நெல்லை: பொருநை அருங்காட்சியகம் திறப்பு விழா; முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம...
SIR: கோவை மாவட்டத்தில் 6.50 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் - விரிவான தகவல்கள்!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தப் பணியில் (எஸ்ஐஆர்) ஈடுபட்டு வருகிறது. அந்தப் பணிகள் நிறைவடைந்து இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கோவை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை, கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வெளியிட்டார். இதில் மொத்தம் 6 லட்சத்து 50 ஆயிரத்து 590 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்தப் பணிகளுக்கு முன்பாக கோவை மாவட்டத்தில் 32 லட்சத்து 25 ஆயிரத்து 198 வாக்காளர்கள் இருந்தார்கள். தற்போது வெளியாகியுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் 25 லட்சத்து 74 ஆயிரத்து 608 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 12,43,282 பேர் ஆண்கள், 13,30,807 பேர் பெண்கள், 518 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.

SIR: கோவை மாவட்டத்தில் 6.50 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!
உயிரிழந்தவர்களில் 1,19,489 பேர், முகவரி இல்லாதவர்களில் 1,08,360 பேர், நிரந்தரமாக குடி பெயர்ந்தவர்களில் 3,99,159 பேர், இரட்டை பதிவுகளில் 23,202 பேர், இதர காரணங்களுக்காக 380 பேர் என 6,50,590 வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியலின்படி தொகுதி வாரியாக மேட்டுப்பாளையம் தொகுதியில் 2,69, 898, வாக்காளர்களும், சூலூர் தொகுதியில் 2,93,516 வாக்காளர்கள், கவுண்டம்பாளையம் தொகுதியில் 3,77, 740 வாக்காளர்கள், கோவை வடக்கு தொகுதியில் 2,78,531 வாக்காளர்கள்,தொண்டாமுத்தூர் தொகுதியில் 2,72,946 வாக்காளர்கள் உள்ளனர். கோவை தெற்கு
தொகுதியில் 1,79,308 வாக்காளர்கள், சிங்காநல்லூர் தொகுதியில் 2,54,422 வாக்காளர்கள், கிணத்துக்கடவு தொகுதியி்ல் 2,83,621 வாக்காளர்கள்,
பொள்ளாச்சி தொகுதியில் 1,96,375 வாக்காளர்கள், வால்பாறை தொகுதியில்
3,77,740 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளன


















