Vijay-யை காட்டி எல்லோரும் பலனடைகிறார்கள் | பழ.கருப்பையா Interview | Vikatan
SIR : தமிழ்நாட்டில் அதிக, குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதிகள்... இறுதி வாக்காளர் பட்டியல்!
தமிழக அளவில் வாக்காளர் தீவிர திருத்தத்தப் பணிகள் முடிந்த பிறகான இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார்.

அதன்படி, 'தமிழகத்தில் SIR க்கு முன்பாக 6,41,14, 587 வாக்காளர்கள் இருந்தனர். SIR கணக்கெடுப்பு முடிந்து டிசம்பர் 19 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 5,43,76,756 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். 97,37,831 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தது. பெயர்கள் நீக்கப்பட்டவர்கள் மீண்டும் தங்கள் இருப்பை நிரூபித்து விண்ணப்பத்தை நிரப்பிக் கொடுத்து பெயரை சேர்க்க கால அவகாசம் வழங்கப்பட்டது.
இந்த காலக்கட்டத்தில் மேலும் 27.53 லட்சம் பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டு 4.23 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்படிருந்தது. இறுதியாக இப்போது வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 67 லட்சத்து 7 ஆயிரத்து 380 வாக்காளர்களின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. இதில் 2 கோடியே 77 லட்சத்து 38 ஆயிரத்து 925 பேர் ஆண்கள், 2 கோடியே 89 லட்சத்து 60 ஆயிரத்து 838 பேர் பெண்கள். 7617 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர். இறுதியாக இப்போது 74 லட்சத்து 7 ஆயிரத்து 207 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்திலேயே அதிகமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 5,36,991 வாக்காளர்களும், தமிழகத்திலேயே மிகக்குறைவாக துறைமுகம் தொகுதியில் 1,16,986 வாக்காளர்களும் இருக்கின்றனர்.
வெளியான பட்டியலின்படி,
செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 5,36,991 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 2,62,621 ; பெண்கள் 2,74,254 ; மூன்றாம் பாலினத்தவர் 116).
இதற்கு அடுத்தப்படியாக திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட ஆவடி சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 4,28,772 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 2,09,662 ; பெண்கள் 2,19,035; மூன்றாம் பாலினத்தவர் 75).
தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சென்னை மாவட்டத்திற்குட்பட்ட துறைமுகம் சட்டமன்றத் தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,16,896 ஆவர். (ஆண்கள் 58,221; பெண்கள் 58,620; மூன்றாம் பாலினத்தவர் 55).
இதற்கு அடுத்தப்படியாக இரண்டாமிடத்தில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட எழும்பூர் சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,34,879 ஆவர் (ஆண்கள் 65,677 ; பெண்கள் 69,149 ; மூன்றாம் பாலினத்தவர் 53).














