செய்திகள் :

Samantha: "அவரால்தான் நான் இப்போது ஒரு சிறந்த மனிதராக உணர்கிறேன்" - மனம் திறந்த நடிகை சமந்தா

post image

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி கதாநாயகியான சமந்தா, இயக்குநர் ராஜ் நிதிமோருவைச் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். 2021-ம் ஆண்டு 'தி ஃபேமிலி மேன் 2' படப்பிடிப்பின்போது தொடங்கிய இவர்களது நட்பு, பல ஆண்டுகளாக வளர்ந்து திருமணத்தில் முடிந்தது.

இந்த நிலையில், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் புதிய உறவு குறித்து முதன்முறையாக நெகிழ்ச்சியான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ``நான் விவாகரத்து என்ற சூழலை அடைந்தபோது, என்னை நானே முழுமையாக மறைத்துக்கொண்டேன். மீண்டும் ஒருவரை நம்புவதோ அல்லது நெருங்கிப் பழகுவதோ இனி சாத்தியமே இல்லை என்றுதான் நினைத்தேன்.

இந்த நிலையில்தான், பிரபல இயக்குநரான ராஜ் நிதிமோருவைச் சந்தித்தேன். அவர் என் வாழ்க்கையில் இருப்பதால், நான் இப்போது ஒரு சிறந்த மனிதராக உணர்கிறேன்.

சமந்தா
சமந்தா

அந்த அன்பையும் நட்பையும் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு என் மனநிலை மாறியதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இப்போது நான் இருக்கும் இந்த உறவின் காரணமாகவே நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னில் ஏற்பட்ட இந்த நேர்மறையான மாற்றத்தை எனது நெருங்கிய தோழிகளும் கவனித்து ஒப்புக்கொண்டார்கள்" என்றார்.

தற்போது சமந்தா நடித்து வரும் 'மா இன்டி பங்காரம்' (Ma Inti Bangaram) திரைப்படத்திற்கு ராஜ் நிதிமோரு பெரும் ஆதரவாக இருந்து வருகிறார். நந்தினி ரெட்டி இயக்கும் இந்தப் படத்தில் சமந்தா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாய் கிழவி: 'நான் சினிமாவுக்கு வந்தபோது நிறைய பேர் என்னை அவமானப்படுத்தினாங்க.! - ராதிகா எமோஷனல்

சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்... மேலும் பார்க்க

`இயல்பாகவே அம்மாவோட ஜீன் என்னிடம் இருக்கு; அம்மா மாதிரி வர முடியும்னு.!' - குஷ்பு மகள் அவந்திகா

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. 2000-ல் இயக்குநர் சுந்தர் சி-யை காதல் மணம் புரிந்தது அனைவரும் அறிந்த வரலாறு. இந்தத் தம்பதிக்கு அவந்திகா, அனந்திகா என இரண்டு மகள்கள் இருந்தாலும், ... மேலும் பார்க்க

தாய் கிழவி: "இது ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய படம்; ஆனால்" - ராதிகா

சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்... மேலும் பார்க்க

தாய் கிழவி: "நான் யாருக்கும் போட்டியாகவோ, காலி பண்ணவோ வரல. என்னை விட்ருங்க!" - சிவகார்த்திகேயன்

சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்... மேலும் பார்க்க

Pa Ranjith: 'வேட்டுவம்', 'சார்பட்டா 2', 'பிர்சா முண்டா' - பா.ரஞ்சித் லைன் அப் அப்டேட்ஸ்!

பா. ரஞ்சித் இப்போது 'வேட்டுவம்' படத்தின் படப்பிடிப்பை முடித்திருக்கிறார். கடந்த 2024-ம் ஆண்டு இவருடைய இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படம் திரைக்கு வந்திருந்தது. அப்படத்தை முடித்த கையோடு 'வேட்டுவம்' படத்... மேலும் பார்க்க