செய்திகள் :

Scene: "எங்களை விட நீங்கள் இந்த வெற்றியை அதிகமாக கொண்டாடி மகிழ்ந்திருக்கிறீர்கள்!" - நெகிழும் சூர்யா

post image

இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா, நஸ்லென் நடிப்பில் வெளியான 'சீன்' திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

சீன் திரைப்படம்
சீன் திரைப்படம்

படத்திற்குக் கிடைத்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்து நடிகர் சூர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அந்தக் காணொளியில் அவர், "அன்பான ரசிகர்கள், தம்பி தங்கைகள் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் எனது மரியாதைகளும் நன்றிகளும்.

'சீன்' திரைப்படத்தைத் திரையரங்குகளுக்கு வந்து பார்த்து, விமர்சனங்கள் கொடுத்து, ஒவ்வொரு காட்சியையும் அலசி ஆராய்ந்து, டீகோடிங் செய்து, திருவிழா போலக் கொண்டாடி ஒரு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கிறீர்கள்.

பொதுவாக ஒரு படம் வெற்றி பெற்றால், அந்தப் படத்தில் நடித்தவர்கள், இயக்கியவர்கள் மற்றும் பணியாற்றிய படக்குழுவினர்தான் அதிகம் மகிழ்ச்சியடைவார்கள்.

ஆனால், எங்களை விட நீங்கள் இந்த வெற்றியை அதிகமாகக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறீர்கள். இதற்கு எப்படி வார்த்தைகளால் நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. ஒட்டுமொத்தப் படக்குழுவின் சார்பாகவும் எனது மனமார்ந்த நன்றிகளையும் மரியாதைகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த ஆண்டை மிகவும் சிறப்பானதாக மாற்றியதற்கும், 'சீன்' திரைப்படத்தைக் கொண்டாடியதற்கும் மிக்க நன்றி.

இந்தப் படத்திற்கு ஆதரவளித்த அனைத்துத் திரையரங்க உரிமையாளர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள், விமர்சகர்கள், சமூக வலைதளப் பிரபலங்கள், நலம் விரும்பிகள் மற்றும் அனைத்து மொழி ரசிகர்களுக்கும் எனது மரியாதையையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

Anirudh: அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பு; மோடி - சோனியா காந்தி கடிதம் மூலம் வாழ்த்து!

அனிருத் - காவ்யா மாறன் திருமணம் சில நாட்களுக்கு முன்பு கிரீஸ் நாட்டில் நடைபெற்றிருந்தது. நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் வட்டத்தினர் முன்னிலையில் அத்திருமணம் நடைபெற்றிருந்தது. இன்று சென்னைய... மேலும் பார்க்க

"அதில் எங்கிருந்து எங்க அப்பா வந்தார்?" - 'நெப்போடிசம்' பேச்சுகள் குறித்து லியோ சிவக்குமார்

ராதிகா சரத்குமார், லியோ சிவகுமார், பிரிகிடா சகா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் 'டெலிவரி பாய்' திரைப்படம் நவம்பர் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. லியோ சிவகுமார் திண்டுக்கல் லியோனியின் மகன... மேலும் பார்க்க

சத்தியவான் சாவித்திரி விமர்சனம்: நவீன சாவித்திரியின் கதை - கவனம் பெறுகிறதா இந்த குறுக்கு விசாரணை?

வழக்கறிஞராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் சாவித்திரி (கீர்த்தி சுரேஷ்), விருப்பமில்லாத நிலையிலும் தீபக்கை (சாருகேஷ்) திருமணம் செய்துகொண்டு சென்னை வருகிறார். பிரபல வழக்கறிஞர் மார்க்கண்டேயனிடம் (மிஷ்க... மேலும் பார்க்க

"அவரிடம் கேள்விகள் கேட்டுத் தொந்தரவு செய்து கொண்டே இருப்பேன்!" - 'தர்மன்' பற்றி ராஷி கன்னா

நடிகை ராஷி கன்னா தமிழில் 'தர்மன்' படத்தில் தற்போது நடித்து வருகிறார். அதைத் தாண்டி பாலிவுட்டிலும் பெரிய லைன்-அப்பை அவர் கையில் வைத்திருக்கிறார். சமீபத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் ... மேலும் பார்க்க

மாநாடு : ஆடுபுலி ஆட்டம்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 43

`சினி'ஸ்கோப் 43மாநாடு : ஆடுபுலி ஆட்டம்!அப்துல் காலிக் எனும் இளைஞனின் நண்பன் ஈஸ்வரன் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். ஆனால், அந்தப் பெண்ணுக்குத் திருமண ஏற்பாடு நடக்கிறது. அங்கிருந்து அந்தப் பெண்ணைக் கூட்டிக... மேலும் பார்க்க

Samantha: ''எங்கள் இதயங்கள் இதுவரை இல்லாத அளவுக்கு மகிழ்ச்சியில்...'' - ஆண் குழந்தைக்கு தாயான சமந்தா

நடிகை சமந்தாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. சமந்தாவுக்கும், இயக்குநர் ராஜ் நிடிமோருவுக்கும் கடந்த 2025-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. Samantha - Raj Nidimoruதிருமணத்திற்குப் பிறகு, இந்தாண்டு ஜூன்... மேலும் பார்க்க