன்லாலை திருமணம் செய்ய விரும்புவதாக வீட்டில் சொன்னப்போ..." - சுசித்ரா மோகன்லால்

நடிகர் மோகன்லாலின் மனைவி சுசித்ரா, சமீபத்தில் மலையாளத்தில் அளித்த பேட்டி ஒன்றில் மோகன்லாலுடனான தனது முதல் சந்திப்பு குறித்தும், தங்களுடைய திருமணம் குறித்து தனது தந்தை கொடுத்த எச்சரிக்கை குறித்தும் பகி... மேலும் பார்க்க

Premalu: "யாராலும் அப்படியே ரீமேக் செய்யவே முடியாது!"- 'பிரேமலு' இந்தி ரீமேக் பற்றி இயக்குநர் கிரிஷ்

மலையாளத்தில் ஹிட் அடித்த 'பிரேமலு' திரைப்படம், தற்போது 'பிரேம் கீட்டனு' என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. Bethlehem Kudumba Unit வீர் பஹாரியா நாயகனாக நடிக்கும் இந்தப் படம் அக்டோபர் ... மேலும் பார்க்க

Mohanlal: "அது என்னுடைய தவறுதான்!'' - குழந்தைகள் குறித்து சுசித்ரா மோகன்லால்

மோகன்லாலைத் தொடர்ந்து அவர்களுடைய பிள்ளைகளான பிரணவ் மற்றும் விஸ்மயா இருவரும் சினிமாவுக்கு வந்துவிட்டார்கள். விஸ்மயா மோகன்லால் நடித்திருந்த 'தொடக்கம்' திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு திரைக்கு வந்திருந... மேலும் பார்க்க