செய்திகள் :

Pa Ranjith: 'வேட்டுவம்', 'சார்பட்டா 2', 'பிர்சா முண்டா' - பா.ரஞ்சித் லைன் அப் அப்டேட்ஸ்!

post image

பா. ரஞ்சித் இப்போது 'வேட்டுவம்' படத்தின் படப்பிடிப்பை முடித்திருக்கிறார். கடந்த 2024-ம் ஆண்டு இவருடைய இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படம் திரைக்கு வந்திருந்தது.

அப்படத்தை முடித்த கையோடு 'வேட்டுவம்' படத்திற்கான வேலைகள தொடங்கிவிட்டார். இப்படத்தை தாண்டி அவர் 'சார்பட்டா பரம்பரை 2', 'பிர்சா முண்டா' என அவர் டைரக்ட் செய்யவிருப்பதாக அறிவிக்கப்பட்ட படங்களும் லைன் அப்பில் இருக்கின்றன.

இப்படங்களின் அப்டேட்களை இங்கே பார்ப்போமா....

வேட்டுவம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
வேட்டுவம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஆர்யா, தினேஷ், சோபிதா துலிபாலா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'வேட்டுவம்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

படத்தில் சில பேட்ச் வேலைகள் மட்டும் இருப்பதாக பா. ரஞ்சித் தெரிவித்திருந்தார். இப்படத்தை கடந்த 2022-ம் ஆண்டு கான் திரைப்பட விழாவில் அறிவித்திருந்தார் பா. ரஞ்சித்.

முதலில் வேறொரு கதையை படமாக்க நினைத்து, பிறகு 'வேட்டுவம்' படத்திற்கு கதையை மாற்றியிருக்கிறார். இப்படம் இந்தாண்டிற்குள் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, 'சார்பட்டா பரம்பரை 2' படத்திற்காகவும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

'சார்பட்டா பரம்பரை 1', 'ப்ளூ ஸ்டார்', 'காந்தா' ஆகிய படங்களின் திரைக்கதையாசிரியர் தமிழ் பிரபாவுடன் இணைந்து அப்படத்திற்கான வேலைகளை கவனித்து வருகிறார் ரஞ்சித்.

சமீபத்தில், கேரளா இலக்கிய திருவிழாவிலும் ரஞ்சித் இப்படம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்திருந்தார்.

சார்பட்டா 2
சார்பட்டா 2

கூடிய விரைவில் இப்படம் டேக் ஆஃப் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கவிருப்பதாக நீண்ட நாட்களுக்கு முன்பே பா. ரஞ்சித் தெரிவித்திருந்தார்.

அதன் பிறகு அப்படம் தொடங்கப்படாத நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில், பாலிவுட் நடிகர்கள் தேர்வால் அப்படம் தாமதமானது எனவும், இப்போது ஒரு நடிகர் அக்கதையில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இதில் எந்தத் திரைப்படத்திற்கு நீங்கள் வெயிட்டிங்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்: சாதனை வெற்றிபெற்ற லைகா தமிழ்குமரன் - பதவியேற்ற புது நிர்வாகிகள்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இப்போது பொறுப்பில் உள்ளவர்களின் பதவிக்காலம், வருகிற ஏப்ரல் மாதத்தோடு நிறைவு பெறுகிறது. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். அதனையொட்டி புது நிர்வாகிகள... மேலும் பார்க்க

'பாலு ஜுவல்லர்ஸ்' தந்த சான்ஸ்! 30 வருடங்கள், 600 படங்கள்! - மக்கள் தொடர்பில் நிகில் முருகன் | பேட்டி

கோடிகளில் பணம் புரளும் சினிமாவில் மக்கள் தொடர்பாளர் பணி என்பது முக்கியமான ஒன்று. போடப்படும் பணம் சிந்தாமல் சிதாறாமல் திரும்ப வரவேண்டுமெனில் படம் மக்களிடம் சென்று சேர வேண்டும். இந்த வேலையைச் செய்கிறவர்... மேலும் பார்க்க

"முதல் தேர்தல் பிரசாரக் கூட்டத்திலயே அடிதடி, ரத்தம், போலீஸ்னு பார்த்தேன்" - போஸ் வெங்கட் பேட்டி

"திமுகவில் அதிகாரபூர்வமாகப் பொறுப்புக்கு வந்த பிறகு நான் பிரசாரம் செய்யவிருக்கும் முதல் தேர்தல் இது" என்கிறார் போஸ் வெங்கட்.திமுகவில் கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் மாநிலத் துணைத் தலைவராகச் சமீபத்... மேலும் பார்க்க

"13 வருடங்களுக்கு முன் தனுஷ் சாருடன் வந்தேன்; முதல் வரிசையில் உட்கார எனக்கு..!" - சிவகார்த்திகேயன்

70-வது தென்னிந்திய Filmfare Awards South விருது விழா கேரளாவில் நடைபெற்று வருகிறது. இந்த விருது விழாவில் சிவகார்த்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்' படம் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், ... மேலும் பார்க்க

Suriya 47: 'இது ஒரு பக்கா தமிழ் திரைப்படம்'- 'சூர்யா 47' குறித்து மலையாள இயக்குநர் ஜித்து மாதவன்

சூர்யா, நஸ்ரியா நஸ்ரின், நஸ்லன் நடிப்பில், ஆவேசம் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் 'சூர்யா 47' படம் உருவாகி வருகிறது. சூர்யாவுடன் ஜித்து மாதவன் இணைகிறார் என்றதுமே, இது ஒரு மலையாளப் படத்தின் ரீமேக்க... மேலும் பார்க்க

Lucky The Superstar Review: கலகல வசனம் பேசும் நாய்கள்; படத்தின் பரீட்சார்த்த முயற்சி கைகூடுகிறதா?

தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் தேங்காய் ஸ்ரீனிவாசன் (சுப்பு பஞ்சு) மனைவி (தேவதர்ஷினி), குழந்தையுடன் சென்னையில் வசித்து வருகிறார். இவருடைய குழந்தை அம்மு (மேக்னா சுமேஷ்) ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்... மேலும் பார்க்க