செய்திகள் :

RR vs CSK: "இனிவரும் போட்டிகளில் எங்க ஆட்டம் சிறப்பாக இருக்கும்!" - ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

post image

ஐபிஎல் தொடரின் நேற்றைய (மார்ச் 30) போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

இதில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, ராஜஸ்தானின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

RR vs CSK
RR vs CSK

இந்நிலையில் தோல்விக்குப் பிறகு பேசிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், "ஆட்டத்தின் தொடக்கமே எங்களுக்கு மிகவும் கடினமாக அமைந்தது. குறிப்பாக ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் நந்ரே பர்கர் வீசிய பந்துகளை எதிர்கொள்வது சவாலாக இருந்தது.

அவர்கள் மிகச் சரியான லென்த்தில் பந்துவீசி எங்களுக்குப் பெரும் அழுத்தம் கொடுத்தனர். இந்த மைதானத்தில் நாங்கள் இன்னும் பேட்டிங்கில் திறமையைக் காட்டி, 150 முதல் 160 ரன்கள் வரை எடுத்திருக்க வேண்டும்.

கிரிக்கெட்டில் சில நாட்களில் ஆடுகளம் இதுபோன்று பேட்டிங்கிற்குச் சாதகமில்லாமல் இருப்பது இயல்புதான், ஆடுகளம் சாதகமாக அமையும் போது, வீரர்கள் நிச்சயம் பெரிய ஸ்கோரை எட்ட முடியும்.

அதனால் இந்தத் தோல்வியைக் கண்டு நான் விரக்தியடையவில்லை. இப்போதைய 'இம்பாக்ட் பிளேயர்' விதிகளால் எது சரியான இலக்கு என்று கணிக்க முடிவதில்லை. எங்களுடைய முயற்சி பலிக்கவில்லை என்றாலும், வரும் போட்டிகளில் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்துவோம்.

ருதுராஜ் கெய்க்வாட்
ருதுராஜ் கெய்க்வாட்

எங்கள் அணியில் நிறைய இளம் வீரர்கள் உள்ளனர். முதல் போட்டி என்பதால் அவர்கள் சற்று பதற்றத்துடன் விளையாடி இருக்கலாம். ஆனால், முதல் போட்டியிலேயே பல தவறுகளைச் செய்து அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வது ஒரு வகையில் நல்லதுதான்.

இந்தத் தோல்வியைப் பற்றி கவலைப்படாமல், அடுத்த போட்டியில் கவனம் செலுத்துவோம். இன்னும் மூன்று நாட்களில் அடுத்த ஆட்டம் இருப்பதால், வீரர்கள் அனைவரும் நல்ல மனநிலையுடன் தயாராவதை உறுதி செய்வோம். இனிவரும் போட்டிகளில் எங்களின் ஆட்டம் நிச்சயம் இன்னும் சிறப்பாக இருக்கும்," என்று பேசியிருக்கிறார்.

CSK: "எங்கள் அணியின் மீது எழும் விமர்சனங்கள் நியாயமானதுதான்.!"- ஃபிளெமிங் என்ன சொல்கிறார்?

2026 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே இதுவரை இல்லாத அளவிற்கு மிக மோசமான தொடக்கத்தைச் சந்தித்திருக்கிறது. விளையாடிய முதல் 3 போட்டிகளிலும் தோல்வியைச் சந்திருக்கிறது. ஒரு வெற்றி கூட பெறாமல் புள்ளிப்பட்டியலில் 0 பு... மேலும் பார்க்க

RR vs RCB: "களத்தில் நான் பந்துவீச்சாளர்களை கவனிக்க மாட்டேன், மாறாக.!"- சூர்யவன்ஷி சொல்லும் சீக்ரெட்

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்.10) ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் ராஜஸ்தான் அணி பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றி... மேலும் பார்க்க

RR Vs RCB: "வைபவ் பவர்பிளேயில் விளையாடிய விதம் தான்.!"- தோல்வி குறித்து கேப்டன் ரஜத் பட்டிதார்

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 10) கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத இரு அணிகள் மோதியதால், ரசிக... மேலும் பார்க்க

RR Vs RCB: `கேப்டனாக நான் எடுத்த தவறான முடிவுகளால் 20 ரன்கள் கூடிவிட்டது!' - கேப்டன் ரியான் பராக்

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய (ஏப்ரல் 10)16-வது லீக் போட்டியில், பெங்களூரு அணி நிர்ணயித்த 202 ரன்கள் என்ற இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18 ஓவர்களிலேயே எட்டி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு ப... மேலும் பார்க்க

Mukul Choudhary: 'கடன், ஏழ்மை, தந்தையின் சிறைவாசம்'- வலிகளைக் கடந்து வென்ற IPL நாயகன் முகுல் சௌத்ரி!

ஏப்ரல் 8, 2026 அன்று கொல்கத்தாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான போட்டிகளில் ஒன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) vs கொல்கத்தா நைட் ... மேலும் பார்க்க

IPL: கிரிக்கெட் உலகை மிரளவைத்த அந்த `27' பந்துகள்; முகுல் சௌத்ரி எனும் 'ஒன் மேன் ஆர்மி' - யார் இவர்?

கிரிக்கெட் என்பது இந்தியாவில் வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது கோடிக்கணக்கான இளைஞர்களின் உணர்ச்சி. ஒரு சிறிய தெருவில் ரப்பர் பந்துடன் தொடங்கும் கனவு, ஒருநாள் ஸ்டேடியத்தின் மின்னொளியில் நனவாகும் போதுதா... மேலும் பார்க்க