``திராவிட மாடல் ஆட்சி: வரலாறு காணாத வகையில் திருக்கோயில் திருப்பணிகள்!" - அறநிலை...
மொத்தம் 74.07 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் - தமிழ்நாட்டில் வெளியான இறுதி வாக்காளர் பட்டியல்!
கடந்தாண்டு பீகார் தேர்தலை முன்னிட்டு பீகாரில் ஏராளமான குழப்பங்களுடன் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது.
அதில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் `வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்' (SIR) பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

அந்தவகையில் கடந்த நவம்பர் 4-ம் தேதி, தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் தொடங்கின. எல்லாப் பணிகளும் நிறைவடைந்த நிலையில் இன்று (பிப். 23) இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ந்தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.
SIR பணிகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை - 5,67,07,380 ஆக மாறி இருக்கிறது.
இதில் ஆண் வாக்காளர்கள் - 2,77,38,925
பெண் வாக்காளர்கள் - 2,89,60,838
மூன்றாம் பாலினத்தவர்கள் - 7,617
SIR-ன் முதற்கட்ட வாக்காளர் பட்டியல் வெளியான, பிறகு இதுவரை 27.53 லட்சம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் SIR மூலம் 74.07 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
2025இல் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், SIR பணிகளுக்குப் பிறகான இறுதி வாக்காளர் பட்டியலில் 5.67 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட ரீதியாக வெளியான இறுதி வாக்காளர் பட்டியல் கீழே















