செய்திகள் :

Sivakarthikeyan: "இதுக்கு போய் சீரியஸாக ரிப்ளை பண்றீங்க.!" - வெங்கட் பிரபு பதிவும், SK பதிலும்!

post image

சமீபத்திய பேட்டி ஒன்றில் கங்கை அமரன், வெங்கட் பிரபுவின் அடுத்த படம் தொடர்பாகப் பேசிய விஷயம் இணையத்தில் வைரலானது.

கங்கை அமரன், அந்த பேட்டியில் நடிகர் சிவகார்த்திகேயனைத்தான் குறிப்பிட்டுப் பேசுகிறார் என சமூக வலைதளப் பக்கங்களில் பகிரப்பட்டன.

இந்தத் தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இயக்குநர் வெங்கட் பிரபு விளக்கமளித்திருக்கிறார்.

 Gangai Amaran
Gangai Amaran

இது தொடர்பான பதிவில் அவர், "சிவகார்த்திகேயன் எப்போதும் எனக்கு ஒரு நல்ல நண்பர்; என் சொந்தச் சகோதரர் போன்றவர். இப்போது அவரைப் பற்றிப் பல ஊகங்களும் சர்ச்சைகளும் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

ஒரு தந்தையாக, தன் சொந்த மகனின் படம் தாமதம்காகும்போது அவருக்கு ஆதங்கமும் மனவருத்தமும் ஏற்படுவது இயல்புதான். அவருக்கு இந்த விவகாரத்தின் முழுப் பின்னணியும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் நான் அவரை எந்தக் குறையும் சொல்ல மாட்டேன்.

நான் என்னுடைய வேலை விஷயத்தில் மிக அமைதியாகச் செயல்படக்கூடிய ஒருவன். எனது தொழில் தொடர்பான விஷயங்களை அவர் உட்பட யாருடனும் நான் விரிவாக விவாதிப்பதில்லை.

சில பல காரணங்களால் அந்தத் திட்டம் தொடங்க முடியாமல் போனது. அவ்வளவுதான். இதில் எங்களுக்குள் எந்தவிதக் கசப்புணர்வும் இல்லை. காலம் கனிந்து, ஒரு நல்ல கதைக் களம் அமையும் போது, மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்ற நான் நிச்சயமாக விரும்புவேன்.

எனவே தயவுசெய்து, இந்தச் சர்ச்சைகளுக்கெல்லாம் இதோடு முற்றுப்புள்ளி வையுங்கள். நான் என்னுடைய அடுத்த படத்தின் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன்" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

வெங்கட் பிரபுவின் பதிவுக்கு சிவகார்த்திகேயனும் பதில் பதிவு போட்டிருக்கிறார். அந்தப் பதிவில் அவர், "சார், நாம் ஒரே குடும்பம். இதற்கு நீங்கள் இவ்வளவு சீரியஸாக ரிப்ளை தந்துக் கொண்டிருக்கிறீர்கள்.

உங்களது வாழ்த்துகளுக்கு ரொம்பவே நன்றி சார். உங்களுடைய அடுத்த திரைப்படத்திற்கும் என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துகள்! இதை நான் உங்களுக்கு முன்னாடியும் சொல்லியிருக்கேன், இப்பவும் சொல்றேன்.

நான் எப்போதும் உங்களுடைய தீவிரமான ஃபேன்! சீக்கிரமாகவே உங்களுடன் இணைந்து பணியாற்றக் காத்திருக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Dorothy: "சிலர் படம் பார்க்காமல் தேவையில்லாத விவாதங்களைக் கிளப்பிவிடுறாங்க.!"- கார்த்திக் சுப்புராஜ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'டோரதி' திரைப்படம் கடந்த செப்.25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு இ... மேலும் பார்க்க

Don't Trouble The Trouble: "இப்படி ஒரு கதையைக் கேட்டதும் இல்லை... நடித்ததும் இல்லை!"- ஃபகத் ஃபாசில்

ஃபகத் ஃபாசில் நடித்திருக்கும் ஃபேண்டஸி திரைப்படமான 'டோண்ட் டிரபிள் தி டிரபிள்' படம் அக்டோபர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தெலுங்கு, மலையாளம் என இருமொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. இந்தப் ப... மேலும் பார்க்க

"இந்தப் படத்தை பார்க்கும் போது நான் அழுதேன்.!'- 'டோண்ட் டிரபிள் தி டிரபிள்' படம் குறித்து ராஜமௌலி

ஃபகத் ஃபாசில் நடித்திருக்கும் ஃபேண்டஸி திரைப்படமான 'டோண்ட் டிரபிள் தி டிரபிள்' படம் அக்டோபர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தெலுங்கு, மலையாளம் என இருமொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. இந்தப் ப... மேலும் பார்க்க

Suriya: "அது ஜோதிகாவின் 20 வருட பக்கெட் லிஸ்ட்!" - 20ம் ஆண்டு திருமண நாள் கொண்டாட்டம் பற்றி சூர்யா

ஃபகத் ஃபாசில் நடித்திருக்கும் ஃபேண்டஸி திரைப்படமான 'டோண்ட் டிரபிள் தி டிரபிள்' படம் அக்டோபர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தெலுங்கு - மலையாளம் என இருமொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. இந்தப் ... மேலும் பார்க்க

"சென்னையில்தான் சினிமாமீது காதல் கொண்டேன்; இங்கு எனக்கு பிடித்த உணவு..!"- ராஜமௌலி ஷேரிங்ஸ்

ஃபகத் ஃபாசில் நடித்திருக்கும் ஃபேண்டஸி திரைப்படமான 'டோண்ட் டிரபிள் தி டிரபிள்' படம் அக்டோபர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தெலுங்கு, மலையாளம் என இருமொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. இந்தப் ப... மேலும் பார்க்க

"ஜூனியர் ஆர்டிஸ்ட்களுக்கு ஒரு வாரத்திற்குள் ஊதியம்" - நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 70-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நடிகர் சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். மேலும், இந்தக் கூட்டத்தில் சில தீர்மானங்களும் நிறைவே... மேலும் பார்க்க