நெல்லை: பொருநை அருங்காட்சியகம் திறப்பு விழா; முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம...
SIR : `வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிலளிப்பார்!’ - அமைச்சர் ஐ.பெரியசாமி
எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியலில் திண்டுக்கல் மாவட்டத்தில் 3,24,894 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 1,07,991 பேர் இறந்தவர்கள், முகவரியில் இல்லாதவர்கள் 1,44,816 பேர், முகவரி மாறியவர்கள் அல்லது கண்டுபிடிக்க முடியாதவர்கள் 51,905 பேர், இரட்டைப் பதிவாக 20,182 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வாக்களர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு வாக்கு சாவடிகள் இரண்டாக பிரிக்கப்படுவதோடு புதிதாக 173 வாக்குச் சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் வரும் தேர்தலில் 2,301 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, " எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளிப்பார். திண்டுக்கல்லில் விரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களை மீண்டும் சேர்ப்போம்.

விஜய் அரசியல் கட்சியே கிடையாது அவரைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. விஜய் முதலில் தேர்தல் களத்திற்கு வரட்டும் பின் அவரைப்பற்றி பேசலாம். அவரைப் பற்றி கருத்து ஏதும் இல்லை. 75 ஆண்டுகள் வருட பழமையான கட்சி திமுக. விஜய் இப்பொழுதுதான் அரசியலுக்கு வந்துள்ளார்.
ஜனவரி 7ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திண்டுக்கல்லுக்கு வரவுள்ளார். அது குறித்து நாளை ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது பல்வேறு திட்டங்கள் குறித்து அறிவிப்போம்” என தெரிவித்தார்.


















