செய்திகள் :

No Kings: அமெரிக்கா, ஐரோப்பாவில் வெடித்த போராட்டம்; அதிபர் ட்ரம்ப்க்கு எதிராகக் குவியும் மக்கள்!

post image

ஈரான் மீதான போர் நடவடிக்கைக்கும் மற்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் செயல்பாடுகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பல்வேறு நகரங்களில் நேற்று (சனிக்கிழமை) பிரமாண்டமான 'நோ கிங்ஸ்' பேரணிகள் நடைபெற்றன.

அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் சுமார் 3,100-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தப் போராட்டங்கள் பதிவாகின. இதில் மினசோட்டா மாகாணம் போராட்டத்தின் மையப்புள்ளியாக மாறியது. செயின்ட் பால் பகுதியில் உள்ள கேபிடல் புல்வெளியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.

பிரபல இசைக்கலைஞர் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன், பெடரல் ஏஜென்ட்களால் சுட்டுக் கொல்லப்பட்ட ரெனீ குட் மற்றும் அலெக்ஸ் பிரெட்டி ஆகியோரின் நினைவாக எழுதப்பட்ட பாடலைப் பாடி போராட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

"இந்த பிற்போக்குத்தனமான கனவு நீடிக்காது" என்று அவர் உணர்ச்சிவசப்படப் பேசினார். இந்தப் பேரணியில் புகழ்பெற்ற நடிகர் ராபர்ட் டி நீரோ, பாடகி ஜோன் பேஸ், நடிகை ஜேன் ஃபோண்டா மற்றும் செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வாஷிங்டன் டிசியின்லிங்கன் மெமோரியல் முதல் நேஷனல் மால் வரை நூற்றுக்கணக்கானோர் அணிவகுத்துச் சென்றனர். "மகுடத்தைக் கீழே போடு, கோமாளியே" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

லாஸ் ஏஞ்சல்ஸின் போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். பலரைக் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

no kings protest
no kings protest

அமெரிக்கா தவிர லண்டன், பாரிஸ் மற்றும் ரோம் ஆகிய நகரங்களிலும் போராட்டங்கள் வெடித்தன. லண்டனில் 'வலதுசாரிப் போக்கை நிறுத்து' என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ரோமில் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனிக்கு எதிராகவும், ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைக்கு எதிராகவும் மக்கள் வீதியில் இறங்கினர்.

இந்தப் போராட்டங்களை குடியரசுக் கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் அபிகாயில் ஜாக்சன் கூறுகையில், "இவை இடதுசாரி அமைப்புகளால் திட்டமிடப்பட்டவை. பொதுமக்களின் உண்மையான ஆதரவு இதற்கு இல்லை" எனத் தெரிவித்தார். தேசிய குடியரசுக் கட்சி கமிட்டியும் (NRCC) இந்தப் போராட்டங்களை "அமெரிக்காவை வெறுக்கும் பேரணிகள்" எனக் குறிப்பிட்டுள்ளது.

திமுக தேர்தல் அறிக்கை: 'TV, Fridgeக்கு ரூ. 8000 மதிப்பிலான கூப்பன், 10 லட்சம் வீடுகள்'- முழு லிஸ்ட்

திமுக வருகிற சட்டமன்றத் தேர்தலில் 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது. நேற்று, போட்டியிடப் போகும் அக்கட்சியின் வேட்பாளர்களை திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து... மேலும் பார்க்க

'சர்வே முடிவுகள்; கட்சிக் கட்டமைப்பு; MLA மீதான அதிருப்தி'- விஜய் பெரம்பூரை டிக் அடிக்க காரணம் என்ன?

விஜய், பெரம்பூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக அவரே அறிவித்திருக்கிறார். நாளையே வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிட்டு தன்னுடைய தொகுதியிலிருந்தே பிரசாரத்தையும் தொடங்கவிருக்கிறார். விஜய் பெரம்பூர் தொகுதி... மேலும் பார்க்க

தவெக: '24 பெண்கள்; 11 இஸ்லாமியர்கள்; 11 கிறிஸ்துவர்கள்' - விஜய்யின் வேட்பாளர் பட்டியலின் ஹைலைட்!

தவெக சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை விஜய் இன்று வெளியிட்டிருக்கிறார். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட 24 பெண்களுக்கும் 11 இஸ்லாமியர்களுக்கும் 11 கிறிஸ்தவர்களுக்கும் விஜ... மேலும் பார்க்க

"விஜய் தன்னைப் பிரபலப்படுத்திக்கொள்ள இப்படிச் செய்கிறார்'' - எல்.முருகன் சொல்வது என்ன?

தேசிய ஜனநாயக் கூட்டணியில் பழநி தொகுதியை பா.ஜ.க-விற்கு ஒதுக்காததைக் கண்டித்து பா.ஜ.க நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். ''பழநி தொகுதி பா.ஜ.க-விற்கு ஒதுக்கப்படுமென நம்பிக்கையோடு வேலை பார்த்... மேலும் பார்க்க

திமுக : ஆளுமை செலுத்திய மண்டல பொறுப்பாளர்கள்; உதயநிதியின் ஆதிக்கம் - 'அப்ருவல்' கொடுத்த முதல்வர்!

மூன்று அமைச்சர்கள் உட்பட பல சிட்டிங் எம்.எல்.ஏ-க்களை கழற்றிவிட்டு, தி.மு.க வின் வேட்பாளர்கள் அறுபது முகங்களை களத்தில் இறக்கியுள்ளது தலைமை. மண்டல பொறுப்பாளர்களின் ஆதிக்கம், கடைசி நேரத்தில் லிஸ்டில் மாற... மேலும் பார்க்க

தவெக: திருச்சி கிழக்கை டிக் அடித்த விஜய்; காரணம் என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டடு நடிகராக இருந்த விஜய், த.வெ.க என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறார். முதன்முறையாக தேர்தலைச் சந்திக்கும் அந்தக் கட்சியின் வரவு, ... மேலும் பார்க்க