செய்திகள் :

SIR: எஸ்.ஐ.ஆர் வரைவு வாக்காளர் பட்டியல்: தஞ்சாவூர் மாவட்டத்தில் 2,06,503 வாக்காளர்கள் நீக்கம்!

post image

தமிழகம் முழுவதும் எஸ்.ஐ.ஆர் மூலம் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து சீரமைக்கும் பணியினை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. பீகாரில் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டதாக சர்ச்சை கிளம்பியதால் இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் குறைந்த கால அவகாசமே கொடுப்பட்டதும் சர்ச்சைகளுக்கு வித்திட்டது.

தஞ்சாவூர்

இந்த சூழலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருவாய்துறையினர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் எஸ்.ஐ.ஆர் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எஸ்.ஐ.ஆர் படி வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டார். எஸ்.ஐ.ஆர்-க்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளிலும் 20,98,561 வாக்காளர்கள் இருந்தனர்.

எஸ்.ஐ.ஆர்க்கு பின்பு 18,92,058 வாக்காளர்கள் வரைவுபட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 2,06,503 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் இறந்தவர்கள் மற்றும் வேறு பகுதிக்கு குடிபெயர்ந்தவர்களும் அடக்கம் என சொல்லப்பட்டுகிறது. இது குறித்து அரசியல் கட்சிகளை சேர்ந்த சிலரிடம் பேசினோம், ``தஞ்சாவூர் மாவட்டத்தில் முதலில் எஸ்.ஐ.ஆர் விண்ணப்பங்கள் பெற்று அதை பதிவேற்றம் செய்கின்ற பணி சுணக்கமாக நடைபெற்றது. பின்னர், மாவட்ட ஆட்சியர், டி.ஆர்.ஓ உள்ளிட்ட அதிகாரிகள் இதில் முழு கவனம் செலுத்தி இரவு, பகலாக பணியினை மேற்கொண்டனர்.

அதனால் எஸ்.ஐ.ஆர் விண்ணப்பம் பெற்று பதிவேற்றம் செய்யும் பணி வேகமெடுத்தது. ஆதார் போன்றவை கொடுக்காத விண்ணப்பங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் 2,06,503 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தகுதியான வாக்காளர் பெயர் ஏதோ ஒரு காரணத்தால் விடுபட்டிருந்தால், அல்லது நீக்கம் செய்யப்பட்டிருந்தால் அந்த வாக்காளரை சேர்த்து அவர் தன்னுடைய வாக்குரிமையை செலுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு வாக்காளர் தனது வாக்கை இழந்தால் அது தேர்தல் ஆணையத்தில் தோல்வியாகவே பார்க்கப்படும்" என்றனர்.

'நாங்க குரைக்கிற நாய் கிடையாது' - மீண்டும் அண்ணாமலையை சீண்டிய தவெக அருண்ராஜ்

தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் கோவையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும். கூட்டணிக்காக ஒரு குழு அமைக்கப்படும்.அண்ணாமலை தவெகவை தொடர்ந்து ... மேலும் பார்க்க

"கக்கூஸ் கழுவத்தான் கண்ணகி நகர்ல தூக்கி போட்டீங்களா?" - கொந்தளிக்கும் மறுகுடியமர்வு மக்கள்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லையென்று சென்னையிலுள்ள கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் ஆகிய குடியிருப்புப் பகுதி மக்களைத் திரட்டி சென்னை ... மேலும் பார்க்க

மகா. உள்ளாட்சித் தேர்தல்: 134 நகராட்சிகளை ஆளும் பாஜக கூட்டணி முன்னிலை; உத்தவுக்குப் பெரும் பின்னடைவு

மகாராஷ்டிரா முழுவதும் உள்ள நகராட்சிகளுக்குக் கடந்த 2ம் தேதி தேர்தல் நடந்தன. சில நகராட்சிகளுக்குத் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு நேற்று தேர்தல் நடத்தப்பட்டன. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 10 மண... மேலும் பார்க்க

கர்நாடகா: "நானே முதல்வராகத் தொடர்வேன்" - சித்தராமையா விடாப்பிடி; டி.கே. சிவகுமாரின் பதில் என்ன?

மீண்டும் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் இடையே மோதல் போக்கு தொடங்கியுள்ளது.சில மாதங்களுக்கு முன்பு, முதலமைச்சர் நாற்காலிக்காக இருவருக்கும் இடையே பிரச்னை இருந்தது. பி... மேலும் பார்க்க

பட்டமளிப்பு விழாவில் பெண்ணின் ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்; 'பணியில் சேரவில்லை' - மீண்டும்‌ சர்ச்சை

இந்த வாரத்தின் தொடக்கத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆயுஷ் மருத்துவப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார்.அங்கே பட்டம் வாங்க வந்த முஸ்லிம் பெண் ஒருவரின் ஹிஜாப்பைப் பிடித்து இழுக்க முயன்றார். இ... மேலும் பார்க்க

நாமக்கல்: தவெக மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் நீக்கம்; பொதுச்செயலாளர் ஆனந்த் அதிரடி; என்ன நடந்தது?

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் ஜே.ஜே.செந்தில்நாதன். தமிழக வெற்றிக் கழகத்தின் நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்து வந்தார். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் கூட்ட... மேலும் பார்க்க