செய்திகள் :

Sai pallavi:``மரியாதையான, சிறந்த நடிகை" - சாய் பல்லவி குறித்து நடிகர் அனுபம் கெர் பாராட்டு

post image

கோவாவில் நடந்து வரும் 56-வது சர்வதேச திரைப்பட விழா (IFFI) நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம் இவ்விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் முதல் திரைப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக அமரன் படக்குழுவினர் கோவா சென்றனர். இவ்விழாவில் பழம்பெரும் நடிகர் அனுபம் கெர் உள்ளிட்டப் பலப் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

அப்போது சாய் பல்லவியுடன் நடிகர் அனுபம் கெர் செல்ஃபி எடுத்துக்கொண்டார். அந்த சந்திப்புக்குப் பிறகு அனுபம் கெர் தன் சமூக ஊடகப் பக்கத்தில், ``சாய் பல்லவி உண்மையானவர், பாசமுள்ளவர், தனித்துவமானவர், மரியாதையானவர் என உணர்ந்தேன். திறமையான நடிகை. இந்த சந்திப்பு சிறப்பாக இருந்தது. அவரின் திரைப்படங்கள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நடிகை சாய் பல்லவி தற்போது ராமாயணம் படத்தில் சீதையாக நடித்து வருகிறார்.

AVM Saravanan: ``ஏவி.எம் என்ற பெரும் தோப்பில் நடப்பட்ட ஒரு சிறு செடி நான்" - கமல் இரங்கல்

தமிழ் சினிமாவின் முதுபெரும் தயாரிப்பாளர் ஏவி.எம் சரவணன் இன்று இயற்கை எய்தினார்.ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் அவரின் உடலுக்கு நேரில் சென்று அஞ... மேலும் பார்க்க

AVM Saravanan: முரட்டு காளை, அயன், சிவாஜி - தமிழ் சினிமாவில் புதிய பாய்ச்சலை நிகழ்த்திய சரவணன்

முதுபெரும் தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் இயற்கை எய்தியிருக்கிறார். தந்தை ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியார் தொடங்கிய தயாரிப்பு நிறுவனத்தை அடுத்தடுத்த உயரங்களுக்குக் எடுத்துச்சென்ற பெருமை ஏ.வி.எம். சரவணனுக்... மேலும் பார்க்க

AVM Saravanan: "அவரோட நியாபகமாதான் சூர்யாவுக்கு சரவணன்னு பேர் வச்சேன்"- கண்ணீரில் சிவகுமார்

ஏ.வி.எம் சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய சிவகுமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். ஏ.வி.எம் நிறுவனம் 73 வருடங்களில் 175 படங்கள் எடுத்திருக்கிறது. இந்த ஸ்டுடியோவில் நடிக்காத நடிகர்களே க... மேலும் பார்க்க