செய்திகள் :

NZ v IND: `அவர்களால் எப்படி இது முடிந்தது? எனக்குப் புரியல.!" - பாராட்டிய ஷ்ரேயாஸ்

post image

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ், அபிஷேக் ஷர்மா - வைபவ் ஆட்டத்தை வெகுவாக பாராட்டினார். நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய பிறகு பேசிய கேப்டன் ஷ்ரேயாஸ், `இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களின் அணுகுமுறையும், கடினமான சூழலில் அவர்கள் வெளிப்படுத்திய திறமையும் தன்னை வியப்பில் ஆழ்த்தியதாகக் குறிப்பிட்டார்.

க்ஷ்ரேயாஸ் பேசுகையில், "அபிஷேக் ஷர்மா - வைபவ் பேட்டிங் கண்களுக்கு விருந்தாக இருந்தது. பந்து 'சீம்' ஆகிக்கொண்டிருந்த ஒரு ஆடுகளத்தில், அவர்களால் எப்படி இவ்வளவு எளிதாக ஷாட்களை ஆட முடிந்தது என்பது எனக்குப் புரியவில்லை. நானும் சஞ்சுவும் பேட்டிங் செய்ய வந்தபோது பந்தின் நகர்வை உணர்ந்தோம். ஆனால், அந்தச் சூழலில் அவர்கள் ஆடிய விதம் பிரமிக்க வைத்தது," என்று குறிப்பிட்டார்.

குறிப்பாக, அவர்களின் அதிரடி ஆட்டம் குறித்து அவர் மேலும் கூறுகையில், "உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், சர்வதேச கிரிக்கெட்டில் 5 ஓவர்களில் 100 ரன்கள் குவிக்கப்பட்டதை நான் இதற்கு முன் பார்த்ததே இல்லை. நான் பார்த்த சிறந்த ஆட்டங்களின் பட்டியலில் இது நிச்சயமாக முதலிடம் பிடிக்கும். இது ஒரு விதிவிலக்கான செயல்பாடு," என்று ஆட்டத்தை வெகுவாகப் பாராட்டினார்.

போட்டியின்போது இந்திய அணியின் பந்துவீச்சுத் திட்டம் மாறியது குறித்தும் ஷ்ரேயாஸ் விளக்கினார். "சுமார் 10 ஓவர்களுக்குப் பிறகு, நாங்கள் வீசிய 'ஹார்ட் லென்த்' மற்றும் 'ஹாஃப் வாலி' பந்துகள் கூட சிக்ஸர்களுக்குப் பறந்தன. அப்போது, பந்துவீச்சாளர்களிடம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு யார்க்கர்களை (yorkers) வீசுமாறு கூறினேன். பேட்ஸ்மேன்களைத் தரையோடு தரையாக அடிக்க வைப்பதே எங்கள் திட்டமாக இருந்தது. அந்த உத்தி ஓரளவுக்கு ரன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவியது. அவர்களை 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்துவதே எங்கள் இலக்காக இருந்தது," என்றார்.

இறுதியாக, "'ஜெட் லேக்' போன்ற பிரச்சனைகளுக்கு மத்தியிலும், புதிய சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு அவர்கள் வெளிப்படுத்திய ஆட்டம் நம்பமுடியாதது. அவர்களின் இந்த அபாரமான ஆட்டத்திற்கு முழுப் பாராட்டுகளையும் தெரிவித்தாக வேண்டும். நாங்கள் தொடரை வென்றுவிட்டோம். மீதமுள்ள போட்டிகளிலும் அவர்கள் இதேபோன்ற ஆட்டத்தைத் தொடர வேண்டும் என விரும்புகிறேன்," என்று ஷ்ரேயாஸ் கூறினார்.

“யுவி சார், அது அவ்ளோ ஈஸி இல்ல!” -யுவராஜின் ஜாலியான கிண்டலுக்கு அபிஷேக் ஷர்மாவின் கூல் பதில்

தனது அதிரடி ஆட்டத்தால் மைதானத்தை அதிரவைத்த கையோடு, ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்ற அபிஷேக் ஷர்மா, தனது கிரிக்கெட் ஆசான் யுவராஜ் சிங்கின் சமூக வலைதள நகைச்சுவைக்கு கூலாக பதிலளித்திருக்கிறார். யுவராஜ... மேலும் பார்க்க

NPL: ஒப்பந்தம் போட்டாச்சு... விளையாட அனுமதி கிடைக்குமா? பாகிஸ்தான் வீரர்களுக்கு வந்த சிக்கல்!

நேபாளத்தில் நடைபெறவுள்ள நேபாள பிரீமியர் லீக் (NPL) டி20 தொடரில் பங்கேற்கப் பல பாகிஸ்தான் வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், வீரர்களுக்குத் தடையில்லாச் சான்றிதழ் (NOC) வழங்குவதற்கு பாக... மேலும் பார்க்க

"'உடற்தகுதி பெறுங்கள்; அணியில் இடம் உண்டு' என்றார்; ஆனால்...''- கோலி மீது அமித் மிஸ்ரா குற்றச்சாட்டு

காயத்துக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பலாம் என நம்பியிருந்த அமித் மிஸ்ராவுக்கு ஏமாற்றமே மிஞ்சியதாகக் கூறுகிறார். உடற்தகுதியைப் பெற்றால் அணியில் இடம் கிடைக்கும் என்று விராட் கோலி உறுதியளி... மேலும் பார்க்க

IPL 2027: 'ஆஸ்தான ஆல்ரவுண்டர் டு தலைமைப் பயிற்சியாளர்' - மும்பை இந்தியன்ஸை வழி நடத்த போகும் Pollard

இப்போதுதான் சென்னை சூப்பர் கிங்ஸில் தலைமைப் பயிற்சியாளராக ஜாகீர் கானை நியமித்து ஆச்சரியப்படுத்தினார்கள். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியும் தங்கள் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு "கீரன் பொல்ல... மேலும் பார்க்க

300…200…100! மூன்று ஃபார்மேட்… மூன்று சாதனைகள்! - யார் இந்த ஹாரி புரூக்?

டெஸ்ட், ஒருநாள், டி20 என ஒவ்வொரு வடிவத்திலும் தனித்துவமான ஆட்டத்தை வெளிப்படுத்தி மூன்று ஃபார்மேட்டிலும் ரன்களைக் குவித்து சாதனைகள் படைத்திருப்பவர் தான் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக்.1999-ம் ... மேலும் பார்க்க

NZ v IND : "மெகா சேஸிங்கை எளிதாக்கியது அதுதான்.!" - வெற்றி ரகசியத்தை உடைத்த ஸ்ரேயாஸ்!

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 226 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிப் பிடித்த இந்திய அணி, அபார வெற்றி பெற்றது. போட்டிக்குப் பிறகு பேசிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ஆடுகளத்தின் தன்மை மாறியதும், பனிப்பொழ... மேலும் பார்க்க