செய்திகள் :

Ranabali: "என்னை பார்த்து ஓவர் ஆக்டிங் என்று சொன்னாலும் பரவாயில்லை!" - ராஷ்மிகா மந்தனா

post image

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் 'ரணபலி' திரைப்படம், இம்மாதம் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து வருகிறார்கள். அப்படி இவர்கள் கொடுத்த சமீபத்திய பேட்டியில் ட்ரோல்கள் தொடர்பாகப் பேசியிருக்கிறார்கள்.

Ranabali
Ranabali

ராஷ்மிகா மந்தனா, "அன்பையும் இரக்கத்தையும் காட்டுவது பலவீனமல்ல; அதைத்தான் நான் நம்புகிறேன். இன்றைக்கு நம்மைச் சுற்றி எக்கச்சக்கமான எதிர்மறை எண்ணங்கள் பரவிக் கிடக்கின்றன.

அப்படியிருக்கும் போது, என்னால் முடிந்த அளவு நேர்மறையான எண்ணங்களைப் பரப்பவே நான் விரும்புகிறேன். சிலர் என்னுடைய இந்த இயல்பான குணத்தைக் கூட 'ஓவர் ஆக்டிங்' என்று சொன்னாலும் பரவாயில்லை.

உலகத்தில் இருக்கும் எல்லோருக்கும் எல்லோரையும் பிடித்துவிடாது. எனக்கு இப்படி இருப்பதுதான் பிடித்திருக்கிறது.

மற்றவர்களைச் சந்தோஷப்படுத்துவதற்காக என்னால் நடிக்க முடியாது. இந்த இயல்புதான் என்னையும், என் குடும்பத்தையும், என்னைச் சார்ந்தவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது" எனப் பகிர்ந்திருக்கிறார்.

தொடர்ந்து விஜய் தேவரகொண்டா, "இன்றைய சூழலில் நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மீது செய்யப்படுகிற ட்ரோல்கள் பெரும்பாலானவை திட்டமிட்டு உருவாக்கப்படுபவை.

ஒரு நபரை நேரில் சந்திக்காமல், அவரோடு பழகாமல், அவரைப் பற்றி எப்படி ஒருவரால் இவ்வளவு கடுமையான பிம்பத்தை உருவாக்க முடியும்?

Vijay Devarakonda - Rashmika Mandanna
Vijay Devarakonda - Rashmika Mandanna

சமூக வலைதளங்களில் சில கணக்குகளைப் பயன்படுத்தி, ஒரு குறிப்பிட்ட நபர் மீது தவறான பிம்பத்தை உருவாக்க ஒரு பெரிய குழுவே பின்னணியில் வேலை செய்கிறது.

எனவே, இதுபோன்ற திட்டமிட்ட கருத்துகளை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

'கீதா கோவிந்தம் படத்தின் முதல் நாள்... விஜய் தேவரகொண்டா கோபப்பட்டு கத்திவிட்டார்; நான்.!" - ராஷ்மிகா

‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ ஆகிய படங்களுக்குப் பிறகு நடிகர் விஜய தேவரகொண்டா - நடிகை ரஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து நடித்திருக்கும் படம் 'ரணபலி'. இயக்குநர் ராகுல் சங்கிருதயன் இயக்கத்தில் உருவாக... மேலும் பார்க்க

ரணபலி: ``நான் விஜய் தேவரகொண்டாவுக்கு நேரெதிரானவள்" - நடிகை ராஷ்மிகா மந்தனா

நடிகர் விஜய தேவரகொண்டா - நடிகை ரஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து ரணபலி திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். ‘கீதா கோவிந்தம்’, ‘டியர் தோழன்’ ஆகிய வெற்றிகரமான படங்களுக்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து ந... மேலும் பார்க்க

Janhvi Kapoor: ``பாலியல் அத்துமீறலுக்குச் சமமானது... சும்மா விடக் கூடாது" - நடிகர் விஜய் தேவரகொண்டா

AI தொழிற்நுட்பம் எந்தளவு வசதிகளைக் கொடுக்கிறதோ அதே அளவு இடைஞ்சல்களையும், மன உளைச்சலையும் கொடுக்கிறது. சமீபகாலமாக Deepfake தொழிற்நுட்பம் மூலம் நடிகளைகள் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.சில மாதங... மேலும் பார்க்க

Janhvi Kapoor: ``கண்டனம் தெரிவிக்கும் நோக்கில்கூட அந்த வீடியோவை பார்க்காதீங்க" - நடிகர் சிரஞ்சீவி

கொரட்டாலா சிவா இயக்கத்தில் 2024 செப்டம்பரில் வெளியான திரைப்படம் 'தேவரா: பார்ட் 1'. ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர் உள்ளிட்டவர்கள் நடித்திருந்த இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்தப் படத... மேலும் பார்க்க

Jr. NTR: "அருவருப்பானது, கேவலமானது, வெட்கக்கேடானது" - ஜூனியர் என்.டி.ஆர் கொந்தளிக்க காரணம் என்ன?

'தேவரா' திரைப்படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற 'சுட்டமல்லி' பாடலின் போலி ஏஐ (AI Deepfake) வீடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில், அதனைக் கடுமையாகக் கண்டித்து நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் பதிவிட்டுள்ளார்.Jr.N... மேலும் பார்க்க

The Paradise: "அப்போதும் என்னை தாழ்வாக நடத்தவில்லை!" - நெகிழும் 'தி பாரடைஸ்' நடிகர்

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நடிகர் நானி நடிப்பில் உருவாகியிருக்கும் 'தி பாரடைஸ்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இப்படம் குறித்தும் நடிகர் நானி குறித்தும், இப்படத்தில் நடித்திருக்கும்... மேலும் பார்க்க