IND vs PAK: ' இஷான் கிஷனின் ‘அவுட் ஆஃப் த பாக்ஸ்’ சிந்தனை' - கேப்டன் சூர்யகுமார்...
Roshini Haripriyan: இசையமைப்பாளரை கரம் பிடித்த 'பாரதி கண்ணம்மா' ரோஷினி ஹரிப்ரியன்!
பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் தமிழ் மக்களுக்கு பெரிய அளவில் பரிச்சயமானவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன்.
அந்த மெகா தொடர் ஏற்படுத்தித் தந்த வரவேற்பைத் தொடர்ந்து சினிமாவில் ரவுண்டு வரத் தொடங்கினார். 'கருடன்' படத்தில் முக்கியமானதொரு கேரக்டரில் நடித்திருந்தார்.

கடந்தாண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'தலைவன் தலைவி' திரைப்படத்திலும், காளி வெங்கட் உடன் 'மெட்ராஸ் மேட்னி' படத்திலும் இவர் நடித்திருந்தார். நேற்று இவருக்கு திருமணம் நடைபெற்றிருக்கிறது.
இசையமைப்பாளர் சுந்தர மூர்த்திக்கும் இவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றிருக்கிறது. சுந்தர மூர்த்தி, 'பொம்மை நாயகி', 'ஐரா', 'தண்டட்டி', 'பிகினிங்', 'டென் ஹவர்ஸ்' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர்.
குடும்பத்தினர், திரை நண்பர்கள் என குறுகிய வட்டமே இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

திருமணம் குறித்து ரோஷினி ஹரிப்ரியன் எந்தவொரு பதிவையும் இதுவரை பகிரவில்லை. திருமணத்தில் கலந்து கொண்ட அவருடைய திரைத்துறை நண்பர்கள், திருமண புகைப்படங்களைப் பகிர்ந்திருக்கிறார்கள்.
இந்த ஜோடிக்கு ரசிகர்களும், திரைத்துறையினர் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.





















