நெல்லை: பொருநை அருங்காட்சியகம் திறப்பு விழா; முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம...
S.I.R : 'தமிழகத்தில் 97 லட்சம் பெயர்கள் நீக்கம்; பீஹாரை விட அதிகம்! - அதிகாரப்பூர்வ அப்டேட்
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் முடிவடைந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், இன்று (19.12.2025) தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்திருந்தார். தமிழக அளவில் கிட்டத்தட்ட 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கின்றனர் எனக் கூறினார்.

அவர் கூறியதாவது, 'கொடுக்கப்பட்ட முகவரியில் இல்லாதவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் ஆகியோரின் பெயர்கள் மட்டுமே நீக்கப்பட்டிருக்கிறது. BLO க்களால் முகவரியை கண்டுபிடித்து உறுதி செய்ய முடியாதவர்களின் பெயரை மட்டுமே நீக்கியிருக்கிறோம்.
தமிழகத்திலேயே அதிகபட்சமாக சோழிங்கநல்லூர், பல்லாவரம், ஆலந்தூர் தொகுதிகளில்தான் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கின்றனர். நீக்கப்பட்டவர்கள் தங்களின் பெயர்களை சேர்க்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்' என்றார்.
அவர் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் (தமிழக அளவில்)
SIR க்கு முன்பு (அக்.27 வரை) வாக்காளர்களின் எண்ணிக்கை - 6,41,14,587
SIR க்குப் பின் (வரைவு வாக்காளர் பட்டியலில்) - 5,43,76,755
ஆண்கள் - 2,66,63,033
பெண்கள் - 2,77,06,332
மாற்றுத்திறனாளிகள் - 4,19,355

இறந்தவர்கள் - 26,94,672
இடம் பெயர்ந்தவர்கள் - 52,74,499
விண்ணப்பப்படிவத்தை சமர்பிக்காதவர்கள் - 13,54,013
பல இடங்களில் வாக்கு வைத்திருந்தவர்கள் - 3,98,278
மொத்தம் நீக்கப்பட்டவர்கள் - 97,37,831
தமிழக அளவில் வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தமாக 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 பேர் நீக்கப்பட்டிருக்கின்றனர். நீக்கப்பட்ட தகுதியான நபர்கள் இன்றிலிருந்து 18.01.2026 வரை தங்களின் பெயரை இணைக்க மீண்டும் விண்ணப்பிக்கலாம். இதற்கான முகாம்கள் பூத் வாரியாக நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்திருக்கிறார்.


















