Apple-ன் ரேர் மாஸ்டர்பீஸ்… கோடிகளில் விலை பேசும் 50 ஆண்டு பழைமை!
Rain Alert: சென்னைக்கு இன்று ரெட் அலர்ட்... நாளை ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கிறது. கடந்த இரண்டு தினங்களாக தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று மழைக் கொட்டித்தீர்த்தது.
இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (அக்டோபர் 18) அதீத கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. நாளை மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
20 செ.மீ.க்கு மேல் மழை பெய்யும் என்பதால் இந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
அதேசமயம் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, தேனி ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும் என்றும், புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், வடகிழக்குப் பருவமழை மேலும் தீவிரமடைய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.











