நெல்லை: பொருநை அருங்காட்சியகம் திறப்பு விழா; முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம...
SIR: வெளியான பட்டியல்; சென்னையில் தொகுதி வாரியாக நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை விவரம்!
பீகாரில் ஏராளமான குழப்பங்களுடன் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது. அதில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் `வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்' (SIR) பணி நடந்து வருகிறது.
அந்தவகையில் கடந்த நவம்பர் 4-ம் தேதி, தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் தொடங்கின.
அதன்படி, தமிழ்நாட்டில் கடந்த 14-ம் தேதியுடன் 100 சதவிகிதம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்டு திரும்பப் பெறப்பட்டு, ஆன்லைனிலும் பதிவேற்றம் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன் அடிப்படையிலான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (டிச. 19) மாவட்ட ரீதியாக வெளியிடப்பட்டு வருகிறது. அந்தவகையில் சென்னையில் தொகுதி வாரியாக நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்கள் இங்கே...
1.ஆர்.கே.நகர் தொகுதி - 32,501
2.பெரம்பூர் தொகுதி - 97,345
3.கொளத்தூர் தொகுதி - 1,03,812
4.வில்லிவாக்கம் தொகுதி - 97,960
5.திரு.வி.க. நகர் தொகுதி - 59,043
6.எழும்பூர் தொகுதி - 74,858
7.ராயபுரம் தொகுதி - 51,711
8.துறைமுகம் தொகுதி - 69,824
9.சேப்பாக்கம் தொகுதி - 89,241
10.ஆயிரம் விளக்கு தொகுதி - 96,981
11.அண்ணாநகர் தொகுதி - 1,18,287

12.விருகம்பாக்கம் தொகுதி - 1,10,824
13.சைதாப்பேட்டை தொகுதி - 87,228
14.தியாகராயநகர் தொகுதி - 95,999
15.மயிலாப்பூர் தொகுதி - 87,668
16.வேளச்சேரி தொகுதி - 1,27,521

















