செய்திகள் :

Rajini:``அவர்கள் என்னை 'டேய் சிவாஜி' என அழைத்து பேசும்போது" - குதூகலத்துடன் பேசிய நடிகர் ரஜினி

post image

கோவை வேளான் பல்கலைக் கழகத்தில் 1975 - 1979 படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. இந்த நிகழ்வில் இந்தக் கல்லூரியில் பயின்ற சைலேந்திர பாபு ஐபிஎஸ், இறையன்பு ஐஏஎஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் காணொளி காட்சி மூலம் நடிகர் ரஜினிகாந்த் உரையாற்றினார்.

அந்த உரையில், ``சுமார் 50 வருடத்துக்குப் பிறகு எல்லோரும் சந்தித்திருக்கிறீர்கள். பழைய நண்பர்களைப் பார்க்கும்போது வரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்தக் கல்லூரியில் படித்த பலர் பெரும் பெரும் பதவிகளில், உயர்ந்த அந்தஸ்தில் இருக்கிறார்கள். உதாரணத்துக்கு சைலேந்திரபாபு, இறையன்பு போன்றோரை குறிப்பிடலாம்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

நாம் பெரியவராக வளர்ந்ததற்குப் பிறகு, கணவன், அப்பா, தாத்தா, சார் என எத்தனை மரியாதையாக அழைத்தாலும், நம் பழைய நண்பன் பெயர் சொல்லி 'டேய்' என அழைக்கும்போது வரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நான் எவ்வளவு வேலையில் இருந்தாலும், 6 மாதத்துக்கு ஒருமுறை, பெங்களூர் சென்று என்னுடன் பணியாற்றிய டிரைவர், கண்டெக்டர் போன்ற நண்பர்களை சந்திப்பேன்.

என்னுடைய சிவாஜி என்றப் பெயரை நானே மறந்துவிட்டேன். அவர்கள் என்னை டேய் சிவாஜி என அழைத்து பேசும்போது வரும் மகிழ்ச்சியை சொல்ல வார்த்தை இல்லை. நீங்கள் இப்போது சந்தித்துக்கொள்வது மட்டுமல்ல, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சந்தித்துக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு புத்துணர்ச்சியைத் தரும்." எனத் தெரிவித்திருக்கிறார்.

"நீங்க அத்தனை கதை கேட்டால் தூங்காமல் இருந்திருப்பீங்களா?" - செய்தியாளரின் கேள்விக்கு அஸ்வின் காட்டம்

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் 'ஹாட்ஸ்பாட்' படத்தின் முதல் பாகம் கடந்த 2024-ம் ஆண்டு திரைக்கு வந்திருந்தது.அதைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. ப்ரியா பவ... மேலும் பார்க்க

`100 பேர் முன் மன்னிப்பு கேட்டேன்; அப்பவும் விடலை!' மகளிர் ஆணையத்தில் தயாரிப்பாளர் ராஜேஸ்வரி புகார்

பிப்ரவரியில் நடக்கவிருக்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தன்னைப் போட்டியிட விடாமல் தடுக்கும் தற்போதைய நிர்வாகிகளுக்கு எதிராக தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார் ‘ம... மேலும் பார்க்க

`இங்கே யானைகள்தான் வாழ முடியுமா... எறும்பு வாழ முடியாதா?' - வசந்த பாலன் ஆதங்கம்

ஓடிடி தளங்கள் மீதான ஆதங்கம் பற்றியும், சின்ன பட்ஜெட் படங்கள் திரைக்கு வர முடியாமல் தவிப்பது பற்றியும் இயக்குநர் வசந்த பாலன் முகநூலில் சிறு குறிப்பாக எழுதியிருந்தார். அவரிடம் இது பற்றியும் சற்று விரிவா... மேலும் பார்க்க

ஒரே விழாவில் 34 புது இயக்குநர்கள்; ஒளிப்பதிவாளர் செழியனின் புதுமுயற்சி; பங்கேற்கும் பிரபலங்கள்!

ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியனின் 'தி ஃபிலிம் ஸ்கூல்' திரைப்படப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் 34 பேர், 34 சுயாதீனத் திரைப்படங்களை இயக்குகிறார்கள். 34 அறிமுக இயக்குநர்களின் விழா சென்னையில் வருகிற 24... மேலும் பார்க்க

ஜனநாயகன் : "மண்டல தணிக்கை வாரியத்தில் படத்தைப் பார்த்தது யார்? - கேள்வி எழுப்பிய நீதிபதி | Live

"தனி நீதிபதி ஒரே நாளில் முடிவு எடுத்துள்ளார்"- தலைமை நீதிபதி"இந்த வழக்கில் தனி நீதிபதி ஒரே நாளில் முடிவு எடுத்துள்ளார். பதிலளிக்க தணிக்கை வாரியத்திற்கு அனுமதி அளிக்காமல் தனி நீதிபதி முடிவு எடுத்திருக்... மேலும் பார்க்க