சென்னை: பால்கோவாவில் மயக்க மருந்து; தாலிச் செயினைத் திருடிய பெண் - சிக்கியது எப்...
Paperless Judiciary: இந்தியாவின் முதல் காகிதமில்லா நீதித்துறை மாவட்டமானது வயநாடு! பின்னணி என்ன?
இந்திய நீதித்துறையில் வழக்கு தாக்கல் முதல் தீர்ப்பு வரை, காகிதப் பயன்பாடுகள் அதிகளவில் உள்ளன. வழக்கு தொடர்பான கோப்புகளைப் பராமரிப்பதும் பெரும் பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது. இதனைக் களையும் முயற்சியாக நீதித்துறையில் டிஜிட்டல் பயன்பாடுகளைப் படிப்படியாக உயர்த்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்திய நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக டிஜிட்டலுக்கு மாற்றப்பட்ட காகிதமில்லா மாவட்ட நீதித்துறை என்கிற மிகப்பெரிய முன்னெடுப்பு கேரள மாநிலம் வயநாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
AI தொழில்நுட்ப உதவியுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் முறையால் வழக்குகள் மீதான வெளிப்படைத்தன்மை, கால விரையம், வழக்கு தொடுப்போருக்கான செலவீனங்கள் குறைப்பு போன்ற பல சாதகங்கள் இருப்பதாக நீதிபதிகள் பலரும் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில் காகித பயன்பாடுகளை முற்றாக நீக்கியிருப்பதால் பசுமைத் துறையாக வயநாடு மாவட்ட நீதித்துறை உயர்ந்திருப்பதாகக் கூறுகின்றனர்.

கேரள மாநில உயர் நீதிமன்றக் கூட்ட அரங்கில் நடைபெற்ற விழாவில் இந்த முன்னெடுப்பைத் தொடங்கி வைத்துப் பேசிய இந்தியத் தலைமை நீதிபதி சூர்யா காந்த், "நீதிமன்றங்கள் என்பவை மக்களுக்கு நெருக்கமானதாக இருக்க வேண்டும். அவர்களுக்கான பொதுச் சேவைகளை நடுநிலையாகவும் வெளிப்படையாகவும் வழங்க வேண்டும். வயநாட்டில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த முன்னெடுப்பு நம் நீதித்துறையில் மிகப்பெரிய மைல்கல்" என்றார்.



















